உலக மயத்திற்கு எதிரான போராட்டம் உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தால் பாரீசில் எழுச்சியுடன் நடை பெற்றது.ஜூன் 14 அன்று சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் இப்பேரணியில் பங் கேற்றனர். ஜூன் 14 என்பது உலகப்புரட்சி நாயகன் சே குவேராபிறந்த தினம் என்பது குறிப் பிடத்தக்கது. இதே நாளன்று பிரான்சின் இதர பகுதிகள் பல வற்றிலும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதேபோன்று பேரணியை நடத்தி யுள்ளார்கள். தொழிலாளர் பொது மகா சம்மேளனத்தில் இணைந்துள்ள தொழிற் சங்கங்கள் இப்பேரணிக்கு அறைகூவல் விடுத்திருந்தன. பிரெஞ்சு அரசாங்கம் தொழி லாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரெஞ்சு தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை இப்பேரணியில் பிரதிபலித்தனர். பிரெஞ்சு புரட்சிக் காலத்திலிருந்தே தொழிலாளர்கள் பெற்று வந்த பலசலுகைகளைப் பறிக்கும் விதத்தில் இப்போதைய ஹாலண்டேஅரசாங்கம் இச்சீர்திருத்தங் களைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவில் எப்படி தொழி லாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றப்படுகிறதோ அதேபோன்றே நவீன தாராளமயக் கொள்கைகளின் அடியை யொட்டி பிரெஞ்சு அரசாங்கமும் நடவடிக்கைகளை எடுக்க முயன் றுள்ளது. வேலைக்கு ஆள் எடுத்து,வேலை முடிந்ததும் தூக்கியெறியும் கொள்கையைப் பின்பற்றுவது, வாரத்திற்கு வேலை நேரத்தை 35 மணி அளவிலிருந்து 48 மணி அளவு வரை என்றிருப்பதை 60 மணி நேரமாக உயர்த்துவது இப்படி பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுத் திருப்பதைக் கண்டித்தே இந்தப் பேரணி நடைபெற்றது.சர்வதேச மாநாடுமுன்னதாக உலகம் முழுதும் விவசாயம், உணவு, வர்த்தகம், ஜவுளி மற்றும் அவற்றைச் சார்ந்ததொழில்களில் இயங்கும் சர்வ தேச தொழிற்சங்கத்தின் சார்பில் நான்காவது சர்வதேச மாநாடு பாரீசில் ஜூன் 13 அன்று நடைபெற்றது. 86 நாடுகளிலிருந்து 123 அமைப்புகளைச் சேர்ந்த 225 பிரதிநிதிகள் இம் மாநாட்டில் பங்கேற்றார்கள்.இந்தியாவிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், அகில இந்தியவிவசாயத் தொழிலாளர் சங்கத் தின் பொதுச் செயலாளர் ஏ.விஜய ராகவன், இணைச் செயலாளர் சுனீத் சோப்ரா மற்றும் பாரதீய கிசான் சங்கத்தைச் சேர்ந்த கே.இ. இஸ்மாயில், நாகேந்திர நாத் ஓஜா மற்றும் நிர்மல் ஆகியோர் பிரதிநிதிகளாகக் கலந்து கொண் டனர். ஜூன் 17 வரை இம்மாநாடு நடைபெறுகிறது. இதற்கிடையில் பாரீசில் நடை பெற்ற மாபெரும் தொழிலாளர் எழுச்சிப் பேரணியில் உலகம் முழுதுமிருந்து மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.பேரணி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. - பாரீசிலிருந்து விஜூ கிருஷ்ணன்
1 comment:
தோழர்களே,
"ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும் ஆதவன் மறைவதில்லை".
பாரிஸ் நகரம் சிவந்து நிற்பதை பிரான்ஸ் அரசின் அடக்குமுறைகள் எத்தனை நாட்களுக்குத்தான் மறைக்கமுடியும். ஒன்றுபட்ட தொழிலாளர்கள் முன் அரசின் அடக்குமுறைகள் தூளாகும், அவர்களின் ஆணவங்களும் தூள் தூளாகும். என்றும் எப்போதும் வெல்வது தொழிலாளர் வர்க்கமே.
தோழமையுடன்...
இராம.அய்யனார்சாமி
திண்டுக்கல்.
Post a Comment