Thursday 31 October 2013

ஆந்திர- தனியார் பஸ்ஸில் தீ விபத்தில் 45 பயணிகள் கருகி உயிரிழந்தனர்.





















ஆந்திர மாநிலத்தில் தனியார் சொகுசு பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் குழந்தை உள்பட 45 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். டீசல் டேங்கில் தீப்பிடித்ததால் நிகழ்ந்த இவ்விபத்தில் அந்த பஸ் எரிந்து சாம்பலானது.பெங்களூருவில் இருந்து ஜப்பார் டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு வால்வோ பஸ் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு ஹைதராபாத் நோக்கிப் புறப்பட்டது. பஸ்ஸில் 50 பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர்.இந்த பஸ் புதன்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாளையம் என்ற பகுதிக்கு அருகே உள்ள சிறிய பாலத்தின் தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதைத் தொடர்ந்து அந்த பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில், பஸ்ஸில் இருந்த 45 பேர் தீயில் கருதி உயிரிழந்தனர். அவர்களில் சிலர் சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.எனினும், இந்த விபத்தில் பஸ்ஸின் ஓட்டுநர் ஃபெரோஸ் கான், உதவியாளர் அயாஸ் மற்றும் 5 பயணிகள் தீக்காயங்களுடன் உயர் தப்பினர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பயணி கூறுகையில், ""பஸ்ஸில் தீப்பிடித்தபோது பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். எங்களில் சிலர் கண்ணாடி ஜன்னல்களை உடைக்க முயன்றோம். ஆனால், முடியவில்லை. நான் உடனடியாக அவசரகால ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே குதித்து விட்டேன்'' என்றார்.

No comments: