Friday 11 October 2013

`பெல்’ நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். . .

பாதுகாப்பு குறைபாட்டால் பலியான தொழிலாளி : `பெல்நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருச்சி திருவெறும்பூர் எழில்நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(59). இவர்பெல்நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்தார்.வியாழனன்று இரவு 8.30 மணியளவில் இவர் நம்பர் 1 பில்டிங்கில் பணியில்இருந்த போது 3டன் எடையுள்ள இரும்பு ராடை கிரேன் மூலம் தூக்கும் பணி நடைபெற்றது.
இதில்அந்த இரும்பு ராடு எதிர்பாராதவிதமாக ஆரோக்கியசாமி மார்பில் மோதியது. இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த ஆரோக்கியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.இச்சம்பவத்தைக் கண்டித்து சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வியாழனன்று இரவு 9.30 மணிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால்தான் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாகவும், எனவே,இதற்கு காரணமான உதவிப் பொதுமேலாளர் மோகன், கண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஃபோர்மேன் பாலுசாமி மற்றும் சூப்பர்வைசர், இன்ஜினீயர் ஆகிய 5பேரையும் பதவியிறக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆரோக்கியசாமியின் உடலை எடுத்து செல்லவும் மறுத்து விட்டனர்.
இதனை தொடர்ந்து வெள்ளியன்று காலை வேலைக்கு வந்த 3 ஆயிரம் தொழிலாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையே ஆரோக்கியசாமியின் மகள்பெல்நிறுவனத்தில் எலெக்ட்ரீசியன் பிரிவில் வேலைபார்க்கிறார். ஆரோக்கியசாமியின் குடும்பத்தினர் அங்கு சென்று உடலைதங்களிடம் ஒப்படைக்குமாறு கூறினர். ஆனால் அதற்கு மறுத்த விட்ட தொழிலாளர்கள், தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் ஆரோக்கியசாமியின் உடலைகுடும்பத்தினரிடம் ஒப்ப டைத்தனர்.

பின்னர் மதியம் 2 மணி அளவில் உள்ளிருப்பு போராட்டத்தை முடித்து கொண்டு பணிக்கு சென்றனர்

No comments: