Monday 7 October 2013

பெரியாரின் அந்த சொற்கள் தனது நெஞ்சை சுரீர் என்று சுட்டது...

பெரியாரும் கி..பெ. விசுவநாத மும் திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச் சியில் கலந்து கொண்டுவிட்டு ரயிலில் மதுரை சென்று கொண்டிருந்தனர். மணியாச்சி ரயில் நிலையத்தில் வண்டிநின்றது. நடைமேடையில் இருந்த கடையில் இட்லி வாங்கி வரும்படி விசுவநாதத்திடம் பெரியார் கூறினார். விசுவநாதம் இட்லி வாங்கி வந்தவுடன் இருவரும் சாப்பிட தொடங்கினர். நடைமேடையில் இருந்த இருவர் அவர்களைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கவனித்த பெரியார் விசுவநாதத்தின் தோளைத்தட்டி அவர்களிருவரும் நம்மைப்பற்றி ஏதோ கூறுகிறார்கள் என்று கூறினார்.அவர்கள் ஏதோ பேசி விட்டுப் போகட்டும். விடுங்கள் என்று விசுவநாதம் பெரியாரிடம் கூறினார்.அதற்கு பெரியார்இவன்தான் நம்மை எதிர்க்கிறவன் என்று அடையாளம் காட்டுகிறார்கள். ஆனால் நாம்எந்த சமுதாயத்துக்காக பாடுபடுகிறோமோ அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நம்மை ஏறெடுத்துப் பார்க்கக்கூட தயாராக இல்லையேஎன்று மனவருத்தத்துடன் கூறினார். பெரியாரின் அந்த சொற்கள் தனது நெஞ்சை சுரீர் என்று சுட்டதாகவும், அந்தச் சூட்டை இன்னும் தன்னால்மறக்க முடியவில்லை என்றும் எழுதியுள்ளார் கி..பெ.விசுவநாதம்

No comments: