Sunday 13 October 2013

`பைலின்’ புயல் கரையைக் கடந்தது...

`பைலின்புயல் ஒடிசா மாநிலம் கோபால் பூருக்கு அருகே சனிக்கிழமையன்று இரவு 8.55 மணியளவில் கரையைக் கடந்தது.இந்தப் புயலால் ஒரிசாவின் கஞ்சம், பூரி, குர்தா, ஜெகதீஷ்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின. ஆந்திராவின் சில மாவட்டங்களும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டதுமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசாமற்றும்ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கடலோரப் பகுதியிலிருந்து 5.25லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மனித உயிர்ச்சேதத்தை பெருமளவு தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது. இதனால் ஒரிசாவின் கடற்கரை பகுதியிலிருந்து 4.25லட்சம் மக்களும், ஆந்திரகடலோரப் பகுதியிலிருந்து 1 லட்சம் மக்களும் வெளியேற்றப் பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டன என்று மத்திய உள்துறை செயலாளர் அனில்கோசுவாமி தெரி வித்தார்.ஒரிசா மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக் கப்பட்டது. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்கைபேரிடர் நிவாரணப் படையினர் ஒரிசா,ஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று தேசியபேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.புயல் காரணமாக ஒடிசாவின் பல்வேறு பகுதி களில் கனமழை பெய்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில் 52ஆயிரம் பேர் வெளியேற்றப் பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.இதேபோன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்திலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் 63க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக் கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ 5லட்சம் டன் உணவு தானியம் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்தார். நிலை மையை உன்னிப்பாக கவ னித்துவருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.பைலின் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மிகக்கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எச்சரித்திருந்தன. ஒடிசாவை 1999ம் ஆண்டு தாக்கிய கத்ரீனா புயலுக்கு இணையானது என்றுநிபுணர்கள் தெரிவித்தனர். கத்ரீனா புயலுக்கு 10 ஆயிரம் பேர் பலியாகினர்.

No comments: