Monday 30 September 2013

அனைத்து நிறுவனங்களின் எண்களையும் அழைக்கும் வசதி

மற்ற நிறுவனங்களின் இணப்புகளுக்கும் தொடர்பு வசதி
போன் மெகானிக் உட்பட தேவையின் அடிப்படையில் மூன்றாம் பிரிவு நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு மாதம் ரூ.200 வரம்பு அடிப்படையில் சிம் வழங்கப்பட்டுள்ளது. அதில் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களின் இணைப்புகளோடு பேசும் வசதி இல்லை. இதனால், பிற சேவைதாரர்களோடு தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகளுக்கு வழங்கப் பட்டுள்ளதைப் போன்று அனைத்து நிறுவனங்களின் எண்களையும் அழைக்கும் வசதி மூன்றாம் பிரிவு மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நமது பொதுச் செயலர், நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நமது மத்திய சங்க G.H Q செய்தி . . .

IDA increase is 6.6% from 01-10-2013.
It is learnt that the IDA increase, that has become due w.e.f. 01-10-2013 is 6.6%. With this IDA increase, the total IDA that has become payable from 01-10-2013 will be 85.5% ( 78.9% + 6.6 % ).  

IDA அதிகரிப்பு 01-10-2013 இருந்து 6.6% ஆகும்.
IDA 01-10-2013 முதல் 6.6% ஆகும். இந்த IDA அதிகரிப்பு, 01-10-2013 முதல் அமுல்படுத்தப்படுள்ளது மொத்த I.D.A. (78.9% + 6.6%) 85.5% இருக்கும்.

உண்மையே உன் விலை என்ன?

அருமை தோழர்களே !
சில NFTE - WEBSITE-களில் 29.09.2013 அன்று நடைபெற்ற சென்னை  சொசைட்டி General Body  கூட்டத்தில் தோழர். வீரராகவன்  CITU போக்குவரத்து ஊழியர்களால் தாக்கப் பட்டதாக வழக்கம் போல் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டுள்ளார்கள். சொசைட்டி பேரவை கூட்டம் நடைபெற்ற இடம் ஸ்ரீரிவாரூ வெங்கடசலபதி பாலஸ்" ஆகும்.  இம்மண்டபம் சென்னை வானரகம் பகுதியில் உள்ளது.  சொசைட்டி கூட்டத்திற்கு BSNL-ID.CARD உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். 10-ற்கும் மேற்பட்ட கவுண்டர்கள் மூலமாக காவல் துறையினுடைய மேற்பார்வையோடு நடந்தேறியது
{நமது BSNLEU  சங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்}.  வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக பனி ஓய்வில் சென்றுள்ள தோழர் C.K. மதிவாணன் உட்பட வெளியில் தான் நிற்க வேண்டிஇருந்தது.   ஆகவே, வெளியாட்கள் குறிப்பாக CITU தோழர்களை வைத்து தாக்கியதாக கூறுவது கோயபல்ஸ் வேலை என்ற உண்மை புலப்படும்.
நடைபெற்ற பேரவையில் 40 தோழர்கள் பேச அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
நியாயப்படி தமிழகத்திற்கு 11 இயக்குனர்களும், சென்னைக்கு 7 இயக்குனர்களும்  விகிதாசார அடிப்படையில் பிரித்திருக்க வேண்டும். இருப்பினும் ஒற்றுமை கருதி தமிழ்நாட்டிற்கு 10 இயக்குனர்களும், சென்னைக்கு 8 இயக்குனர்கள் என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனையும் BSNLEU சங்கம்தான் தந்தது என்பது குறிப்பிட தக்கது.  மேற்கண்டபடி தேர்ந்தெடுக்கப்பட்ட 18 இயக்குனர்களும், 2 பெண் இயக்குனர்களும், 1 SC/ST  இயக்குனர்களையும் நியமனம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
30.09.2013 அன்று  நடைபெற்ற RGB கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எட்டப் பட்டுள்ளன.
1. 1.10.2013 முதல் வட்டி விகிதம் 16.5%-லிருந்து 15.5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
2. அக்டோபர் 2013 சம்பளத்தில் DIVIDEND  12% வழங்கப்படும்.
3. ORDINARY லோன் 4 லட்சத்திலுருந்து 5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. இது ஜனவரி 2014 முதல் அமுலுக்கு வரும்.
4. FAMIL WELFARE SCHEME  பிடித்தம் ருபாய் 600-லிருந்து 800-ஆக உயர்த்தப் பட்டுள்ளதால்இன்சூரன்ஸ் 3 லட்சத்திலுருந்து 4 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
இம்முடிவுகள் நமது BSNLEU  சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
எஸ். சூரியன் - மாவட்ட செயலர்.

27 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் ...

உத்தர பிரதேசத்தில், மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின் போது, பர்ஹாஜ் தொகுதி, எம்.எல்..,வாக இருந்தவர், ராம்பிரசாத் ஜெய்ஸ்வால். மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த, பாபு சிங் குஷ்வாஹாவுடன் சேர்ந்து, மத்திய அரசின் சுகாதார திட்டங்களில், ஏராளமான முறைகேடுகளை செய்து, மோசடியாக பணம் சம்பாதித்தார்.
மத்திய அரசு திட்டங்களை, .பி.,யில் செயல்படுத்தும் தனியார் நிறுவனங்களிடம், மூன்று சதவீத கமிஷன் பெற்று, பணிகளை அந்த நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். இதில், அமைச்சர் குஷ்வாஹாவுக்கும், பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகளை விசாரித்த, சி.பி.., முன்னாள் எம்.எல்.., ஜெய்ஸ்வால் மற்றும், முன்னாள் அமைச்சர், குஷ்வாஹா மீது வழக்கு தொடர்ந்து, அவர்கள் மீதான குற்றங்களில், குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்தது.
இவர்கள் மீதான நிதி முறைகேடு வழக்குகளை, அமலாக்க இயக்குனரகமும் விசாரித்து வந்தது. அதில், சி.பி.., தாக்கல் செய்த வேண்டுகோளின் படி, முன்னாள் எம்.எல்.., ஜெய்ஸ்வால் சொத்துகளை பறிமுதல் செய்ய, முடிவு செய்யப்பட்டது.

அம்மாநிலத்தின் பல இடங்களில் உள்ள, ஜெய்ஸ்வாலுக்கும், அவர் மகனுக்கும் சொந்தமான பண்ணை வீடுகள், கட்டடங்கள், விவசாய நிலங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 27 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரை அருகே பரிதாபம் : பங்குச்சந்தையில் ஏமாந்த குடும்பம் தற்கொலை

பங்குச்சந்தையில் பணம் போட்டால் கோடீஸ்வரனாகலாம், பணம் கொழிக்கும் என்ற ஆசைவார்த்தைகளை நம்பி பங்குச்சந்தையில் ரூ.8லட் சம் வரை முதலீடு செய்த நபர் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார்.அவர் மட்டுமல்லாது அவரது தாயும், தந்தையும் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டனர்.

மதுரை தெற்குதாலுகா விரகனூரை அடுத்துள்ள சவுராஷ்டிராபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணாராம் (55) இவரது மனைவி பிருந்தா (46), மகன் உபேந்திரன் (28), உபேந்திரன் , தனது நண்பர்கள் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார்.பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியடைந்ததால் அதில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார். பணத்தை கொடுத்த நண்பர்கள் பணத்தை திரும்பக்கேட்டுள் ளனர்.பங்குச்சந்தையை நம்பி ஏமாற்றமடைந்த உபேந்திரன், மற்றும் அவரது தந்தை கிருஷ்ணராம், பிருந்தா ஆகியோர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சிலைமான் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sunday 29 September 2013

29.09.2013 வரவேற்பு குழுவின் நிர்வாகிகளின் முதற்கூட்டம்

அருமைதோழர்களே!அனைவருக்கும்வணக்கம் திண்டுக்கல்லில் அமைக்கப்பட்ட நமது மதுரை மாவட்ட மாநாட்டு வரவேற்பு குழுவின் நிர்வாகிகளின் முதற்கூட்டம் 29.09.2013 அன்று வரவேற்பு குழுவின் செயல் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா  தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.அக்கூட்டத்தில் 18 தோழர்கள் கலந்து கொண்டனர்.மாநில அமைப்பு செயலர் தோழர். சி.செல்வின்சத்தியராஜ் உடன் இருந்தார்.நிர்வாகிகள் கூட்டம் மாநாட்டை சிறப்பாக நடத்து வதற்கான யுக்திகளை வகுத்தது.திண்டுக்கல் ரெவின்யு மாவட்டத்தில் உள்ள 10 கிளைகளின் செயலர்களை கொண்ட மேலும் ஒரு கூட்டத்தை கூட்டி இன்னும் விரிவாக திட்டமிட்டு மாவட்ட மாநாட்டை அனைவரும் பாராட்டும் வண்ணம்,வரலாற்று பதிவை ஏற்படுத்தும் வண்ணம் நடத்திட உறுதி பூண்டது.
அதன்பின், மார்க்சிஸ்ட்கட்சி சட்ட மன்ற உறுப்பினரான மரியாதைக்குரிய தோழர்.K.பாலபாரதி.MLA,அவர்களை நமது BSNLEU மாவட்ட செயலர் தோழர்.S.சூரியன் உள்ளிட்ட வரவேற்புகுழு சந்தித்து மாநாட்டின் வரவேற்பு குழுவின் தலைமை பொறுப்பினை ஏற்று மாநாட்டினை வழிநடத்தி தரவேண்டுமாய் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.தோழர்.கே.பாலபாரதி அவர்களும் மனமுவந்து மாநாட்டினை சிறப்பாக திண்டுக்கல்லில் நடத்துவோம் என உறுதி படக்கூறி, வாழ்த்துக் கூறினார்


தோழர்.K.பாலபாரதி MLA அவர்களுடன்  நமது வரவேற்புகுழு   

30.09.2013 மாவட்ட செயற்குழு கூட்ட அழைப்பு . . .


விழிப்புணர்வு நடைப்பயணத்தில் . . .

உலக இருதய தினத்தையொட்டி மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் பங்கேற்றோர். 

கார்ட்டூன். . .கார்னர். . .எம்.பி., ராவ் இந்தர்ஜித் சிங்கிடம், விளக்கம் . . .

காங்கிரசில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ள, எம்.பி., ராவ் இந்தர்ஜித் சிங்கிடம், விளக்கம் கேட்டுள்ளது, கட்சி மேலிடம். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அரியானா மாநிலத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை வளைத்து போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார், குர்கான் தொகுதி, காங்கிரஸ், எம்.பி., ராவ் இந்தர்ஜித் சிங். 
மேலும், ராபர்ட் வாத்ரா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், இனிமேலும் கட்சியில் நீடிப்பது சரியல்ல என கூறி, பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ரேவாரி என்ற இடத்தில், பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இதனால், கட்சி மேலிடம் கலக்கம் அடைந்தது; சோனியாவின் மருமகன் குறித்து அப்பட்டமாக, புகார் கூறிய,எம்.பி.,மீதுகாட்டம்கொண்டது. 
டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்திலிருந்து, நேற்று, ராவ் இந்தர்ஜித் சிங்கிற்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உங்களின் ராஜினாமா கடிதம், இன்னமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அக்டோபர், 7ம் தேதிக்குள், ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை என்றால், பொதுக்கூட்டத்தில் நீங்கள் அறிவித்த படி, கட்சியிலிருந்து விலகியதாக கருத நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.