Thursday 27 November 2014

27.11.2014 வேலை நிறுத்தம் - மதுரை மாவட்டம் ஒரு பார்வை . . .

27.11.2014 இன்று  இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற  ஒரு நாள் அடையாள வேலைநிறுத்ததில், நமது மதுரை மாவட்டத்தில் உள்ள மொத்த Non-Executive ஊழியர்கள் 1329, பேரில்  491  பேர் நேரடியாக  வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்  முதற்கண் அவர்கள் அனைவருக்கும் நமது  வாழ்த்துக்களும்,  நன்றியும்  உரித்தாகட்டும்.!
704 பேர்  மருத்துவ விடுப்பில் சென்றுள்ளனர். 134 பேர்  பணிக்கு வந்தனர். வேலைநிறுத்ததில் கலந்து கொள்ளாத சங்கங்கள் / அமைப்புகளை சார்ந்த உறுப்பினர்களை விலக்கி விட்டு பார்த்தாலும் கூட,   வேலைநிறுத்தத்தின் போது  மருத்துவ விடுப்பில்  செல்வதும்,  பணிக்கு  வருவதும் அதிகரித்து வருகிறது.
கோரிக்கையை  நிர்வாகம் ஏற்கப்போவதில்லை என்பது  தெரிந்த பின்னர் வேலை நிறுத்தம் செய்து ஒரு நாள் ஊதியத்தை இழப்பானேன்எனபதும், “BSNL இருக்கும் நிலையில் எப்படி பணம் சம்பந்தமான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்என்பதும், “இதுவரை நடந்த ஒவ்வொரு வேலைநிறுத்தத்தினாலும் கிடைத்த லாபம் என்ன  “ என்பதும்  பெரும்பாலும்  ( சங்க நிர்வாகிகள் இல்லாத போது )  முன் வைக்கப்படும்  வாதங்களாகும்எந்த ஒரு நிர்வாகமும் கேட்காமல் எதையும் தந்ததில்லை என்பதையும், எந்த ஒரு பெரிய கோரிக்கையும் போராடாமல் நிறைவேற்றப்பட்டதில்லை என்பதையும்  வசதியாக மறந்துவிட்டு முன்  வைக்கப்படும் தவறான  வாதங்கள் இவையாகும். பதவி உயர்வுகள், கேடர் சீரமைப்பு, ஊதியமாற்றம், 78.2 சத கிராக்கிப்படி, 3சத ஆண்டு உயர்வு தொகை, இவை எல்லாம்  போராடி பெற்றவையே. 78.2 சத ஊதிய இணைப்பால் மாதா மாதம் கூடுதலாக கிடைக்கும் அடிப்படை சம்பளம் மட்டுமே ஒரு நாள் ஊதியத்தை விட சற்று அதிகம்.  சில  ஊழியர்கள் சொல்லும் லாப நஷ்ட கணக்கு பார்த்தால் கூட  ஜூன் 2013 -ல் இருந்து  இன்று வரை  18 நாள் வேலை நிறுத்தம்  செய்திருந்தாலும்  ஊழியருக்கு  நஷ்டம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை மில்லை
வேலைநிறுத்தத்தால்  ஏற்படும்  ஒவ்வொரு நாள் ஊதிய இழப்புக்கும் மேட்சிங் லாபம் எதிர்பார்ப்பது மிகவும் ஆபத்தான போக்கு  என்பதை சம்மந்தப்பட்ட அனைவரும் உணர்வது  மிகவும்  நல்லது, இன்றைய சூழலில் அவசியமானதும் ஆகும்இழந்த  போனஸ் - LTC,, மெடிக்கல் அலவன்ஸ்   மீட்க , நமது  ஊதியத்தை - கிடைக்கும் சலுகைகளை காக்க, பணி மாற்றல்கள்பணியிட மாற்றல்களை தடுக்க மேலும் பல போராட்டங்களை நாம் சந்திக்க வேண்டிய  கட்டாயத்தில் உள்ளோம்.அனைவரும்  போராடியாக  வேண்டும் என்பதை  போராட்டங்களில் கலந்து கொள்ளாதோர் கருத்தில் கொள்வது அவர்களுக்கு மட்டுமின்றி,சக தொழிலாளிக்கும் நல்லது என்ற புரிதல் தேவை.
இன்று விடுப்பில் சென்ற தோழர் - தோழியர்களும், பணியில் இருந்த தோழர்தோழியர்களும் அடுத்து வரும் போராட்டங்களிலாவது கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு, மீண்டும்  ஒருமுறை  வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டோர்க்கு   நன்றியும் , வாழ்த்துக்களையும் மதுரை மாவட்ட JAC  சார்பாகவும்,  BSNLEU மதுரை  மாவட்ட சங்கம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.…. 
முதல் முறையாக மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில்
 ஒருவர் கூட பனி செய்யவில்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றோம் 
திண்டுக்கல் ரெவன்யு மாவட்டத் தோழர்களின் சிறப்பான 
முயற்சிக்கு மாவட்ட சங்கத்தின் சபாஷ் !
கிட்டத்தட்ட தேனி ரெவன்யு மாவட்டத் தோழர்களும்
 இணையான முயற்சியை எடுத்தமைக்கு பாராட்டு...  
ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் தங்களை முழுமையாக இணைத்துள்ளனர்  என்பது மிக முக்கிய அம்சம்.
-- என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன்,D/S-BSNLEU.

1 comment:

Ganesan , Dist vice President , Palani said...

தோழர் !
பழனியில் நமது சங்கத்தைச் சேர்ந்த மூன்று தோழர்கள் தவிர ..ஒப்பந்த ஊழியர்கள் உள்பட அனைவரும் முழுமையாக கலந்து கொண்டார்கள் !

தோழமைச் சங்க உறுப்பினர்கள் வழக்கம் போல் விடுப்பு !

வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஒருவர் கூட பணிக்கு வரவில்லை !

முழுமையாக் மூடப்பட்ட நிலை !....

கணேசன் , மாவட்ட துணை தலைவர் .
1184