Tuesday 28 October 2014

27.10.2014 திண்டுக்கல்லில் - நகர JCTU சார்பாக நடந்தவை. . .

அருமைத்  தோழர்களே! திண்டுக்கல்லில் நமது தோழர்களின் முயற்சியால் நகர JCTU சார்பாக, 27.10.2014 ஞாயிறு மாலை, பிச்சாண்டி பில்டிங்கில் ஒரு அற்புதமான, மிக முக்கியமான, தொழிலாளி வர்கத்திற்கு இன்றைய அதிமுக்கிய பொருள் குறித்து நல்ல தொரு கருத்தரங்கத்தை நடத்தியுள்ளனர்.கருத்தரங்கத்தின் தலைப்பு - இந்திய தொழிற்சட்டம் - சீர்திருத்தங்களும்- தொழிலாளர் நலன்களும் என்பது ஆகும். 
இன்று பொறுப்பேற்றுள்ள அரசு தனக்கு மிருக பலம் இருக்கிறது, ஆகவே எதைவேண்டு மானாலும் செய்யலாம், அதை கேட்பதற்கு யாருமில்லை என்ற ஆங்காரத்தோடு நமது நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தையும் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக வும், கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் திருத்துகின்ற முயற்ச்சியை மிக தீவிரமாக எடுத்துள்ளது. நமது மண்ணில் தொழில் துவங்கும் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள ஓரிரு தொழிலாளர் நலச்சட்டங்களை கூட மதிக்காமல் காலில் போட்டு மித்திக்கின்ற நிலை உள்ளதை சீர்செய்ய  தனியார் கம்பெனிகளை தட்டிக் கேட்காமல் கை கட்டி வேடிக்கை பார்க்கும் அரசு, இருப்பதையும் அல்லது முழுமையாக தனியார் கம்பெனிகளின் ஆதரவு நிலைஎடுப்பதை தொழிலாளி வர்க்கம் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது. நமது மத்திய சங்க பொதுச் செயலர் தோழர்.பி .அபிமன்யு அவர்கள் நமது திருச்சி 7வது  மாநில மாநாட்டில் குறிப்பிட்டது போன்று நாடுமுழுவதும் மத்திய அரசின் தொழிலாளி விரோத செயல்களுக்கு எதிராக, மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக அங்கங்கு அனைவரையும் திரட்டி போராட வேண்டி உள்ளது.
அதனுடைய ஒருபகுதியாகவே திண்டுக்கல் கருத்தரங்கம் நடைபெற்றது என்றால் அது மிகையாகது.தோழர்.ஆர்.கருமலையான், தமிழ் மாநில செயலர் -CITU, அவர்களின் எழுச்சி உரையாக இருந்த கருத்தரங்க கூட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துள்ளனர். நமது திண்டுக்கல் தோழர்களின் இந்த நல்ல முயற்ச்சியை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.-- என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.

No comments: