Friday 3 October 2014

NLC-30வது நாள் வேலை நிறுத்தம்-மறியலில் 2000 பேர் கைது.

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த மாதம் 3–ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.பணி நிரந்தரம், போனஸ், கூடுதல்சம்பளம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடைபெற்று வரும்காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் ஒரு மாதத்தை கடந்து நடந்து கொண் டிருக்கிறது. இந்த போராட்டத்தின் விளை வால் என்.எல்.சி. சுரங்கங்களில் நிலக்கரி வெட்டியெடுக்கும் பணிமற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரச் சனைக்கு தீர்வு காண பலமுறை பேச்சுவார்த்தை நடத்தும் சுமுக முடிவு ஏற்படவில்லை.அக்.3 அன்று மந் தாரக்குப் பம் பேருந்து நிலையம் அருகேசுமார் 5 ஆயிரம் பேர் திரண்டனர். இதனால் அப் பகுதியிலும், என்.எல்.சி. 2–வது சுரங்கம்முன்பும் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டிருந்தனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறே ஒப்பந்த தொழிலாளர்களின் பேரணி என்.எல்.சி. 2–வது சுரங்கம் நோக்கி புறப்பட்டது. ஊர்வலத்தில். இதில் தொ.மு.. நிர்வாகிகள் ஸ்டாலின் ஹென்றி, பழனிவேல், அதொமுச சார்பில் ராஜபாண்டியன், சின்னரகுராமன், சிஐடியு சார்பில் சக்கரபாணி, மாதாகிருஷ்ணன், சீனுவாசன், தமிழக வாழ்வுரிமை சங்கம் சார்பில் அன்பழகன், திருநாவுக்கரசு, பாட்டாளி சங்கம் சார்பில் ரவிச்சந்திரன், முருகவேல், எல்எல்எப் சார்பில் சிவலிங்கம் சக்திவேல், ஐஎன்டியுசி சார்பில் ராஜேந்திரன், ஜானகிராமன் உள்ளிட்ட 2000 ம் பேரை போலீ சார் கைது செய்தனர். என்.எல்.சி. 2–வது சுரங்கத் துக்கு சுமார் 100 அடி முன்பு காவல்துறையினர் இரும்பு தடுப்பு(பேரிகார்டு) அமைத்து பேரணி யை தடுத்து நிறுத்தினர். மறியல் போராட்டத்துக்கு அனு மதி மறுத்தனர். ஆனால் அதனையும் மீறி அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments: