Saturday, 13 September 2014

பொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன்...தயாராகிறது விருந்து.

இது தனியார்களுக்கு அறுவடைக் காலம். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கான ஏற்பாடுகள் ஜோராக அரங்கேறி வருகின்றன. ஓஎன்ஜிசி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம்), இந்திய நிலக்கரிக் கழகம், தேசிய புனல் மின் கழகம் ஆகியவற்றின் பங்கு விற்பனை மூலம் 45,000 கோடி ரூபாய் திரட்டப்படுமென அரசு எதிர்பார்க்கிறது.ஓஎன்ஜிசி யின் பங்குகள் நல்ல விலைக்கு போகுமென்றுப்ளூம்பெர்க்நிறுவன ஆய்வின்படி 48 நிபுணர்களில் 38 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம் மானியங்கள் குறைக்கப்படுமென்ற எதிர்பார்ப்புதானாம். பொதுத்துறை பங்கு விற்பனையும், சமூக நோக்கும் ஒன்றுக்கொன்று முரணானது என்பது தெளிவாகிறதா?தேசிய புனல் மின் கழகத்தின் பங்கு விற்பனை அவ்வளவு வெற்றியைத் தராது என்ப்ளூம்பெர்க்ஆய்வு தெரிவிக்கிறது. 25 நிபுணர்களில் 9 பேரே பங்கு விற்பனை வெற்றி பெறுமென கூறியுள்ளார்களாம். காரணம் 2013-14ல் நிகர இலாபத்தில் 53 சதம் சரிவாம்.இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனை நன்றாக இருக்குமென 45 நிபுணர்களில் 29 பேர் தெரிவித்துள்ளனர்.‘ப்ளூம்பெர்க்ஆய்வுகளெல்லாம் நாட்டுக்கு நன்றாக இருக்குமா? மக்களுக்கு நன்றாக இருக்குமா? என்று ஆராய்ச்சி செய்வதில்லை என்பது தனிக்கதை.
திணறுகிற டி.எல்.எப்.டிஎல்எப் (DLF)என்றால் எல்லோருக்கும் உயர உயரமான கட்டிடங்களே நினைவுக்கு வரும். கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரும் கட்டுமான நிறுவனங்களெல்லாம் இலாபத்தை குவித்துள்ள நிலையில் டி.எல்.எப் நிறுவனமோ சரிவையே சந்தித்திருக்கிறது.2008ல் ரூ.1000க்கு விற்ற டிஎல்எப் நிறுவனத்தின் பங்குகள் தற்போது வெறும் ரூ.175க்கே விற்கிறது. இந்நிறுவனம் நிறைய முதலீடுகள் தேவைப்படுகிற துறைகளிலெல்லாம்ஓவராகவேமூக்கை நுழைத்ததே காரணம் என்கிறார்கள்.2007ல் முதன்மை பங்கு விற்பனை (.பி.) மூலம் ரூ.9000 கோடிகளை குவித்த டிஎல்எப் 1000 கோடி ரூபாய்களை மின்சாரம் மற்றும் காற்றாலைத் தொழில்களில் போட்டது. 2400 கோடி ரூபாய்களை சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட அமான் ரிசார்ட்ஸில் முதலீடு செய்தது. பெங்களூரில் ஓர் டவுன்ஷிப் திட்டத்திற்கு பிடாடி எனும் இடத்தில் ரூ.400 கோடி முதலீடுகளைப் போட்டது. ஆனால் 2009ல் டவுன்ஷிப் திட்டத்தை விட்டு வெளியேறியது. காற்றாலைகளுக்கும் குட்பை. ரிசார்ட்டையும் விற்றுவிட்டார்கள். 2008ல் ரூ.14,433 கோடி விற்பனையும், ரூ.7,487 கோடி இலாபத்தோடும் இருந்த டி.எல்.எப் இன்று ரூ.8,298 கோடி விற்பனை, ரூ.582 கோடி இலாபம் என்ற அளவிற்கு சரிந்துள்ளது. 2008ல் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.உலக வங்கி எளிதாய்த் தொழில் நடத்துவதற்கான குறியீடு - 2014 அளவுகோல் 189 பொருளாதாரங்களில் இந்தியாவின் ரேங்க்தொழில் துவங்குதல் 179கட்டுமான அனுமதி 182மின்சாரம் கிடைத்தல் 111சொத்துக்களைப் பதிவு செய்தல் 92கடன் 28முதலீட்டாளர் பாதுகாப்பு 34வரி கட்டுதல் 158வெளிநாட்டு வணிகம் 132ஒப்பந்தங்களை அமலாக்குதல் 186திவால் பிரச்சனைகளுக்கு தீர்வு 121உலக வங்கி இப்படி அழுவதற்குக் காரணம் உண்மையில் இப்பிரச்சனைகள் இருப்பது மட்டுமல்ல. வோடாபோன் போன்ற நிறுவனங்களுக்கு 11,200 கோடி வரிஏய்ப்பு நெருக்கடி இருப்பதுமாகும். வோடாபோன் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாகி மார்ட்டன் பியட்டர்ஸ் இந்தியாவில் தொழில் பண்ணுவதே சிரமமென புலம்பியுள்ளார். புள்ளி விவரங்கள் பொய்யாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை வெளியிடப்படுகிற நோக்கங்களில் பல பொய்கள் பொதிந்திருக்கலாம்.
கழுத்துக்குப் பக்கத்தில் கத்திஇந்தியாவின் அரிசி மானியம் உலக வர்த்தக அமைப்பு விதித்துள்ள வரம்புகளுக்கு மிக நெருக்கமாய் வந்து விட்டதாம். அரிசி மானியம் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13,700 கோடிகளைத் தொட்டுள்ளது. இது இந்திய அரிசி உற்பத்தியில் 7 சதவீதம் ஆகும். உலக வர்த்தக அமைப்பின் வரம்புகளின்படி 10 சதவீதத்திற்கு மேல் போக முடியாது.அரிசி மானியத்தை இப்படியே தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. ஏதாவது நிரந்தரத் தீர்வுகாணப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் பலர் அலாரம் அடித்துள்ளனர்.

No comments: