Sunday 19 October 2014

செய்தி . . . துளிகள் . . . கவனத்திற்கு . . .

18.10.14  நமது தோழர்.A.குருசாமி , B/S-BSNLEU-DDG(R) ஸ்டோர் -தலைவர் பதவி ஏற்பு ...
நமது மாவட்ட சங்க இணைய தளத்தில் ஏற்கனவே வெளியிட்ட தகவலின் அடிப்படையில் நமது SSA-க்கு உட்பட்ட, திண்டுக்கல்  தபால்-தந்தி ஊழியர்கள்  நாணய  பண்டக சாலையில் நடைபெற்ற இயக்குனர் தேர்தலில் நமது தோழர்கள் பெருவாரியாக வெற்றி பெற்று இருந்தார்கள் . அதன் பின்  முறையாக 13.10.14 அன்று நடைபெற்ற  ஸ்டோருக்காண தலைவர்  தேர்தலில் நமது  திண்டுக்கல்  BSNLEU புறநகர் கிளைச் செயலர் தோழர்.A. குருசாமி  போட்டி இன்றி  தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார். இறுதியாக 18.10.2014 சனிக்கிழமையன்று  காலை 10 மணிக்கு மேல்  ஸ்டோர்  அலுவலக கட்டிடத்தில்  ஏராளமானோர்  புடை சூழ  அருமைத் தோழர்.A. குருசாமி  தனது தலைவர் பதவியை  ஏற்றுக்கொண்டார். இத் தேர்விற்காக உழைத்திட்ட  அனைவருக்கும்  நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம்  உளப்பூர்வமான பாராட்டுக்களையும், பணி சிறக்க நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.
  19.10.2014 மதுரை G.M அலுவலகத்தில் டெலிகாம் மெக்கானிக் தேர்வு நடைபெறுகிறது.
நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் தொடர்ச்சியாக மீண்டும் 19 டெலிகாம் மெக்கானிக் களுக்கான  தேர்வு 19.10.2014 ஞாயிறு  காலை 10 மணிக்கு மேல்  மதுரை  பொது மேலாளர்  அலுவலகத்தில்  உள்ள  மனமகிழ் மன்றத்தில் நடைபெறுகிறது. தோழர்கள் தேர்வில்  அனைவரும் வெற்றி பெற நமது மதுரை BSNLEU  மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.

மக்கள்/ஊழியர்விரோத- படு பாதகமான Deloittee  பரிந்துரையை எதிர்த்துபோராட்டம்.
BSNL நிறுவனத்தின் தலைமை அலுவலகம் Deloittee குழுவின் பரிந்துரைகளை மகாராஷ்டிர மாநிலத்தில் தன்னிச்சையான  போக்கில் அமல்படுத்தி உள்ளது . BSNLநிர்வாகம் ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை எதுவும்  கலந்து ஆலோசிக்காது Deloittee குழுவின் பரிந்துரைகளை நடைமுறை படுத்துவதை எதிர்த்து மகாராஷ்டிர மாநில அனைத்து சங்கங்களும் எதிர்  வரும் 20-10-2014 அன்று கூடி போராட்ட திட்டம் வகுக்க உள்ளனர், நிர்வாகத்தின் இந்த BSNLநிறுவன அடாவடித்தன செயலுக்கு எதிராக நாடுமுழுவதும் அனைவரும் எந்த பேதமும் பாராமல் போராடவேண்டிய தருணமிது.தயாராகுவோம் தரணிகாக்க தோழர்களே! 

ஆந்திரா மாநில BSNL ஊழியர்கள் அனைவருக்கும் நமது சபாஷ் !
       ஹூட் - ஹூட் புயலால் ஆந்திரா மாநில கடற்கரையோர பகுதிகளில் உள்கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. அங்கு இன்னமும் தொலைத்தொடர்பு சேவைகள் சீரடையவில்லை.இது தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் விசாகப்பட்டினத்தில் 17.10.14 நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோபமாகப் பேசிய சந்திரபாபு நாயுடு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வணிக நோக்கத்தோடு மட்டுமே செயல்படுகின்றன. மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை, தகவல் தொடர்பு சீரடையாததால் அரசின் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, என்று கடிந்து கொண்டார்.இதே நேரத்தில் அரசுத்துறை நிறுவனமான நமது  BSNL நிறுவனம் தனது 85% நெட்வொர்க் சரிசெய்து உள்ளதை ஆந்திரா மாநில முதல் அமைச்சர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்கள் பாராட்டி நமது ஆந்திரா மாநில BSNLதலைமை பொதுமேலாளர் உயர்திரு ஸ்ரீனிவாசன் அவர்களிடம் நமது சேவையை பாராட்டி உள்ளார் .நமது தொலை தொடர்பு சேவை விரைந்து சரி செய்யப்பட்டதால் மாநிலத்தில் நிவாரண பணிகளும் ,புனரமைப்பு பணிகளும் விரைந்து செயல்பட உதவி புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது .ஊடகங்களும் நமது பணியை பாராட்டி உள்ளன.நாமும் பாராட்டுவோம் ஆந்திர மாநில BSNL ஊழியர்களை !.இது விசயமாக நமது ஆந்திரா BSNLEU மாநில செயலருக்கு அம் மாநில தலைமை பொது மேலாளர் (CGM) குறுந்தகவல் அனுப்பியுள்ளார். தொலைத் தொடர்பு சேவையை விரைவாக சீரடையச் செய்த நமது BSNLஊழியர்களுக்கு நமது மதுரை மாவட்ட சங்கத்தின் சபாஷ்...

No comments: