Wednesday 26 November 2014

சம்பள உயர்வு கோரி 4 லட்ச ஊழியர் வேலைநிறுத்தம்.

இங்கிலாந்தில் சம்பள உயர்வு கோரி 4 லட்சம் சுகாதார ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம் செய்தனர்.இங்கிலாந்து முழுவதும் சுகாதாரதுறையில் 4 லட்சம் ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இவர்கள் 1 சதவிதம் சம்பள உயர்வு வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அரசு 1 சதவிகித சம்பள உயர்வை கூட அளிக்க மறுத்து வருகிறது.இதனால் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி இங்கிலாந்து முழுவதும் சுகாதாரத்துறை ஊழியர்கள் 4 லட்சம் பேர் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் 4 மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தனர்.
அயர்லாந்தில் காலை 8 மணிக்கு வேலைநிறுத்தம் தொடங்கியது. இது சுகாதார ஊழியர்களின் 2-வது வேலைநிறுத்தம் ஆகும். கடந்த அக்டோபர் மாதம் சம்பள உயர்வு கோரி சுகாதார ஊழியர்கள் முதல் முறையாக வேலைநிறுத்தம் செய்தனர்.இதையடுத்து 6 நாட்கள் விதிப்படி வேலை செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் அதிக நேரம் வேலை செய்ய சம்பளம் கேட்பது அல்லது அதிக நேரம் பணி செய்ய மறுப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.

No comments: