Tuesday 17 November 2015

குஜராத்: ஓராண்டில் சாலை விபத்துகளில் 7,857 பேர் பலி...

குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 7,857 பேர் பலியாகியிருப்பதாக தகவல் தெரிய வந்திருக்கிறது.குஜராத் மாநிலத்தில் உள்ள வஸ்தராபூர் நகரில் சாலை விபத்துகளில் இறந்தவர் களுக்கு அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் போக்குவரத்துக்குழுஆலோசனைக்குழு சார்பில் நடை பெற்றது. இதில் அகமதாபாத்போக்குவரத்துக்குழு ஆலோசனைக்குழு தலைவர் டாக்டர்பிரவீண் கனபார் பேசும்போது, குஜராத் மாநிலத்தில் தினசரிசாலை விபத்தில் 13 பலியாகி வருகிறார்கள். 40 பேர் காயம் அடைகிறார்கள். இதில் பாதி பேர் முழுவதும் அல்லது பாதி ஊன முற்றோராகி விடுகிறார்கள். சாலை விபத்துக்களில் 15 முதல்35 வயதுக்கு உட்பட்டோர் அதிகமாக சிக்குகிறார்கள். இதனால்இவர்கள் வருவாயை நம்பி இருக்கும் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். கடந்த மாதம் நவராத்திரி விழா அன்று சாலை விபத்தில் சிக்கி இறந்த பிஜால்ஷாவின் உறவினர் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, மக்கள் சாலை விதிகளை மதித்து நடந்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். தேசிய குற்றப் பதிவு ஆவணத்தின்படி குஜராத் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் 7857 பேர் பலியாகி விட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.....

No comments: