Friday 31 October 2014

மீனவர்களை மீட்க விரைந்து செயல்படுக! அரசுக்கு-CITU...

சென்னை, அக். 30-தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அளித்துள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்து இந்தியா கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு மாநிலத் தலைவர் .சவுந்தரராசன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
கடந்த 5 மாதத்திற்கு முன்பு மத்தியில் பாஜக வெற்றிபெற்ற, பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கை சிறைகளில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், விடுதலை செய்வதாக அறிவித்தும் இந்திய மீணவர்களை விடுதலை செய்யவில்லை; ஒரு பொய்க்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, இன்று வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.“தமிழகத்தில் இந்த தீர்ப்பால் இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக மீனவர்கள் பகுதிகளில் பெரும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த தீர்ப்பு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளாகி வரும் தமிழக மீனவர்கள், போதைப்பொருள் கடத்தல் என்ற உண்மைக்கு மாறான குற்றச்சாட்டில் தூக்கு தண்டனைக்கு ஆளாகும் அளவிற்கு நிலையும் ஏற்பட்டுள்ளதுஎன்று குறிப்பிட்டுள்ள சிஐடியு தலைவர்கள் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு தூக்கு தண்டனையை ரத்து செய்து, 5 மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். சிஐடியு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள் செலஸ்டின், பா.கருணாநிதி ஆகியோரும் இதை வலியுறுத்தியுள்ளனர். 
இராமேஸ்வரத்தில் கொந்தளிப்பு
இராமேஸ்வரம் : 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த தகவல் வெளியானவுடன் இராமேஸ்வரம் தீவில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த மீனவர்களின் உறவினர்கள், மீன்பிடி தொழிற்சங்க (சிஐடியு) மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், ஐஸ்டீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. கருணாகரன், அசோக், முத்துப்பாண்டி உட்பட 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கச்சி மடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் தூக்கு தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்...

No comments: