Sunday 5 April 2015

ஒரு GP, 3G சேவை ரூ.68 க்கு கிடைக்கும்: BSNL அறிவிப்பு...

ரூ.68 செலுத்தி ஒரு ஜிபி 3ஜி இணையதள பெறலாம் என்று நமது BSNL தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக BSNLலின் சென்னை தொலைத்தொடர்பு வட்டம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசு நிறுவனமான BSNL 3ஜி டேட்டா STV எனப்படும் சிறப்பு விலை கட்டண சேவையை பிரபலப்படுத்த குறைந்த விலையில் 3 ஜி சேவைகளை வழங்க முடிவெடுத்துள்ளது. இதன்படி ஒரு ஜிபி 3ஜி சேவையை ரூ 68 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன் செல்லுபடி காலம் 10 நாட்கள் ஆகும்.
டேட்டா STV புதிய சலுகையை ஏற்கனவே இருக்கக்கூடிய 1 ஜிபி சிறப்பு கட்டண சேவையிலும் பயன்படுத்தலாம். இதற்கு ரோமிங் கட்டணம் கிடையாது. இந்த ஆரம்ப கால சலுகை ஏப்ரல் 1 முதல் 60 நாட்களுக்கு பயன்பாட்டில் இருக்கும்.இது தொடர்பாக BSNL நிறுவனத்தின் இயக்குனர் என்.கே.குப்தா கூறும்போது, “புதிதாக அறிமுகப்படுத் தப்பட்டுள்ள டேட்டா STV சலுகை கைபேசி மூலம் இணையத்தை பயன்படுத்துவதை குறைந்த விலையில் சாத்தியமாக்கும். ரோமிங் கட்டணமில்லாமல் இணையச்சேவை வழங்கும் அளவுக்கு மிகப்பெரிய அளவிலான 3ஜி கட்டமைப்பு BSNL நிறுவனத்திடம் உள்ளதுஎன்றார்.

No comments: