Wednesday 9 October 2013

சம வேலைக்கு சம ஊதியம்TNTCWU மாநாடு வலியுறுத்தல்.

தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்களின் மாநில மாநாடு நாகர்கோவிலில் அக்டோபர் 1, 2 தேதிகளில் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.தேசியக் கொடியை வரவேற்புக்குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான .வி. பெல்லார்மின் ஏற்றி வைத்தார். சங்கக் கொடியினை மாநில துணைத் தலைவர் பி.மாணிக்கமூர்த்தி விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே ஏற்றிவைத்தார்.                         .வி. பெல்லார்மின், மாநிலஉதவித்தலைவர் எம்.நாராயணசாமி ஆகியோர் வரவேற்றனர்.பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.அபிமன்யு துவக்கி வைத்துப் பேசுகையில், பிஎஸ்என்எல் சேவை தரத்தை மேம்படுத்துதல், அமைப்பை பலப்படுத்துதல், ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகள், தற்போதைய அரசியல் சூழல் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.நிர்வாகத்தின் தரப்பில் தலைமை பொது மேலாளர் முகமது அஷ்ரப் கான், நாகர்கோவில் பொது மேலாளர் . திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் ஆர். கருமலையான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு கொறடா கே. பாலகிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவி செயலாளர் . பாபுராதாகிருஷ்ணன், பிஎஸ்என்எல் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில கன்வீனர் வி.பி.இந்திரா, பிஎஸ்என்எல் சிசி டபுள்யுஎப் சார்பில் துணை பொதுச் செயலாளர் சி. குமார், சென்னை தொலைபேசி ஒப்பந்த ஊழியர்களின் மாநிலச் செயலாளர் காசி ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.பொதுச் செயலாளர் எம்.முருகையா, மாநிலப் பொருளாளர் கே.விஸ்வநாதன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர்.நிர்வாகிகள்புதிய மாநிலத் தலைவராக எம். முருகையா, மாநிலச் செயலாளராக   சி. வினோத், மாநில பொருளாளராக கே.விஸ்வநாதன் உள்ளடங்கிய 21 பேர் கொண்ட புதிய மாநில செயற்குழுவை மாநாடு ஏகமனதாக தேர்வு செய்தது.மாநாட்டில் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை, பணி நேரத்தை குறைக்க கூடாது. 8.33 சதவீத போனஸ் தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கப்பட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியத்தை பிரதி மாதம் 7 ஆம் தேதிக்கு முன்னர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்களிடையே கையெழுத்து இயக்கத்தை நடத்தி டிசம்பர் மாதம் 11ம் தேதி மாநில, மாவட்ட நிர்வாகங்களுக்கு மனு கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.மாநிலப் பொருளாளர் கே. விஸ்வநாதன் நன்றி கூறினார்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்ற பேரணிக்குப் பிறகு பொது மாநாட்டில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.அபிமன்யு சிறப்புரையாற்றினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி பொதுச செயலாளர் .சுந்தரகண்ணன் நன்றி கூறி முடித்து வைத்தார்.

No comments: