Friday 11 October 2013

ஐகோர்ட்டில் தமிழில் வாதாட தடையில்லை, . .

உயர்நீதிமன்றத்தில்தமிழில்வாதாடத்தடைஇல்லை!நீதிபதிகள் தீர்ப்பு

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தர வை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வக்கீல் பகத்சிங் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.அதற்கு அனுமதி மறுத்த தனி நீதிபதி, “அரசியலமைப்பு சட்டப்பிரிவு 348, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு ஆகியவற்றில் வழக்காடு மொழியாக ஆங்கில மொழி தான் இருக்கும் என்று கூறுகிறது.
சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் அமைப்பு பெஞ்சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டில் ஆங்கிலத்தில் தான் வாதாட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. எனவே தமிழில் வாதாட அனுமதிக்க முடியாதுஎன்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.இதே காரணத்தை கூறி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் கட்டிட வரைபட அனுமதி கே ட்டு தாக்கல் செய்த வழக்கை யும் தனி நீதிபதி தள்ளுபடி செய் தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆயுஷாபானு, சுந்தர்ராஜன் ஆகியோர் ஐகோர்ட்டு கிளை யில் அப்பீல் செய்தனர். அதில் கூறியிருந்ததாவது:-இந்திய அரசியலமைப்பு சட்டம் 348 பிரிவு 2, கவர்னர் மற்றும் ஜனாதிபதி ஒப்புதலு டன் அந்தந்த மாநிலங்கள் தங் களது மாநில மொழியை ஐகோ ர்ட்டின் வழக்கு மொழியாக்க லாம் என்று கூறுகிறது.அந்த அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டு தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த தீர்மானம் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.இது தமிழக மக்களின் விருப் பத்துக்கு எதிரானதாகும். அதே வேளையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அடங் கிய குழு தமிழில் வாதாட ஒப்பு தல் அளித்தது. அவ்வாறு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தமிழில்பேச அனுமதி மறுப்பது நியாயமற்றது.நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் மக்களுக்கு ஏற்றபடி இருக்க வேண் டும்.அந்தந்த மாநில மொழிகளில் நீதிமன்ற நடைமுறைகள் இருப்பது தான் சரியாக இருக்கும். சாதாரண மக்களும் நீதி மன்ற தீர்ப்புகளை புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தெரிவித்துள் ளார்.மாற்று மொழியில் நீதி மன்ற நடைமுறைகள் இருப்ப தால் சாதாரண மக்கள் நீதியை பற்றி அறிந்து கொள்ள முடியாத நிலைஉள்ளது. எனவே, ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்றதனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பகத்சிங், ராஜீவ்ரூபஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.மனுவை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட்டில் தமிழில் வாதாடஅனுமதி மறுத்ததனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துஉத்தரவிட்டனர். “இந்த வழக்குகளை பொறுத்தமட்டில் தமிழில் வாதாடிய காரணத்துக்காகவே தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை டிவிஷன் பெஞ்சு ரத்து செய்து இருப்பதன் மூலம் தமிழில் வாதாட தடையில்லை, தமிழில் வாதா டும் போது அதை ஏற்றுக் கொண்டு தகுதி அடிப்படையில் வழக்கை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தான் கருத்தில் கொள்ள வேண்டும்என்று தெரிவித்தனர்.

No comments: