Wednesday 16 October 2013

அமெரிக்க மக்களின் ரகசியங்களை உளவு பார்த்தாக தகவல்..

கோடிக்கணக்கான மக்களின் ரகசியங்களை அமெரிக்க உளவு நிறுவனம் திருடியதாக திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளது.
அமெரிக்க அரசின் உளவு நிறுவனமானதேசிய பாதுகாப்பு ஏஜென்சிஅமெரிக்க மக்களையும், உலக தலைவர்களையும் உளவு பார்த்ததாக அதில் கம்ப்யூட்டர் நிபுணராக பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடென் கடந்தசில மாதங்களுக்கு முன்பு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு பரபரப்பைஏற்படுத்தினார். இப்போது ஸ்னோடென் ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.தீவிரவாதிகளை கண்காணிக்கிறோம் என்ற போர்வையில் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அமெரிக்க மக்களின் ரகசியங்களை உளவு பார்த்தாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இப்போது செய்தி வெளிட்டுள்ளது.உலக அளவில் செயல்படும் யாகூ, ஜிமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் ஆகியவற்றில் உள்ள -மெயில்களில் இருந்து தகவல்களை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி ரகசியமாக திருடி உளவுபார்த்துள்ளது. இப்படி ஆண்டுக்கு 25 கோடி மக்களின் தகவல்களை உளவுபார்த்திருக்கிறது. குறிப்பாக லட்சகணக்கான அமெரிக்க மக்களின் ரகசியங்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு தகவல் தொடர்பு கம்பெனிகளுடனும், உளவு நிறுவனங்களுடனும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சிரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, உலகம் முழுவதும் மக்களையும், தலைவர்களையும் உளவு பார்த்து இருக்கிறது என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.                                                    


No comments: