Saturday 15 November 2014

ஆகா . . . வென . . . எழுந்தது . . . தோழமை ஆதரவு...

அருமைத் தோழர்களே! 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்துவிட்டது, எங்களுக்கு வாக்களித்து  ஆட்சி கட்டிலில் அமர்த்தினால் நாங்கள் நாட்டு முன்னேற்றம் ஒன்றே கண்ணாய் கொண்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம். என மக்களிடம்  வாக்குறுதியை வழங்கி ஏமாற்றிய பா.ஜ.கா. ஆட்சி கட்டிலில் ஏறிய நாள் முதற்கொண்டு, ஏற்றிய  ஏணியை எட்டி உதைப்பது போல், ஒவ்வொரு நாளும் ஒன்றன்பின் ஒன்றாக  மக்கள் விரோத, ஊழியர் விரோத, தேச விரோத செயல்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. . . 
  • தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது.
  • பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது.
  • மக்களுக்கான மானியங்களை வெட்டுவது.
  • சீர்திருத்தம் என்றபெயரில் சீரழிவு செய்வது.
  • மத நல்லிணக்கத்திற்கு எதிராக மந்திரிகளே பேசுவது. 
  • அந்நிய கம்பெனிகளுக்கு கதவை அகல திறந்து விடுவது.
  • சமூக நலத்திட்டங்களை சாகடிப்பது.
  • ஆண்டிற்கு பலகோடி நிதியை நாட்டுநலத் திட்டங்களுக்கு வழங்கி வரும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதமாக உயர்த்துவது என்ற மத்திய மோடி அரசின் நாசகர கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்றதில் ஒருபகுதியாக மதுரையில்  மனித சங்கிலி (அல்ல ) எழும்பிய மனித சுவராக AIIEA சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவாக . . . 
ஆகா  . . . வென  . . . எழுந்தது  . . . தோழமை ஆதரவு... மதுரை "குரு தியேட்டர் முதல் - காளவாசல் வரை என்றுதான்  அறிவிக்கப்பட்டிருந்தது. கடல் சிறுத்ததோ  அல்லது பார் சிறுத்ததோ என போராட்ட மக்கள் ஆதரவு கூட்டம் அலை மோதியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவற்றில் சில கட்சிகள் உங்கள் பார்வைக்கு தந்துள்ளோம்....
நமது BSNLEU மாவட்டச் செயலர் எஸ்.சூரியன் தோழமை - வாழ்த்துரை 

மாவட்டத்தலைவர் சி.செல்வின் சத்தியராஜ் உள்ளிட்டவர்கள் மனித சங்கிலி 

AIIEA போராட்ட ஆதரவில் நமது BSNLEU+TNTCWU கிளைச் செயலர்கள் 

தோழமை ஆதரவு   போர் படையின் ஒரு பகுதி காட்சி 


மத்திய மோடி அரசு LICயில்  - FDIயை கைவிடக் கோரி R.அண்ணாதுரை MLAசிறப்புரை  

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நீண்டு தொடரும் மனிதச் சங்கிலி, ஒற்றுமை உணர்வினையும், வெற்றியின் வருகை வெகு தொலைவில் இல்லை என்பதையும் உணர்த்துகின்றது

An young Indian said...

Congrats.

PALANICHAMY said...

Congrats
PALANICHAMY