Wednesday 3 September 2014

எழுத்தாளர் "பாலகுமாரன்" அவர்கள்.BSNL பற்றிய கருத்து...

எனது பக்கத்து வீட்டுக்காரர், வீட்டில் எல்லோரும் செல்போன் வைத்து இருக்கிறோம். இனிமேல் இந்த “LAND LINE” போன் தேவை இல்லை என்று 6 மாதத்திற்கு முன் தனது தரை வழி தொலை பேசியை வேண்டாம் என்று துண்டித்து விட்டார்.தற்சமயம் அவருடைய மகனும் மகளும் காலேஜ் படித்து விட்டு வீட்டில் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பிற வேலைகளுக்கு "ஆன்லைன்" இல்லாமல் சிரமமாய் இருக்கிறது என்று மீண்டும் ப்ராட்பாண்ட் இணைப்புக்காக முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு கேபிள் இல்லை என்பதனால் தரைவழி ப்ராட்பாண்ட் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அடிக்கடி நெட் சென்டர்க்கு சென்று ஆன்லைன் வேலைகளை செய்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சலும் நேரமும் அதிகமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.இன்று உலகமே சுருங்கி விட்ட நிலையில் எல்லாமே ஆன்லைன் தான். கல்வி, வேலை வாய்ப்பு, பேங்க் வரவு செலவு, பஸ், ரயில், பிளைன் டிக்கெட் புக் செய்வது, ரேஷன் கார்டு, வருமான சான்று, சாதி சான்று, இருப்பிட சான்று வாங்குவது, பாஸ்போர்ட் அப்ளை பண்ணுவது, பான் கார்டு பெறுவது, மின்சாரம், தொலைபேசி பில்கள் கட்டுவது, இன்னும் பலப் பல வேலைகளுக்கு "ஆன்லைன்" இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.ஆன்லைன் வேலைகளுக்கு தரை வழி தொலைபேசி மிகவும் முக்கியம். காரணம் அதன் மூலம் கிடைக்கும் ப்ராட்பாண்ட் வேகம் மிகவும் அதிகம். பாதுகாப்பானதும் கூட. எனவே, நம்மிடம் ஒன்றுக்கு நான்கு செல்போன் இருக்கிறதே, இந்த தரை வழி தொலைபேசி இனி தேவை இல்லையே என்று உடனே அதை துண்டித்து விடாதீர்கள். ஏனென்றால் இன்றைய தினம் "தங்கம்" கூட எளிதில் கிடைத்து விடும். ஆனால் "தரை வழி தொலைபேசி" இணைப்பு கிடைப்பது "குதிரைக் கொம்பு" தான்.
எனவே, நம்மிடம் உள்ள "தரை வழி தொலைபேசி" இணைப்பை எக்காரணம் கொண்டும் துண்டித்து விடாதீர்கள். நம் பிள்ளைகளுக்கு நெட் வொர்க் தேவை எனில், நாம் எந்த சிரமமும் இன்றி நம்மிடம் உள்ள தரைவழி தொலைபேசி மூலமாக புதிய "ப்ராட்பாண்ட்" இணைப்பை உடனே பெற்று விடலாம். கையில் உள்ளவெண்ணையைக் கொடுத்து விட்டு பின்பு நெய்க்குஅலைய வேண்டாம்.எதற்கும் ஒரு தரை வழி தொலைபேசி இணைப்பை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.எனவே உங்களிடம் உள்ள "தரை வழி தொலைபேசி" இணைப்பை எக்காரணம் கொண்டும் அவசரப்பட்டு துண்டித்து விட வேண்டாம்.நெட்வொர்க்குக்கு ப்ராட்பாண்ட் தான் சிறந்தது.ப்ராட்பாண்ட்க்கு தரைவழி தொலைபேசிதான் மிகச்சிறந்தது.
தரைவழிதொலைபேசிக்கு - B.S.N.L தான் மிக மிகச் சிறந்தது.

No comments: