Sunday 1 November 2015

'செல்பி' மோடியால் பாரதிய ஜனதாவுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு!

கடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலின் போது 'மோடியுடன் செல்பி ' என்ற புதிய பாணியிலான தேர்தல் பிரச்சார யுக்தியை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்தது.ஆனால் 'மோடியுடன் செல்பி என்ற இந்த நவீன பிரச்சார யுக்தி டெல்லி சட்ட மன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடித்தது.இந்நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தல் கணக்குகளை பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. அதில்,  'மோடியுடன் செல்பி' என்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும் ஒரு கோடியே 6 லட்ச ரூபாய்  செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஏழு சுற்றுகளாக நடந்த இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல் சுற்றுக்காக மட்டும் 86 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கணக்கில் கூறப்பட்டுள்ளதுஇந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது டெல்லியின் பல்வேறு இடங்களில், பிரதமர் மோடியின்  படம் வைக்கப்பட்டது. அதனுடன் மக்கள் செல்பி எடுத்துக் கொள்ள வைப்பதுதான்  இந்த பிரச்சாரத் திட்டம். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காததால், தற்போதைய பிகார் தேர்தலில் 'மோடியுடன் செல்பி' பிரச்சாரத் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி கைவிட்டது.

No comments: