Wednesday 12 November 2014

வங்கி ஊழியர்கள் இன்று 12.11.14 வேலைநிறுத்தம்...

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் புதனன்று வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர். தமிழகத்தில் 65 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி நவம்பர் 12ம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தம் முழுமையாக நடைபெறும் என்றும்,இதில் 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.13 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும், அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படவில்லை. திங்களன்று புதுதில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.இந்நிலையில் திட்டமிட்டப்படி ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் டிசம்பர் 2ம்தேதி முதல் 3 நாட்கள் மாநிலவாரியாக வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் அப்படியும் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றும் சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.இந்த வேலைநிறுத்தம் காரணமாக வங்கிச் சேவை புதனன்று முற்றாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நாடுமுழுவதும்வங்கிஊழியர்வேலைநிறுத்தம்ஆர்ப்பாட்டம்நடைபெறவுள்ளது.  போரட்டம்...வெல்லட்டும்....கோரிக்கைகள்....திருப்திகரமான தீர்வினை...எட்டட்டும்  என வாழ்த்துகிறோம்...

No comments: