Friday 28 November 2014

27.11.14 நமது வேலை நிறுத்தம் குறித்து பத்திரிக்கைகளில்...

அன்பிற்கினியவர்களே ! 27.11.14 நமது வேலை நிறுத்தம் குறித்து பத்திரிக்கைகளில் . . . 
2 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சென்னை, நவ. 27-பிஎஸ்என்எல் நிறுவனத்தை படிப்படியாக ஒழித்துக்கட்ட முனைந்துள்ள மத்திய பாஜக அரசின் கொள்கைகளைக் கண்டித்தும் ஊழியர்களின் பிரச்சனைகள் உட்பட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். தமிழகத்தில் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்கள் சுமார்15 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அனைத்து பகுதிகளிலும் பிஎஸ்என்எல் அலுவலகங்களில் பணிகள் ஸ்தம்பித்தன. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழுவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பா மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாநில பொதுச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையேற் றனர்.
மத்திய அரசு, பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைக்கும் தனது கொள்கைகளை கைவிடாவிட் டால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என தலைவர்கள் எச்சரித்துள்ளனர்...சென்னை தீக்கதிர் 
பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் மதுரை தொலைத்தொடர்பு மாவட்டத்தில் வாடிக்கையாளர் மையங்கள் வெறிச்சோடின
நவ.27-பிஎஸ்என்எல் ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரை தொலைத்தொடர்பு மாவட்டத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தால் வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் உள்ளதாகக் கூறி, நிர்வாகம் ஊழியர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக குறைந்தபட்ச போனசை வழங்க மறுத்துவிட்டது. மருத்துவ அலவன்ஸ், எல்.டி.சி.வசதிகளையும் நிறுத்திவிட்டது. கிராமப்புற தொலைபேசி சேவையை அளிப்பதற்கு பிஎஸ்என்எல்- க்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடி செலவாகிறது. இதனை ஈடுகட்ட ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடியை 2005-ஆம் ஆண்டு வரை மத்திய அரசு அளித்து வந்தது. அதை தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.தரைவழி தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் மொபைல் தொலைபேசி சேவைகளை விஸ்தரிக்கவும் பராமரிக்கவும் தேவையான உபகரணங்களை வழங்காமலும், நிதிஉதவி அளிக்காமலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.மேலும், நான்காம்பிரிவு ஊழியர்களின் சம்பளம்தேக்கம், கருணை அடிப்படையில் வேலை, எஸ்.எஸ்டி ஊழியர்களுக்கு சலுகைகள், பதவி உயர்வு, புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு சம்பள முரண்பாடு, பழைய ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவ. 27-ஆம் தேதி பிஎஸ்என்எல் போராட்டக்குழு சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய தொலைத்தொடர்பு மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 1229 ஊழியர்கள் பங்கேற்றனர்.இப் போராட்டத்தால் வாடிக்கையாளர் சேவைமையம் வெறிச்சோடிக்கிடந்தது. மதுரை தொலைத்தொடர்பு மாவட்டத்தில் உள்ள 162 எக்சேஞ்ச்சுகளில் 134 பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதன் காரணமாக தொலைபேசி சேவை முழுவதும் ஸ்தம்பித்தது.---மதுரை தீக்கதிர்  
பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, வாடிக்கையாளர் சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஓய்வுபெறும் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆள்கள் நியமனம் செய்ய வேண்டும். பிஎப், இஎஸ்ஐ போன்ற சமூக நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனால் பல இடங்களில் வாடிக்கையாளர் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சூரியன் கூறியது:
10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிதாக ஆள்கள் நியமனம் செய்யப்படவில்லை. கூட்டமைப்பு சார்பில் அரசின் கவனத்துக்கு கோரிக்கைகள் எடுத்துச் செல்லப்பட்டபோதும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
கூட்டமைப்பின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், பிப்ரவரியில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குத் திட்டமிட்டுள் ளோம் என்றார்.---தினமணி 

---  தினமலர் 
அருமைத் தோழர்களே ! 27.11.2014 வேலைநிறுத்தம் ... தமிழகத்தில் 75%சதமான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். என்று நமது மாநில மையத்தின் தகவல் கூறுகிறது .
நமது BSNL-லில் உள்ள  C&D ஊழியர்களின் கோரிக்கைக் காக நடைபெற்ற 27.11.14 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத் தில் பங்கேற்று வர்க்க கடமை ஆற்றியுள்ள,வெற்றி கரமாக்கிய அனைத்து தோழர்களுக்கும் JAC போராட்டக்குழு சார்பாக நமது உளபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..
---என்றும்தோழமையுடன், எஸ்.சூரியன் ...D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வெற்றி கிடைக்கட்டும்
கோரிக்கைகள் வெல்லட்டும்