Monday 16 November 2015

மக்களின் பாக்கெட்டை ‘தூய்மைப்படுத்துவதா ?’ - சீத்தாராம் யெச்சூரி கேள்வி...





































தூய்மை இந்தியா திட்டத்திற்காக சேவை வரியை கூடுதலாக்கி ஏற்கெனவே நொந்து போயுள்ள சாதாரண மக்களின் பாக்கெட்டுகளைதூய்மைப்படுத்துவதுகண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை இந்தத் திட்டத்திற்கு பிரதமர் மோடியின் படத்துடன் எத்தனை கோடி செலவிடப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.விளம்பரத்திற்காக பெரும் தொகை செலவிட்டு விட்டு, அதற்கான தொகையை மக்களிடம் வசூலிப்பது நியாயமானது அல்ல என்று கூறிய அவர், கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்கள்.ஆனால் தற்போது மக்கள் தலையில் சுமையை ஏற்றுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். பருப்பு, காய்கறி, பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்கெனவே கடுமையாக உயர்ந்து மக்களின் முதுகெலும்பை முறிக்கிறது.இதில் சேவை வரியை உயர்த்துவது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றார். பிரதமர் மோடி விமானத்தில் உலகம் சுற்றுகிறார். ஆனால் மக்கள் உள்நாட்டில் ரயில் மற்றும் பேருந்துகளில் போவதைக் கூட கூடுதல் செலவுக்குரியதாக மாற்றுகிறார் என்று யெச்சூரி கூறியுள்ளார்...

No comments: