Wednesday 26 November 2014

தேனி ரெவன்யு மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுபயணம்..

அருமைத் தோழர்களே ! 25.11.2014 ஒருநாள் முழுவதும்  தேனி ரெவன்யு மாவட்டத்தில், மதுரை மாவட்ட JAC சார்பாக போராட்ட விளக்க கூட்டங்களை சூறாவளி சுற்றுபயணம் செய்து முடித்தோம்...
ஆண்டிபட்டியில் ஆரம்பித்த போராட்ட விளக்க கூட்டத்தில்JAC கன்வீனரும்,  BSNLEUசங்கத்தின் மாவட்டச் செயலருமான தோழர்.S.சூரியன், மாவட்ட துணைத் தலைவர் தோழர் T.K.சீனிவாசன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P.தேசிங்கு ஆகியயோர் ஆண்டிபட்டியில் உள்ள அனைத்து தோழர்களையும் சந்தித்து போராட்ட விளக்கங்களை எடுத்துக்கூறி, எல்லோரும் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டனர். அனைத்து தோழர்களும் ஆணித்தரமாக போராட்டத்தில் பங்கெடுப்போம் என்ற வாக்குறுதியை தந்தனர்.
அதன்பின் பெரியகுளத்தில் நடைபெற்ற போராட்ட விளக்க கூட்டத்திற்கு தோழர்.அழகர்சாமி தலைமைதாங்கினார். BSNLEUசங்கத்தின் தமிழ் மாநில அமைப்புச் செயலர் தோழர் P. சந்திர சேகர் போராட்டத்தின் நோக்கம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். அதற்கடுத்து நமது போராட்டத்தின் 30 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்கங்களையும், நியாயத்தையும் எடுத்து ரைத்து அனைவரும் இப் போராட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவேண்டுமென அறை கூவல் விடுத்தார். அவரை தொடர்ந்து தோழர்.S.சூரியன், நமது கோரிக்கைகளை தற்போது உள்ள மத்திய அரசும், நிர்வாகமும் எவ்வாறு அலச்சியப் படுத்துகிறது என்பதை சொல்லி, ஆகவே, நமது போராட்ட வீச்சை தீவிரபடுத்த வேண்டுமாய் கோரிக்கை விடுத்தார். தோழர்.சாமிதாஸ் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார். பெரியகுளம் தோழர்கள் நிச்சயம் போராட்டத்தில் முழுமையான வெற்றியை ஈட்டித்தருவோம் என உத்தர வாதம் அளித்தனர்.
அதற்கடுத்தாற்போன்று தேனி தொலைபேசியகத்தில் நடைபெற்ற போராட்ட விளக்க கூட்டத்தில் தோழர்.P.தேசிங்கு தலைமை தாங்கினார். NFTEசங்கத்தின் சார்பாக தோழர். கல்யாணி போராட்டத்தின் அவசியத்தை எடுத்துக் கூறியதோடு எதிர்வரும் 27.11.2014 ஒருநாள் வேலைநிறுத்தத்தை தேனி பகுதியில் வெற்றிகரமாக்குவோம் என எடுத்தியம்பினார். அடுத்து FNTO சங்கத்தின் மூத்த தோழர்.E.பற்குணன் அவர்கள் தனது உரையில் 2002-ல் ஏற்பட்டுள்ள அனாமலி இன்னும் தீர்க்கப்படாதது குறித்தும், வேண்டுமென்றே நிர்வாகம் இழுத்தடிப்பு செய்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து உரையாற்றினார். ஆகவே, அனைவரும் போராட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அதனை தொடர்ந்து ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட சங்க நிர்வாகி தோழர்.கண்ணன் தங்களது TNTCWU சங்கம் இப் போராட்டத்தில் இந்திய நாடு முழுமைக்கும் உணர்வுபூர்வமாக கலந்து கொள்கிறது என்பதை பதிவு செய்தார். அதன்பின்  தோழர்.S.சூரியன் நமது 30 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினார். 
அடுத்தபடியாக போடி தொலைபேசியகத்தில் நடைபெற்ற போராட்ட விளக்க கூட்டத்திற்கு FNTO சங்கத்தின், தோழர்.சிவா தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார். அடுத்தாற்போன்று தோழர் T.K.சீனிவாசன் கோரிக்கைபற்றி எடுத்துரைத்தார். அதற்கடுத்து   NFTEசங்கத்தின் சார்பாக தோழர்.நாகு தனது உரையில் போராட்டத்தின் அவசியத்தை எடுத்து சொல்லி அனைவரும் முழுமையாக பங்கேற்க வேண்டினார். அவரை தொடர்ந்து தோழர்.S.சூரியன், நமது நியாமான கோரிக்கைகளை தற்போது உள்ள மத்திய அரசும், நிர்வாகமும் எவ்வாறு அலச்சியப் படுத்துகிறது என்பதை சொல்லி, ஆகவே, நமது போராட்ட வீச்சை தீவிரபடுத்த வேண்டுமாய் கோரிக்கை விடுத்தார்.
இறுதியாக கம்பம் தொலைபேசியகத்தில் நடைபெற்ற போராட்ட விளக்க கூட்டத்திற்கு கூட்டு தலைமையாக தோழர்கள். ராஜன், ஜீவா பொறுப்பேற்றனர். கிளச்செயலர்கள் தோழர்கள், அன்புராஜா, பிச்சைமணி முன்னிலைவகுத்தனர். தோழர்கள் தோழர் P. சந்திரசேகர், தோழர் T.K.சீனிவாசன் ஆகியோர் போராட்டத்தின் அவசியம் குறித்து உரையாற்றினர். அதன் பின் தோழர்.S.சூரியன் நமது 30 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி, எதிர்வரும் 27.11.2014  அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை தேனி ரெவன்யு மாவட்டத் தோழர்கள் வெற்றிகரமாக100 சதம் போராட்டத்தை நடத்திக்காட்ட வேண்டுமென நிறைவுரை நிகழ்த்தினார்.  

No comments: