Friday 12 September 2014

இன்சூரன்ஸ் ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் . . .

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து ஆயுள்காப்பீட்டுக்கழக ஊழியர்கள் திண்டுக்கல் மற்றும் திருவில்லிபுத்தூரில் ஆகிய நகரங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினர். அதில் சுடர் கலைக் குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தும் சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து திண்டுக்கல், திருவில்லிபுத் தூரில் இன்சூரன்ஸ் ஊழி யர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினர்வியாழனன்று மாலை  திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற   இந்த இயக்கதிற்கு மதுரை மண் டல பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மண்டலத் தலைவர் இரா.இராஜேந்திரன் தலைமை வகித்தார். .AIIEA  பொதுச் செயலாளர் எம்.புஷ்ப ராஜன் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முபாரக் அலிஎல்ஐசி ஊழியர் சங்க நிர்வாகிகள் பரத், தங்கவேல், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத் தலைவர் முரளீதரன், மாவட்டப் பொருளாளர் கௌதமன், திண்டுக்கல் கிளைச்செயலா ளர் ஆர்..எல். பிரபாகரன், பழனி நகர் செயலாளர் ஆர்.எம்.ராஜசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் பி.எஸ்.பெரிய சாமி நன்றி கூறினார். திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூரில் ஸ்டேட்வங்கி முன்பு இராஜரத்தி னம் தலைமையில் நடை பெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை கிளை மேலாளர் பிரேம்சந்திரன் துவக்கி வைத்தார். சகோதரஅமைப்புகளின் நிர்வாகி கள் கோரிக்கைகளை ஆத ரித்துப் பேசினர். பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இயக்கத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குருசாமி, சட்டமன்ற உறுப்பினர் பொன் னுப்பாண்டியன், கோட்ட துணைத் தலைவர் வாஞ்சிநாதன் மற்றும் சகோதர அமைப்புகளின் நிர்வாகி கள் கோரிக்கைகளை ஆத ரித்துப் பேசினர்.வத்திராயிருப்பில் கோட்ட இணைச் செய லாளர் மகாலிங்கம் தலை மையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கோட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் மற்றும்சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள் பேசினர். சுடர், தியாகி சந்துரு கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

No comments: