Sunday 13 October 2013

ஒரு லிட்டர் வெள்ளாட்டுப் பால் தற்போது ரூ. 2500 .

ஆட்டுப்பால் விலை லிட்டர் ரூ.2500
டெங்குக் காய்ச்சலைக் குணமாக்கும் வகை யில், இரத்த அணுக்களை அதிகரிக்க உதவும் மருத்துவக் குணம் நிரம்பிய ஆட்டுப்பால் தில்லியில் ரூ.2500-க்கு விற்கப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.கிழக்கு தில்லிப் பகுதி யில் கடந்த மாதம் 30ம் தேதி வரை 435 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. தற்போது 617ஆக உயர்ந்துள்ளது. டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதை முறியடிக் கும் மருத்துவக் குணம் கொண்ட ஆட்டுப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் வெள்ளாட்டுப் பால் தற்போது ரூ. 2500க்கு விற்பனையாகிறது. அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆட்டுப் பாலுக்கு திடீரென கிராக்கி அதிகரித்துள்ளது. இதனால் இறைச்சிக் கூடங்களுக்கு ஆடுகள் கொண்டுச் செல்லப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments: