Friday, 16 December 2016

16-12-16, அன்புடன் ஓர் அழைப்பு அவசியம் வாங்க . . .


2 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை துண்டாட முயலும் மோடி அரசுக்கு எச்சரிக்கை...

                  கொல்கத்தாவில் மற்றும் மதுரையில் நடைபெற்ற போராட்ட ஆர்ப்பாட்டம் 
நாட்டின் மிகப் பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனமாம் பிஎஸ் என்எல் நிறுவனத்தை துண்டாடி சீர்குலைக்கும் நோக்கத்துடன் துணை டவர் நிறுவனம் அமைத்திட மத்திய அரசு முயற்சிப்பதை எதிர்த்து டிசம்பர் 15 வியாழனன்று நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நாசகர முயற்சிகளுக்கு எச்சரிக்கை விடும் விதத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து பிஎஸ்என்எல் அலுவலகங்களிலும் பணிகள் ஸ்தம்பித்தன. பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் விடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று, நாடு முழுவதும் உள்ளபிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகங்கள், தலைமை பொது மேலாளர் அலுவலகங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளிட்ட அனைத்து மையங்களும் இந்த வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடின.
தொலைத்தொடர்பு துறையில் டவர் மூலமான வர்த்தகம் மிகவும் லாபகரமானது ஆகும். நாடு முழுவதும் 65 ஆயிரம் மொபைல் டவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளன.இவற்றை தனியார் பெரும் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளை லாபம்சம்பாதிக்க வைக்கும் நோக்கத்துடன் துணை டவர் நிறுவனம் ஒன்று அமைத்து, அதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை துண்டாடி சீர்குலைக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதை எதிர்த்தே, இந்த மாபெரும் வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.
துணை டவர் நிறுவனம் அமைப்பது என மத்திய தொலைத்தொடர்பு துறை சார்பில் மத்திய அமைச்சரவைக்கு குறிப்பு அனுப்பப்பட்டதை தொடர்ந்து அவசர ஆலோசனை நடத்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்சங்கங்கள், வேலைநிறுத்த போராட்டத் தின் மூலமாக அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதென, அந்த அறைகூவலை ஏற்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த மிகப் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அரசு தனது முடிவை கைவிடாவிட்டால், இந்தப் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறசெய்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிப்பதாகவும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.அபிமன்யூ தெரிவித்துள்ளார்.நன்றி தீக்கதிர்.

-BSNLலில் அனைத்து சங்கங்கள் 15-12-16 நாடு தழுவிய வேலை நிறுத்தம்.

அருமைத் தோழர்களே ! BSNL-லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்தியஅரசு மற்றும் BSNL நிர்வாகத்தைக் கண்டித்து BSNLEU மற்றும் அனைத்து சங்கங்களும் மூன்றாம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது. அந்த அறைகூவலை நிறைவேற்ற  15-12-2016-ல் மதுரை SSA முழுவதும்  அனைத்து சங்க ஊழியர்கள் அதிகாரிகள் பங்கேற்ற வேலை நிறுத்தபோராட்டம் நடந்தது, அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து . தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள் .
பழனியில் . . .
 திண்ண்டுக்கல்லில் . . .

Thursday, 15 December 2016

பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒழிக்கும் சதி - பி.அபிமன்யு

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள்டிசம்பர் 15 அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தின்மொபைல் டவர்களைப் பராமரிக்க ஒரு துணை நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்குஒரு குறிப்புஅனுப்பியுள்ளது. மத்திய அமைச்சரவை இதற்குஒப்புதல் அளித்தால், பிஎஸ்என்எல்நிறுவனத்தின் 65000 மொபைல் டவர்களும் புதியதுணை டவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
Image result for P. ABHIMANYU.GS. BSNLEUஇந்த முயற்சியை பிஎஸ்என்எல் நிறுவனத்தில்உள்ளஅனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றன.பிஎஸ்என்எல் நிறுவனம் துவக்கப் பட்ட காலம் முதலிலிருந்தே,தொடர்ந்து அதிகாரத்துக்கு வந்த மத்திய அரசாங்கங்கள் இந்நிறுவனத்தின் பங்குகளை விற்கவும், தனியார்மயமாக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால், பிஎஸ்என்எல்நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் தங்களது ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம், இந்த நடவடிக்கைகளை முடக்கி வைத்தன.எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்ற மத்திய அரசு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் துண்டாடுவதற்கு சாதகமாக முன்வைக்கப் படும் அம்சங்கள் பின்வருமாறு :தொலைத்தொடர்பு துறையில், டவர் மூலமான வர்த்தகம், மிக லாபகரமான வர்த்தகமாகும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது டவர்கள்மூலம் முழுமையாக பலன் பெறவும், அதிக பட்ச லாபமீட்டவும் முடியவில்லை.ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்கப் பட்டால், நிர்வாகம் டவர் வர்த்தகத்தில் கவனம் செலுத்தவும், டவர்களை மிகத் திறமையாக நிர்வகிக்கவும், அதிக பட்ச லாபம் ஈட்டவும் முடியும்.தனது அதிகமான தேய்மான செலவினால், பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2015-16- ஆம் ஆண்டில், தேய்மான தொகைரூ.8816 கோடியாகும். துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டால், இந்தத் தேய்மானத்தின் பெரும் பகுதி துணை நிறுவனத்தின் கணக்குக்குள் சென்று விடும்என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
இதன் விளைவாக, பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு லாபம் ஈட்டும்நிறுவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டால், டவர் வர்த்தகம் கூடுதல் லாபமீட்டுவதாக அமையும் என்று கூறுவது, திசை திருப்புகிற, ஏமாற்றுவாதம் ஆகும். மத்திய அரசின் ஆலோசனையின்படி,பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டுதான் துணை டவர் நிறுவனம் இயங்கவுள்ளது. துணைடவர் நிறுவனத்தில், அதிக லாபமீட்டக் கூடிய டவர்வர்த்தகத்தை அவர்கள் செய்ய முடியும் என்றால், அதை துணை டவர் நிறுவனம் இல்லாமலேயே அவர்களால் செய்ய முடியும்.
எனவே, துணை டவர்நிறுவனம் அமைப்பதற்கான எந்த அடிப்படையும் இல்லை என்பதே உண்மை.மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனவிரோத – தனியார் ஆதரவு கொள்கைகளால்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டமடைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஏறத்தாழ 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வலைக் கட்டமைப்பைவிரிவாக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பது முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் கூற்றாகும். அதுமுற்றிலும் உண்மை. ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், மொபைல் கருவிகள் வாங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் விடுத்த டெண்டர்கள், ஒன்றன் பின் ஒன்றாக அன்றைய அரசால் ரத்து செய்யப்பட்டன.
இந்தக்காரணத்தால்தான், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி தடைப்பட்டு நஷ்டத்தில் சென்றது. ’தேய்மானம்’ என்ற அதிக கணக்குதான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டத்துக்குக் காரணம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே, நிர்வாகமும் ஊழியர்களும் எடுத்து வரும் கடுமையான முயற்சிகளால், பிஎஸ்என்எல் நிறுவனம் மிக நல்ல முன்னேற்றங்களை அடையத் துவங்கியுள்ளது. 2016- செப்டம்பருக்கு முன்பான ஆறு மாதங்களில், ஐந்து மாதங்கள் நாட்டின் அதிகபட்ச மொபைல் இணைப்புகளை பிஎஸ்என்எல் நிறுவனம்தான் வழங்கியுள்ளது. ஏற்கனவே, 3854 கோடி ரூபாய், செயலாக்க லாபத்தை நிறுவனம் ஈட்டிவிட்டது.
துணை டவர் நிறுவனம் அமைக்கப்படாமலேயே, பிஎஸ்என்எல் மீண்டும் லாபம் ஈட்டக் கூடிய நிறுவனமாக மாறி விடும் என்பது உறுதி. தொலைத் தொடர்பு துறையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும்தான் ஒரே பொதுத் துறைநிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. விஎஸ்என்எல்நிறுவனம் ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்டு விட்டது. எம்டிஎன்எல் நிறுவனத்தின் பங்குகள், 46.5சதவீதம் விற்கப்பட்டு விட்டன. எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளையும் விற்பதற்கு மத்திய அரசு மூர்க்கத்தனமாக விரும்புகிறது. துணை டவர் நிறுவனம் அமைப்பது என்பது, பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கான புறவாசல் வழியே தவிர வேறில்லை.
துணை டவர் நிறுவனம் 100 சதவீதம் அரசு நிறுவனமாக இருக்கும் என்றும், அது முழுமையாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்தாகவே இருக்கும் என்றும் மத்திய அரசு கூறும் இனிப்பான வார்த்தைகளை நம்புவதற்கு ஊழியர்கள் தயாராக இல்லை. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதுதான் இன்றைய மத்திய அரசின் கொள்கையாகும். பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கான வரை படம் தயாரிப்பதுதான் நிதி ஆயோக்அமைப்பின் முழு நேரப் பணி என்பது அனைவரும்அறிந்த பகிரங்க ரகசியமாகும். துணை டவர் நிறுவனம் அமைக்க அனுமதிக்கப்பட்டால், கேந்திர பங்கு விற்பனை விரைவில் செய்யப்பட்டு, ஒரு தனியார்பங்குதாரர் உள்ளே திணிக்கப்படுவார்.
அதன் பின்,துணை டவர் நிறுவனம் முற்றிலும் தனியார் மயமாக்கப்படுவதற்கு நாட்கள் அதிகம் ஆகாது. இன்றையசூழ்நிலையில், மொபைல் டவர்கள்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயிர் ஆதாரமாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டவர்கள் அதனிடமிருந்து பறிக்கப்பட்டால், நிறுவனம் இயற்கையாகவே மரணமடைந்து விடும். எனவே, பிஎஸ்என்எல்நிறுவனத்திடமிருந்து அதன் மதிப்பு மிக்க மொபைல் டவர்களைப் பறித்துக் கொள்ள மத்திய அரசாங்கத்தை அனுமதிப்பதில்லை என பிஎஸ்என்எல்நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனம் துவக்கப்பட்டதிலிருந்து, மத்திய அரசாங்கத்தின் கடுமையான தாக்குதல்களிலிருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாக்க, ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. கேபிள்களைத் திறந்து விடுவது, பங்கு விற்பனை, விருப்ப ஓய்வு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு முயற்சிகளை ஊழியர்கள் வெற்றிகரமாகத் தடுத்துநிறுத்தி உள்ளனர். இப்போதும், துணை டவர்நிறுவனம் அமைத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் துண்டாடி ஒழிக்க முற்படும் சதித் திட்டத்தை ஊழியர்கள் நிச்சயமாக தோற்கடிப்பார்கள்.
(கட்டுரையாளர்: பிஎஸ்என்எல்யு -பொதுச் செயலாளர்)...நன்றி தீக்கதிர் 

வெற்றிகரமாக்குவோம் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை நமது BSNLன் உயிர் நாடியாம் மொபைல் டவர்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு அரசு துணை டவர் நிறுவனம் அமைப்பதை கைவிடக்கோரி டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம். நமது உயிரினும் மேலான நம் நிறு வனத்தை பாதுகாப்போம்.


மக்கள் சேவையில் தொடர்ந்து BSNL . . .




டிச. 15 தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் . . .

காவிரிக் கரையில் பிறந்தாய், கங்கை தீரத்தில் பயின்றாய், தேசவிடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்தாய், கங்கை நதியில் படகில் ஏறி சைமன் கமிஷனை விரட்டினாய், காங்கிரசிலிருந்து சோசலிஸ்டாகி கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தாய், சாதி மறுப்புத் திருமணம் செய்து பெரியாரையும் பாராட்ட வைத்தாய், தமிழில் பட்ஜெட் உரை நிகழ்த்தி சட்டமன்றத்தில் சாதனை செய்தாய், பன்மொழிப் புலமை பெற்றாய், நாடெங்கிலும் பொதுமை பேசினாய், மும்பைத் தமிழரை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் முழங்கினாய், கோவில் அறங்காவலர் தேர்தலில் தலித்துக்கு வாக்குரிமை பெற்றாய், தொழிலாளர் பெரும் கூட்டத்தின் தோன்றாத் துணைவனாய் ஆனாய், பொதுவுடமை லட்சியத்துக்காய் வாழ்நாளை அர்ப்பணித்தாய், இந்தியப் புரட்சி வெல்லும் என நம்பிக்கையோடு நடைபோட்டாய், மார்க்சியம் வெற்றிபெறும், நாங்கள் வெல்வோம் என்றாய், உங்கள் லட்சியம் வெல்ல நாங்கள் உறுதியேற்கிறோம்.

Tuesday, 13 December 2016

Image result for subramanya bharathi birthday in tamil


டிசம்பர் -13, மிலாடி நபி நல் வாழ்த்துக்கள் ....

அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துக்கள் ....

டிசம்பர் -11, தோழர் K.G.போஸ் நினைவு தினம்...

நான் இந்த உலகில் உயிர் வாழ விரும்பிகின்றேன். இங்கு நடக்கும் சகல அநீதிகளையும் எதிர்த்து அவற்றுடன் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து போராட விரும்புகின்றேன். இந்தப் போராட்டத்தில் நான் தனி மனிதன் இல்லை. என்னுடன் ஆயிரம் ஆயிரம் தோழர்கள் இருக்கின்றனர். அவர்களே என் உத்வேகத்தின் ஜீவ ஊற்றுக்கள்...தோழர் K. G. போஸின் கடைசிக் கடிதத்திலிருந்து...

Thursday, 8 December 2016

BSNL-லில் 149 ரூபாய்க்கு புது திட்டம். . .

 அருமைத் தோழர்களே ! சந்தையில் நிலவும் போட்டி சூழலுக்கு ஏற்ப, புதிய திட்டத்தை நமது BSNL நிறுவனம் 01.01.2017 முதல் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, ரூ.149.00 க்கு அளவில்லா அழைப்புகள் (Unlimitted Voice calls to any network) மேற்கொள்ளலாம். 300 MB டேட்டா உபயோகப்படுத்தலாம். 

BSNL தேர்விலும் அரசியல் தலையிடு . ..

அருமைத் தோழர்களே! சமீபத்தில் நடந்து முடிந்த BSNL தேர்விலும் அரசியல் தலையிடு . ..நடந்துள்ளது இது குறித்த மத்திய சங்க தகவல் பற்றி நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

Monday, 5 December 2016

எப்போதும் போல் முன் நிற்கிறது போடி கிளை ...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU அகில இந்திய சங்க 8வது மாநாட்டை ஒட்டி எதிர்வரும் 8-12-16 அன்று அனைத்து கிளைகளிலும் கொடி ஏற்றி , தோழர்  K.G போஸ் நினைவு தினத்தையும் அனுஷ்டிக்க வேண்டும்  என்ற  நமது BSNLEU முடிவை அமல் படுத்துவதில்  எப்போதும் போல் முன் நிற்கிறது போடி கிளை.... நமது வாழ்த்துக்கள்.. ...

டிச-5,தோழர் நெல்சன் மண்டேலா நினைவு தினம்...

 


Saturday, 3 December 2016

டிசம்பர் -3, சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் . . .


BSNLEU 8th அகில இந்திய மாநாட்டு கொடியேற்றம்...


08.12.16 மாவட்ட செயற்குழு அழைப்பு ...



BSNL- ஐ தகர்த்திட மோடி அரசு முடிவு : கண்டித்து BSNLஊழியர்கள் வேலைநிறுத்தம்.

Image result for P.Abhimanyu G.S BSNLEUமத்திய அரசு, தற்சமயம் BSNL நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் மொபைல் டவர்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட மேற்கொண்டுள்ள  இழிமுயற்சிகளை கண்டிக்கும் விதத்தில், BSNL நிறுவனத்தின்கீழ் இயங்கிடும் அலுவலர்களும், ஊழியர்களும் வரும் 2016 டிசம்பர் 15 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள விருக்கிறார்கள்.
இது தொடர்பாக BSNLஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. அபிமன்யு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் கூறப்பட்டிருப்பதாவது:
“2016 டிசம்பர் 15 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள BSNL நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் ஒட்டுமொத்த  ஊழியர்களும், அலுவலர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள். அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தகர்த்திட மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் BSNL நிறுவனத்தின் 65 ஆயிரம் மொபைல் டவர்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக ஒரு குறிப்பினை அனுப்பி இருக்கிறது.  அரசின் இந்த நடவடிக்கையை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செயல்படும் அனைத்து ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்களும் எதிர்த்துள்ளன.
BSNL நிறுவனம்தான் பொதுத்துறை நிறுவனத்தில் முழுக்க முழுக்க 100 சதவீதம் அரசு நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. VSNL ஏற்கனவே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. எம்டிஎன்எல் நிறுவனத்தில் 46.5 சதவீதப் பங்குகள் ஏற்கனவே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்போது அதேபோன்று BSNL நிறுவனத்தையும் தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. மொபைல் டவர்களுக்கு என்று ஒரு துணை அமைப்பு ஏற்படுத்த இருப்பது, பின்னர் அதனைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான சூழ்ச்சியே தவிர வேறல்ல.
இதுதொடர்பாக அரசாங்கத்தின் இனிப்பு கலந்த வார்த்தைகளைக் கேட்க ஊழியர்கள் தயாரில்லை. பொதுத்துறை நிறுவனங்களை எப்படி எப்படியெல்லாம் தனியாரிடம் தாரை வார்த்திடலாம் என்பதற்காக நிதி ஆயோக்  ஒரு வரைவினை தயார்செய்து அரசாங்கத்திற்குத் தந்திருப்பது ஊரறிந்த ரகசியம். இன்றைய நிலையில், BSNLநிறுவனத்தைப் பொறுத்தவரை மொபைல் டவர்கள் அதன் உயிர்நாடியாகும். அதனை BSNL நிறுவனத்திடமிருந்து பறித்துவிட்டால், பின் BSNL இயற்கையாகவே மரணித்துவிடும். எனவே, அரசின் இந்நடவடிக்கையை BSNL நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் எதிர்த்திடத் தீர்மானித்திருக்கின்றன.
எனவேதான் அரசின் இந்த சூழ்ச்சியான நடவடிக்கையை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்திட அனைத்து சங்கங்களும் தீர்மானித்துள்ளன.”இவ்வாறு பி.அபிமன்யு அறிக்கையில் கூறியுள்ளார்.

Friday, 2 December 2016

டிசம்பர் -8, தோழர் K.G.போஸ் நினைவு தினம்...

நான் இந்த உலகில் உயிர் வாழ விரும்பிகின்றேன். இங்கு நடக்கும் சகல அநீதிகளையும் எதிர்த்து அவற்றுடன் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து போராட விரும்புகின்றேன். இந்தப் போராட்டத்தில் நான் தனி மனிதன் இல்லை. என்னுடன் ஆயிரம் ஆயிரம் தோழர்கள் இருக்கின்றனர். அவர்களே என் உத்வேகத்தின் ஜீவ ஊற்றுக்கள்...தோழர் K. G. போஸின் கடைசிக் கடிதத்திலிருந்து...
நமது அன்பிற்குரிய தலைவர் கே.ஜி.போஸ் நம்மை விட்டு பிரிந்து 42 ஆண்டுகள் உருண்டோடி விட்டன . நமது BSNL நிறுவனத்தை காக்கும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது  மிக சாலச் சிறந்ததாகும்.நிறுவன பாதுகாப்பு மற்றும் ஊழியர் நலன் பாதுகாப்புகளை தொடர்ந்து KGB வழியில் முன்செல்வோம்...BSNL-யை பாதுகாப்போம்...BSNLEUவைவளர்ப்போம்...ஊழியர்நலன்பேணுவோம்...
08-12-16 KGB நினைவு நாளில் சூளுரை ஏற்போம். . .

டிசம்பர்-2 போபால் விஷவாயு நினைவு தினம்...

அருமைத் தோழர்களே ! 1984 ஆம் ஆண்டு டிசம்பர்-2 அன்று நடைபெற்ற கோரமான போபால் விஷவாயு நினைவு தினம்....
போபால் விஷவாயுக் கசிவுவழக்கின் முதல்குற்றவாளி வாரன்ஆண்டர்சன்இறந்து விட்டார்.ஆனால்அவர்இறந்த செய்தி ஒருமாதம் கழித்து ரகசியமாக வெளியாகிஉள்ள விதமேபோபால் விஷ வாயு விபத்தில் அவருக்குஉள்ள பெரும் பங்கைச் சுட்டிக்காட்டுவதுபோலஇருக்கிறது.அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணம் வெரோ கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் செப்டம்பர் 29-ம்தேதி அவர் இறந்திருக்கிறார்போபால் விபத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டு ஜாமீனில் அமெரிக்கா தப்பிச் சென்ற அவர்அதன்பிறகு கனவிலும் இந்தியாவை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
மோசமானவிபத்து1984- மத்தியப் பிரதேசத் தலைநகரம் போபாலில் டிசம்பர் 2-ம் தேதி இரவும் 3-ம் தேதி அதிகாலையும் அமெரிக்க உரநிறுவனமான யூனியன் கார்பைடில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டதுஉலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்துகளில்ஒன்றாகக் கருதப்படும் அந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான மீதைல் ஐசோசயனேட் வெளியானதுஅரசுப் பதிவுகளின்படிஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போயினர், 5 லட்சம் பேர் காயமடைந்தனர்இந்தத் தொழிற்சாலை ஏற்படுத்திய இழப்புகளுக்குஇன்றுவரை முறையான இழப்பீடு வழங்கப்படவில்லைவாழ்வை இழந்த ஆயிரக்கணக்கானோர் 30 ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர்.
தப்பிய ஆண்டர்சன்
அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளராகவும்தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தவர்தான் வாரன்
ஆண்டர்சன்1984 டிசம்பர் 6-ம் தேதி அவர்கைதுசெய்யப்பட்டார்உடனடியாக ஜாமீனில்வெளிவந்தஆண்டர்சன்அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்மத்திய அரசுஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் தப்பிச் சென்ற ஆண்டர்சன்அதற்குப் பிறகு இந்திய மண்ணை மிதிக்கவில்லைமத்தியஅரசும் அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
தீராத சீர்கேடு
விபத்துக்குப் பிறகு யூனியன் கார்பைடு நிறுவனத்தை டோகெமிகல்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதுஆனால்இப்போதுவரை யூனியன் கார்பைடு தொழிற்சாலை இருந்தஇடத்தில்உள்ள ஆபத்தான ரசாயனக் கழிவுகள் அகற்றப்படவில்லை
இன்றைக்கும் போபால் நகரத்தின் நிலமும்நிலத்தடி நீரும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனவாரன் ஆண்டர்சன் ஒருகார்பரேட் கிரிமினல்வாழ்க்கை முழுவதும் ஓடி ஒளிந்துகடைசியில் தலைமறைவாகவே அவர் இறந்து போனதுஅவரைப்போன்ற மற்ற கார்பரேட் கிரிமினல்களுக்குப் பாடமாக அமையும்” என்கிறார் போபால் தகவல்செயல்பாட்டுக் குழுவின் உறுப்பினர்சதிநாத் சாரங்கி.

கார்ட்டூன் . . . கார்னர் . . .


ஆழ்ந்த இரங்கல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்
தோழர்ஆர். நல்லகண்ணூ அவர்களின் 
துணைவியார்திருமதிரஞ்சிதம் அம்மையார்(85)
அவர்கள் மறைவுக்கு
ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறோம்.