Tuesday 4 November 2014

உயிரைக் கொடுத்து - 60 பேர் உயிர் காத்த ஓட்டுனர் . . .

கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரியில் இருந்து கூடலூருக்கு அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர், தனக்கு ஏற்பட்ட மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் வாகனத்தை நிறுத்தி, 60-க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றியுள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (48), கேரளா அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு சுல்தான் பத்தேரியில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை என்ற பகுதியில் அப்துல் ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரைக் கண்ட சில பயணிகள் சத்தமிட்டுள்ளனர். இருப்பினும் தனது கட்டுப்பாட்டில் இருந்து வாகனம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, சாலையோர தடுப்பில் மோதி நிறுத்தியுள்ளார்.பேருந்து நின்றதும், பயணி கள் அப்துல் ரகுமானை நெலாக் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து ஓட்டுநரின் உடல், சுல்தான் பத்தேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.காலை நேரம் என்பதால் பேருந்தில் 60-க்கும் மேற் பட்ட பயணிகள் இருந்தனர். சிறிது முன்னதாக பேருந்து சென்றிருந்தால், சாலையோ ரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்திருக்கும். 
தனது கடைசி நேரத்திலும் பயணிகள் பாதுகாப்பு கருதி பேருந்தை நிறுத்தியதால், நாங்கள் அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினோம் என பயணிகள் தெரிவித்தனர்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அப்துல் ரகுமானின் செயல் போற்றுதலுக்கு உரியது
அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்