Friday 11 October 2013

அநீதியான தீர்ப்பை எதிர்த்து . . .

58 தலித்துகள் படுகொலை வழக்கு அநீதியான தீர்ப்பு

லட்சுமண்பூர் பதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து, பாட்னா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, ஏற்கத்தக்கது அல்ல; மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கு மரணதண்டனையும், 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளித்திருந்தது; தற்போது சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தந்து, அனைவரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்; அந்த கிராமத்தில் 58 தலித்துகள், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது குறித்து, எந்த சந்தேகமும் இல்லாத நிலையில், இந்த தீர்ப்பு ஏராளமான கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.உயர்சாதியினரால் நடத்தப்படும் தனியார் ராணுவத் தினரால், தலித்துக்கள் கொல்லப்பட்ட ஏனைய வழக்குகளிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப் பட்டே வந்துள்ளனர். இந்த அநீதியான தீர்ப்பை எதிர்த்து பீகார் அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ அஜீத் சர்க்கார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பப்பு யாதவ் குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பாட்னா நீதிமன்றம் அவரை, விடுவித்தது; இந்த வழக்கிலும் இதுவரை மேல்முறையீடு செய்யப்படவில்லை; இந்த வழக்கிலும் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.

No comments: