Tuesday 18 November 2014

நவம்பர் - 18 வ.உ.சி. நினைவு நாள் . . .

..சி என்று அழைக்கப்படும் கப்பலோட்டிய தமிழன் . . . (1872-1936)
..சி என்று அழைக்கப்படும்வ..சிதம்பரனார் 1872ஆம் ஆண்டுசெப்டம்பர்த் திங்கள்
 5ஆம் நாள்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் பிறந்தார்.
இளம் வயதிலேயே சுதந்திரப்போராட்டத்தில் ஆர்வமாக ஈடுபட்டார்.1906ஆம் ஆண்டு
 வங்கச் சுதேசிஇயக்கத்தை வலுப்படுத்த வேண்டி,சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றைத்
தொடங்கினார்மதுரையில் ஐந்தாம்சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவர் ஒரு 
லட்சம் ரூபாயை இவர் தொடங்கியசுதேசிக் கப்பல் கம்பெனியில் முதலீடு செய்தார்
ஆங்கிலேயரின் கப்பல் வாணிகத்தைஎதிர்த்துஇவர் கப்பல் வாங்கி அதைத்
 தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையேஓட விட்டார்இதனால் இவர்
 கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார்.ஆங்கிலேயர் இவர்
 ஓட்டிய கப்பலைப் பறிமுதல் செய்தனர்.
1907 ஆம் ஆண்டு நடந்த சூரத் மாநாட்டில் அஞ்சா நெஞ்சர் என்று கூறப்படும்திலகர் 
பெருமானுக்கு உறுதுணையாக ..சிவிளங்கினார். 1908 ஆம் ஆண்டில்இவர் கைது
 செய்யப்பட்டு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்பின்னர்இத்தண்டனை 
ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதுசிறையில் செக்கிழுத்தார்;கல்லுடைத்தார்
இதனால் இவர் செக்கிழுத்த செம்மல் எனப் போற்றப்பட்டார்.1936ஆம் ஆண்டு
 நவம்பர்த் திங்கள் 18ஆம் நாள் தூத்துக்குடியில் மறைந்தார்.
காலவரிசை
1872: செப்டம்பர் 5 ம் தேதி பிறந்தார்.
1895: வள்ளியம்மையை மணமுடித்தார்.
1901: அவரது மனைவி நோயால் இறந்தார்.
1905: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.
1906: நவம்பர் 12ஆம் தேதி அன்று தனது சொந்த கப்பல் நிறுவனமான
           சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத்துவக்கினார்.
1908: மார்ச் 1 அன்று ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
1908: ஜூலை 9ம் தேதி கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
1911: அவரது கப்பல் கம்பெனியானசுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிகலைந்தது.
1912: டிசம்பர் 12 ஆம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியிடப்பட்டார்.
1920: கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமர்வில் ஆயத்தமானார்.
1936: நவம்பர் 18ஆம் தேதி அன்று இறந்தார் 
---வ.உ.சி . நினைவை போற்றுவோம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

செக்கிழுத்தச் செம்மலின் நினைவினைப் போற்றுவோம்