Wednesday 23 October 2013

கூடங்குளம் அணுமின் உற்பத்தி இப்போது தொடக்கம் ...

முதல் நாளில் 160 மெகாவாட் …


கூடங்குளம் அணுமின் உற்பத்தி இப்போது தொடங்கும், அப்போது தொடங்கும் என பல்வேறு நேரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.கூடங்குளம் அணு மின் நிலையத்தில், முதலாவது அணு உலையில் முதல் நாளில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நிலைய இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார். முதற் கட்டமாக 75 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், பின்னர் 160 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ததாகவும் கூறினார். இன்னும் ஓரிரு நாட்களில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றார். நிர்ணயிக்கப்பட்ட 400 மெகாவாட் மின்சாரம், இந்திய அணுசக்தி கழகத்தின் அனுமதி கிடைத்த பிறகு துவங்கும் என்றார்.

No comments: