Sunday 30 November 2014

மத்தியரசு பொதுத்துறை சீரழிப்பை கண்டித்து- டிச.5 மதுரையில் ஆர்ப்பாட்டம்.

அருமைத் தோழர்களே ! செப்டம்பர் மாதம் ஏற்கனவே,டெல்லியில் மத்திய சங்கங்கள் கூடி எடுத்த முடிவின் அடிப்படையில் இந்திய நாட்டு மக்களுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு விற்கத்துடிக்கும் மத்திய ஆட்சியாளர்களைக் கண்டித்து, டிசம்பர் 5-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் இதற்கான அறைகூவல் விடுக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை, மதுரையில்  வெற்றிகரமாக நடத்துவது குறித்து, CITU அலுவலகத்தில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.CITU, BMS, INTUC, AITUC, HMS, AICCTUC, LPF ஆகிய தொழிற்சங்க அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொலை தொடர்புத்துறை, இன்சூரன்ஸ், பாதுகாப்புத்துறை உள்ளிட்டவை களை, தனியாருக்கு தாரை வார்ப்பதுடன், தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மாநில அரசு தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் டிசம்பர் 5-ம் தேதி, மதுரை  குட்செட் தெரு, தலைமை தபால் நிலையம் அருகில்  அனைத்து சங்கங்களின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்  HMS தலைவர் ஆர்.கேசவன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் பெருந்திரளாக கலந்து கொள்ளவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.CITU மாவட்டசெயலர் தோழர்.தெய்வராஜ் முன்னிலை வகுப்பார், CITU மாநிலச் செயலர் தோழர்.ஆர்.கருமலையான்  சிறப்புரை நிகழ்த்துவார். AITUC  மாநில நிர்வாகி எம். நந்தாசிங் , INTUC - K.S.G. குமார், LPF- KRC.அல்போன்ஸ் ராஜா மத்திய சங்க நிர்வாகிகளும்,  பொதுத்துறை   நிறுவனங்கள்,  வங்கிகள் மற்றும் தொலை தொடர்புத்துறை , இன்சூரன்ஸ்,  பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைவரும்  நடைபெற உள்ள பெருந்திரள் ஆர்ப்பாட்ட  கூட்டத்தில்  திரளாக கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நமது BSNLEU & TNTCWU தோழர்கள் அனைவரும் தவறாமல் 05.12.2014 வெள்ளிக் கிழமைமாலை 5 மணிக்கு,மதுரை குட்ஜெட் தெரு, தலைமை தபால் நிலையம் அருகே நடைபெறும்ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொள்ளவேண்டுமாய்அன்போடு அழைக்கின்றோம். --என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.

No comments: