Wednesday 19 November 2014

தொழிலாளர் நலச்சட்டங்களை தன்னிச்சையாக திருத்துவதா?

மத்திய தொழிற்சங்கங்களின் மாநில கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்க மாநில சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் செவ்வாயன்று (நவ.18) நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு. ஜி.பி.சரவணபவன் (பி.எம்.எஸ்.), ஆர். ஆதிகேசவன்(.என்.டி.யூ.சி), வி.ராமச்சந்திரன் (..டி.யு.சி), மு.சுப்பிரமணியன் (எச்.எம்.எஸ்.), எஸ்.எஸ்.சுப்பிரமணியன் (சி..டி.யு), எஸ்.கணேசன் (..டி.யு.யு.சி), கே.கோவிந்தராஜ் (..சி.சி.டி.யு), மு.சண்முகம் (தொ.மு.), ஆகியோர் தலைமை வகித்தனர்.சி..டி.யு மாநில தலைவர் .சவுந்தரராசன் எம்.எல்., ..டி.யு.சி. மாநில தலைவர் கே.சுப்பராயன், தொமுச செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி, ..சி.சி.டி.யு மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன், பி.எம்.எஸ். மாநில துணைத்தலைவர் ஆர்.முரளிகிருஷ்ணன், .என்.டி.யு.சி மாநில நிர்வாகி ஆர்.பி.கே.முருகேசன், எச்.எம்.எஸ். மாநில நிர்வாகி மு.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.தொழிலாளர் நலச்சட்டங் களை மத்திய- மாநில அரசுகள் தன்னிச்சையாக திருத்திட முயற்சி மேற்கொண்டிருப்பதற்கு இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், ஏற்கனவே உள்ளவேலைவாய்ப்புகளை பாதுகாக்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புக்கு வகைசெய்யும் தேசிய பாதுகாப்பு நிதியத்தை உருவாக்க வேண்டும், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க கூடாது, குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரத்தை நிர்ணயிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை கொண்டுவர வேண்டும், நிரந்தர பணியில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும், போக்குவரத்து, பஞ்சாலை, சிமெண்ட் உள்ளிட்ட துறைகளில் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைகளை உடனே துவக்க வேண்டும், முத்தரப்பு குழுக்களை முழுமையாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

No comments: