Friday 11 October 2013

அக். 30 தில்லியில் மதவெறி எதிர்ப்பு சிறப்பு மாநாடு ...

அக். 30 தில்லியில் மதவெறி எதிர்ப்பு சிறப்பு மாநாடு அதிமுக-பங்கேற்கிறதுசீத்தாராம் யெச்சூரி பேட்டி
 அக்டோபர் 30 அன்று மத வெறிக்கு எதிராக தில்லியில் மிகவும் பிரம்மாண்டமானமுறையில் நடத்த உத்தேசித்துள்ள இடதுசாரிகள் மற் றும் மதச்சார்பற்ற சக்திகளின் சிறப்பு மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக பூர்வாங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.நாட்டில் அதிகரித்துவரும் மத வெறி சக்திகளின் திட்டங்களை முறி யடித்திடவும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்கவும் மாபெரும் சிறப்பு மாநாடு ஒன்றை வரும் அக்டோபர் 30 அன்று தில்லியில் நடைபெறஉள்ளது.
இது தொடர்பாக ஆலோசிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான .கே.கோபாலன் பவ னில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சித் தலைவர் களின் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமர்ஜித் கவுர், சமாஜ்வாதிக் கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கே.சி. தியாகி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அக்டோபர் 30 - மதச்சார்பற்ற சக்திகளின் சிறப்பு மாநாட்டை வெற்றி கரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து அவர்கள் விவாதித்தார்கள்.பின்னர் இக்கூட்டம் குறித்து செய்தி யாளர்களிடம் சீத்தாராம் கூறுகையில், இச்சிறப்பு மாநாட்டில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத இதர மதச் சார்பற்ற கட்சிகள் அனைத்திற்கும் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறோம் என்று தெரிவித்தார். அதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்களா? என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, அழைப்புவிடுத்திருக்கிறோம் என்றும், தங்கள் கட்சி கலந்துகொள்ளும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பதில் அனுப்பி இருப்பதாகவும் அவர் தெரி வித்தார்.

No comments: