Wednesday 9 October 2013

கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்தேர்தலில் போட்டியிட கூடாது.

டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில், நவம்பர் - டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க கூடாது என்ற கருத்து வலுப்பெற்று உள்ளது.

இந்நிலையில், தற்போது, ஐந்து மாநிலங்களில் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் குறித்தும், அவர்கள் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறி?த்தும், 'ஜனநாயக சீர்திருத்த சங்கம்' மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள, புள்ளி விவரம் வருமாறு: ஐந்து மாநிலங்களில், மொத்தமுள்ள, 607 உறுப்பினர்களில், 128 பேர் மீது, கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 47 உறுப்பினர்கள் மீது, கொலை, கொள்ளை போன்ற, கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில், அதிகபட்சமாக, டில்லியில், 43 சதவீத உறுப்பினர்கள் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன. .பி.,யில், 25 சதவீதத்தினர் மீது, வழக்குகள் உள்ளன. கடந்த, 2008ம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் கட்சி, டில்லியில் நிறுத்திய வேட்பாளர்களில், 30 சதவீதத்தினர் மீது, கிரிமினல் வழக்குகள் பதிவாகியிருந்தன. .பி.,யில், காங்கிரஸ் வேட்பாளர்களில, 31 சதவீதத்தினர் மீது, கிரிமினல் வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், பா.., சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில், டில்லியில், 35 சதவீதத்தினரும், .பி.,யில், 22 சதவீத்தினரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்களாக இருந்தனர். டில்லியில் நடப்பு சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர்களில், 38 சதவீதத்தினரும், பா.., சார்பில், 46 சதவீதத்தினரும், கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்களாக உள்ளனர். அதேபோல், ஐந்து மாநிலங்களில், 264 எம்.எல்..,க்கள், கோடீஸ்வரர்களாக, பல கோடிக்கு அதிபதிகளாக உள்ளனர். டில்லியில், 69 சதவீத, எம்.எல்..,க்கள், கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஐந்து சட்டசபைகளில் உள்ள, பெண்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, 67. இதில் ராஜஸ்தானில் தான், அதிகபட்சமாக, 14 சதவீதத்தினர், பெண்களாக உள்ளனர். இவ்வாறு, தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 'வரவிருக்கும் தேர்தலிலாவது, கிரிமினல் பின்னணி கொண்டவர்களுக்கு, டிக்கெட் வழங்காமல் இருக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்' என, இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: