Friday 11 October 2013

இந்தியாவை ஆள- மாற்றுக் கொள்கைதான் தேவை ...

இந்தியாவை ஆள மாற்றுத் தலைவர் தேவையில்லை. மாற்றுக் கொள்கைதான் தேவை என்று
.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றி பேசுகையில்;தனியார் நிர்வாகத்தின் பிடியில் இருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ல் தொடங்கப்பட்டது. பல வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், சமூகசேவையில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை உருவாக்கிய பல்கலைக்கழகம். 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 12 ஆண்டுகள் சிறைவாசம் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் உமாநாத், மூத்த தலைவர் முத்தையா ஆகியோர் இப்பல்கலையில் படித்தவர்கள்.ஆனால் கடந்த 20,30 ஆண்டுகளாக இங்கு கல்வியை கடைசரக்காக விற்று கொள்ளையடிக்கப்படும் நிலைக்கு மாறியது தான் வருத்தம். இதனை அகற்ற ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு நீண்ட நெடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 1980களில் சட்டமன்றத்தில் எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் சங்கரய்யா, உமாநாத் உள்ளிட்டோர், இந்த பல்கலைக் கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்திள்ளனர்.கடந்த கால ஆட்சிகளில் இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து ஊழியர்களின் கடுமையான போராட்டம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி பேசியதன் விளைவாக தற்போது கோரிக்கை ஏற்று வெள்ளைக்காரன் உருவாக்கிய பல்கலைக்கழக சட்டத்தை திருத்தி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த அதிமுக தலைமையிலான அரசை மனதார பாராட்டுகிறேன். ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். அதுமட்டும் இல்லாமல் மக்களின் வாழ்வாதர பிரச்சனை பாதிக்கபடும் போது முதல் குரல் கொடுப்பதும் மார்க்சிஸ்ட் கட்சியே.
கடந்த 20 ஆண்டுகளாக தாராளமயப் பொருளாதார கொள்கையை ஆதரித்து வரும் பாரதிய ஜனதா கட்சியும், 20 ஆண்டுகளாக தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தி பொருளாதாரத்தை சீர்குலைத்து வரும் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரே கொள்கைதான். தற்போது இந்தியாவை ஆள மாற்றுத் தலைவர் தேவையில்லை. மாற்றுக் கொள்கைதான் தேவை. தாராளமயப் பொருளாதார கொள்கையில் கல்வி வியாபாரமானது ஒரு அம்சமாகும். திருச்சியில் நரேந்திர மோடி காந்தியடிகள் கனவு நினைவாக வேண்டும் என பேசியுள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட வேண்டிய கட்சி என்ற கனவு. அதை மறுக்க முடியாது. அதே வேளையில் காந்தியின் மற்றொரு கனவான இஸ்லாமியர்களும், இந்துக்களும் சேர்ந்து வாழ வேண்டும் என உயிரை பணயம் வைத்து போராடியவர் காந்தி.கோட்சே, இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என காந்தியை சுட்டுக்கொன்றார். இதுபோன்ற மதக்கலவரத்தை தூண்டுபவர்கள் வேண்டாம் என்பதுதான் காந்தியின் மற்றொரு கனவு. அதுபோன்று பாஜகவின் வழிகாட்டியாக உள்ள ஆர்.எஸ்.எஸ் வேண்டாம் என்ற காந்தியின் கனவை மோடி நினைவாக்குவாரா?.மேலும் மத்திய அரசு கொண்டு வந்த பென்ஷன் நிதி திட்டம் உள்ளிட்ட சட்டங்களை பாஜக ஆதரித்துள்ளது. இதனை மோடி, அத்வானி கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை. ஆனால் ஆக.30-ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி கவலைப்பட மாட்டோம். அதே நேரத்தில் தாரளமய பொருளாதார கொள்கையை எக்காரணத்திலும் கைவிட மாட்டோம் என கூறியுள்ளார்.
எனவே காங்கிரஸ், பாஜக ஆகிய இருகட்சிகளுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாற்று கொள்கையை வலியுறுத்தி மக்கள் மத்தியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

No comments: