Wednesday 9 October 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு ...

மத்திய-மாநில அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்புக் கூறியது. அதில், ""பல்வேறு காரணங்களினால் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அது வருத்தத்துக்குரியது. இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமை. எனவே,மத்திய-மாநில அரசுப் பணிகளில் (அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களில்) மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
அனைத்துப் பிரிவினருக்கான மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்ற விதிமுறை மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருந்தாது. மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய-மாநில அரசுகள் வரும் 3 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



No comments: