அருமைத் தோழர்களே ! 1970-ம் ஆண்டு தோழர் P.T. ரணதிவே அவர்களை தலைவராகவும், தோழர்.P. ராமமூர்த்தி அவர்களை பொதுச் செயலராகவும் கொண்டு உதயமானது CITU ஸ்தாபனாகும். இன்று CITU சங்கத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்துள்ளன. இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு வழிகாட்டக் கூடிய மாபெரும் அமைப்பாக CITU விரிந்து பறந்து வளர்ந்துள்ளது .CITU உலக தொழிலார்கள் அமைப்பான WFTU-ல் இணைக்கப்பட்ட அமைப்பாக உள்ளது. மே-30, CITU 46-வது அமைப்பு தினமாகும் . . .CITU சங்கத்திற்கு புரட்சி வாழ்த்துக்களை நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.
Monday 30 May 2016
கட்டணங்கள் கடுமையாக உயரும் சேவை வரி 15 % அதிகரிப்பு.
ஜூன் 1 முதல் சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால் பலவிதமான கட்டணங்கள் கடுமையாக உயரப் போகின்றன.கடந்த, 2015ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சேவை வரியை, 12.36 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார். அது கடந்த ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது. அதன்பின், நவம்பர் 1 முதல், ‘தூய்மை பாரதம்‘ திட்டத்துக்காக, 0.5 சதவீதம் கூடுதலாக சேவை வரி விதிக்கப்படுகிறது.இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ‘கிரிஷி கல்யாண்’ எனப்படும், வேளாண் மேம்பாட்டு திட்டங்களுக்கு செலவிடுவதற்காக, சேவை வரி, மேலும் 0.5 சதவீதம் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி, ஜூன் 1 முதல் சேவை வரி விகிதம் மீண்டும் உயர்கிறது. அது இனி, 15 சதவீதமாக இருக்கும்.சேவை வரி உயர்வதால், கோடிக்கணக்கான மொபைல் போன் வாடிக்கையாளர்கள், இனி கூடுதல் கட்டணத்தை செலவிட வேண்டும். அதேபோல, குளிர்சாதன வசதி உடைய உணவகங்களில் சாப்பிடுவோரும், ‘பார்’களுக்கு செல்வோரும் கூடுதலாக செலவிட வேண்டும். மேலும், ஓட்டல்களில் தங்கும் கட்டணம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கும் போது பத்திரப்பதிவு கட்டணம், விமான கட்டணம், கிரெடிட் கார்டுசேவை கட்டணம் உள்ளிட்டவையும் அதிகரிக்கின்றன.நிறுவனங்கள் மீதான வரி மக்கள் தலையில் ஏற்றப்படும் கொடுமை
பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ள சில தனியார் துறைகளிடம், அவர்கள் அளிக்கும் சேவைக்காக மத்திய அரசு, சேவை வரி வசூலிக்கிறது. ஆனால், இதை நுகர்வோர் தலையில் தான் அந்த நிறுவனங்கள் கட்டுகின்றன. சேவை வரி, 1999ம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் கீழ், மறைமுக வரி விதியாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.மத்தியில், பாஜக ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில், சேவை வரி 2.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.நாட்டின் சுகாதாரம், விவசாய வளர்ச்சி போன்ற பிரதான துறைகளில் மத்திய அரசு தனது பொது முதலீட்டைப் படிப்படியாக சுருக்கிக் கொண்டது.அதற்குப் பதிலாக மக்களின் தலையில் வரிச் சுமையை ஏற்றி, அதற்கான செலவினங்களை ஈடுகட்டப் போவதாக கூறுகிறது.மத்திய அரசு தூய்மைபாரதம் என்ற பெயரில் செஸ் வரியாக 0.5 சதவீத வரியை உயர்த்தியதைப் போல கிரிஷி கல்யான் செஸ் மூலம் சேவை வரியின்அளவு 15 சதவீதமாக உயர்ந்து மக்களின் பணத்தைத் தொடர்ந்து பறிக்க தயாராகிவிட்டது. இந்தவரிகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்காக என்றாலும், வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை வரியாக மட்டுமே செலுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜூன் 1ஆம் தேதி முதல் கிருஷி கல்யாண்வரி உள்பட 15 சதவீத சேவை வரி அமலாக்கப்படுவதால் மொபைல் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்தும் போதும் நாம் 15 சதவீதம் என்ற அதிகளவிலான சேவை வரியைச் செலுத்த வேண்டி இருக்கும்.
ஜூன் 1ஆம் தேதிக்குப் பின் ஹோட்டல், பிட்சாஹட், டாமினோஸ் போன்ற உணவகங்களிலும் 15 சதவீத சேவை வரி வசூல் செய்யப்படும்.பயணம் விமான டிக்கெட், ஆன்லைன் மூலம் பஸ் டிக்கெட் புக்கிங், ரயில் டிக்கெட் புக்கிங் எனப் பல்வேறு பயணச் சேவைகளிலும் 15 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும். குறிப்பாகப் பிசினஸ் கிளாஸ் பயணிகளின் விமானக் கட்டணங்கள் உயரும்.இன்சூரன்ஸ், வங்கியில் லோன் பெறும்போது சேவைக் கட்டணம் என அனைத்து விதமான வங்கிமற்றும் இன்சூரன்ஸ் சேவைகளுக்கு 15 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது.சேவை வரி உயர்வினால் கேப் மற்றும் டாக்ஸிகட்டணங்களும் உயரும். இதனால் ஆன்லைன் மற்றும் மொபைல் செயலி மூலம் டாக்ஸி புக் செய்வது கடும் கட்டண உயர்வாக மாறும்.டிடிஎச் சேவை, பியூட்டி பார்லர், இன்சூரன்ஸ், பங்குச் சந்தையின் வர்த்தகக் கட்டணங்கள், கொரியர் சேவை, சலவை சேவை ஆகியவற்றின் கட்டணங்களும் உயர உள்ளது.அதுமட்டுமல்லாமல் குளிர்பானங்கள், பிளாஸ்டிக் பைகள், மதுபானம், சிட் ஃபண்ட், லாட்டரி, இசைக் கச்சேரி, திரைப்படம் மற்றும் தீம் பார்க் கட்டணங்களும் உயரப் போகின்றனசிகரெட் மீதான சேவை வரியை மீண்டும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் சிகரெட் விலை ஜூன்1ஆம் தேதி முதல் உயரும் எனத் தெரிகிறது.
அவர் ஒரு பாடப்புத்தகம்-மே 30- தோழர் K.ரமணி நினைவு நாள்.
1930 களில்
கோவை பஞ்சாலை தொழிற்சங்க இயக்கத்தின்
செங்கொடி இயக்கத்தின் புதல்வராக மலர்ந்தவர் தோழர் கே.ரமணி.
எவ்வளவு இடையூறு எவ்வளவு பெரிய
அளவில் வந்தாலும் கலங்காமல் உறுதியுடன் கடமையாற்றும் வல்லமை படைத்தவர். தமிழக
தொழிற்சங்க இயக்க முன்னோடிகள் வ.உ.சிதம்பரனார், ஜீவா,பி.ராமமூர்த்தி போன்றோரின்
வழிகாட்டுதலில் போராட்டங்கள் முன்னெடுத்து சென்றவர். தேச விடுதலைப் போராட்டத்தில்
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களையும், விடுதலைக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின்
அடக்குமுறைகளையும் எதிர்த்து செங்கொடி இயக்கத்தை கட்டிக்காத்த தீரர். ஏழு ஆண்டு
காலம் கடும் சிறை வாழ்க்கை.
மூன்றாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையை
சந்தித்த போராளி. பஞ்சாலை, மின்சாரம்.தேயிலை தோட்ட தொழிற்
சங்கங்களை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். 1967 முதல் 1971 வரை நாடாளுமன்ற உறுப்பினர்.
1977 முதல்
1991 வரையில் தொடர்ந்து நான்கு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினர் என மக்கள் பிரதிநிதியாக தொழிலாளி வர்க்க உரிமைகளை உறுதியோடு முன்வைத்தவர். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் தோழர் கே.ரமணி 2006 மே 30
அன்று தனது 90வது வயதில் காலமானார்.அறுபதாண்டு காலத்திற்கு மேலான பொதுவாழ்க்கையில் எளிமை, தத்துவத்தின் மீதான பற்று கொள்கையில் உறுதி கொண்டு போராட்டக் களத்தில் தளபதியாய், ஓய்வறியா உழைப்பாளியாய் திகழ்ந்தவர்.
Sunday 29 May 2016
BSNLயை ஆதரிக்கும் கேரளா முதல்வர் தோழர்.பினரயி விஜயன்...
அருமைத் தோழர்களே ! நமது BSNL உள்ளிட்ட பொதுத்துறைகளை தொடர்ந்து ஆதரிப்பார்கள் இடதுசாரிகள் என்பதற்க்கு மேலும் சமீபத்திய உதாரணமாக,கேரளா
முதல்வர் தோழர்.பினரயி விஜயன்
28-05-2016 அன்று, நமது கேரளா CGM திரு
ஜோதிசங்கரிடமிருந்து BSNL சிம் ஒன்றை பெற்றுக்
கொண்டார். 2006-11ல் கேரளவை ஆண்ட
இடது சாரிகள் அரசாங்கம் அனைத்து
கேரளா அரசு அலுவலகங்களில், பொதுத்துறை அலுவலகங்களில்
BSNL இணைப்புகளை கட்டயாமாக்கியது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று..வாழ்த்துக்களுடன், S.சூரியன்---D/S-BSNLEU.
Friday 27 May 2016
Thursday 26 May 2016
மத்திய சங்க செய்தி குறித்து மாநில சங்க சுற்றறிக்கை ...
அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மத்திய சங்க செய்தி குறித்து நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது ... விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.
Tuesday 24 May 2016
ஒருவழியாக . . . GPF Fund ... வந்துவிட்டது .
அருமைத் தோழர்களே! கார்பரேட் அலுவலகத் திலிருந்து , நமது தமிழ் மாநிலத்திற்கு ஒருவழியாக . . . GPF Fund ... 24-05-16 இன்று வந்துவிட்டது . ஆகவே, அநேகமாக 25-05-16 அன்று GPF விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் GPF பட்டுவாடா செய்யப்படும் என்பதை நமது BSNLEU மதுரைமாவட்ட சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.--என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் , D/S-BSNLEU.
Monday 23 May 2016
நமது மத்திய, மாநில சங்க செய்திகளின் -சுற்றறிக்கை ...
அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மத்திய, மாநில சங்க செய்திகளை நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது ... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.
Friday 20 May 2016
Tuesday 17 May 2016
7வது சங்க அங்கீகாரத் தேர்தல் ஒரு ஆய்வு --தோழர் VAN ...
In the VII Membership Verification in BSNL, the following
circles gave more than 50% of total votes to BSNLEU:
1.N.E.I (81.19%) 2. Inspection Circle (76.09%), 3. Assam
(74.59%), 4. TF Kolkata (70.16%), 5. BRBRAITT (70.00%), 6. W,Bengal (68.85%) 7.
Telecom Stores Kolkata (67.81%) 8. N.E.II (66.35%) 9. Kerala (64.96%) 10.
Kolkata Telephones (62.33%) 11. M.P.(55.65%) 12. Uttarakhand (55.64%) 13. H.P.
(55.63%) 14. Rajasthan (54.68%) 15. Karnataka (51.76%) 16. Punjab (51.75%) 17.
A.P. (50.76%) 18. Maharashtra (50.55%) 19. UP (West) (50.30%)
In addition to the above, Circles which have got number one
position in the circle:
1. A&N
Islands (48.00%) 2. Gujarat (39.18%) 3. Haryana (46.00%) 4. J&K (43.65%) 5.
Odisha (46.69%) 6. TF Jabalpur (49.69%) 7. TF Mumbai (38.30%) 8. UP(East)
(39.54%)
The Circles where we could not get the first position:
1. ALTTC
(34.41%) 2. Bihar (27.59%) 3. BSNL C.O.(18.75%) 4. Chennai TD (36.53%) 5.
Chhattisgarh (37.25%) 6. Jharkhand (18.87%) 7. NTR (21.18%) 8. T.Nadu ( 41.18%)
All over India BSNLEU and alliance Comrades worked very
hard to get the magnificent victory.
Sunday 15 May 2016
தமிழகத்தின் எதிர்காலத்தை முடிவு செய்ய வாக்காளர்கள் ரெடி...
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்தலில் 3776 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலை நேரமையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் கமிஷன் முழுவீச்சில் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. நாளை பதிவாகும் ஓட்டுக்கள் மே 19ம் தேதியன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டசபைக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடக்க உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி துவங்கியது. ஏப்ரல் 29ம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மே 2ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டன. மே 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அனல் பறந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று (மே 14) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையிலும், புகார் வரும் பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நேற்று வரை ரூ.102 கோடி பிடிபட்டுள்ளதாகவும், பணம் பட்டுவாடா செய்ததாக 3 நாட்களில் 101 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 3,454 பேர், பெண் வேட்பாளர்கள் 320 பேர், திருநங்கைகள் 2 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் நாளை ஓட்டளிக்க உள்ளனர். 2.88 கோடி ஆண்களும், 2.93 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர். 21.05 லட்சம் பேர் முதல் முறையாகவும், திருநங்கைகள் 4720 பேரும் ஓட்டளிக்க உள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் மட்டுமே மே 16க்கும் பதிலாக மே 23ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதனால் 233 தொகுதிகளுக்கு மட்டும் நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
தேர்தலில் 1.40 லட்சம் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மொத்தம் 66,007 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27,961 வாக்குச்சாவடிகள் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 5,417 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 1,233 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4.75 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பாதுகாப்புக்காக சுமார் 30,000 துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள 30
சட்டசபை தொகுதிகளில்
9.43 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
300-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள
140 சட்டசபை தொகுதிகளில்
2.61 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். அங்கு 109 பெண்கள் உள்பட 1,203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்6வது முறையாக BSNL ஊழியர் சங்கம் அமோக வெற்றி ...
தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் பொதுத்துறையை பாதுகாக்கப்போராடி வரும் BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக 6வது முறை அமோக வெற்றிபெற்றுள்ளது.மே 10ஆம் தேதி நடைபெற்ற 7ஆவது BSNL சங்க அங்கீகாரத் தேர்தலில் BSNL ஊழியர் சங்கம் பிரம்மாண்டமான வெற்றி பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் நடைபெற்ற இந்த தேர்தலில் BSNL ஊழியர் சங்கம் 81195 வாக்குகளை பெற்றது. NFTE சங்கம் 52367 வாக்குகளை பெற்றது. மொத்தமுள்ள 35 மாநிலங்களில் 27 மாநிலங்களில் BSNL ஊழியர் சங்கம் முதலிடத்தை பெற்றுள்ளது. NFTE சங்கம் 7 மாநிலங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.சென்னையில் BSNL ஊழியர் சங்கம் 2209 வாக்குகளையும், NFTE சங்கம் 2532 பெற்றுள்ளது. சென்னை தவிர பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் 4972 வாக்குகளையும், NFTE சங்கம் 5584 வாக்குகளையும் பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 18 SSAக் களில் BSNL ஊழியர் சங்கம் 10 SSA-க்களில் வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றி சாதாரணமானதல்ல! இது இரட்டை ஹாட்ரிக் வெற்றி. தொடர்ச்சியான 6ஆவது வெற்றி. இந்திய பொதுத்துறை வரலாற்றிலேயே நடைபெற்றுள்ள ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் இது போன்ற வெற்றியை எந்தசங்கமும் பெற்றதில்லை.BSNL ஊழியர் சங்கம் அங்கீகாரம் பெற்ற இந்த 12 ஆண்டுகளில் BSNL நிறுவனத்தை பாதுகாக்கவும், BSNL ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் எடுத்த முயற்சிகளுக்கு இந்திய நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் கொடுத்ததுள்ள அங்கீகாரம் தான் இது. இந்த அங்கீகாரத்தை பயன்படுத்தி வர உள்ள புதிய ஊதிய மாற்றத்தில் ஊழியர்களுக்கு நல்லதொரு ஊதிய மாற்றத்தையும், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான PLI பெற்றுத் தருவதற்குமான போராட்டங்களில் வெற்றி பெறுவோம். 1991 முதல் புதிய பொருளாதாரக் கொள்கையினை எதிர்த்து இந்தியாவில் நடைபெற்ற அனைத்து பொது வேலை நிறுத்தங்களிலும் கலந்துக் கொண்ட ஒரே சங்கம் BSNL ஊழியர் சங்கம் மட்டுமே. மத்திய அரசாங்கங்களின் தவறான பொதுத்துறை விரோதக்கொள்கையினை எதிர்த்து போராடி BSNLநிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகவே நிலைநிறுத்திட தொடர்ந்து போராடுவோம்.இந்த தகவலைBSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் எஸ். செல்லப்பா, தமிழ்மாநில செயலாளர் ஏ. பாபுராதாகிருஷ்ணன், சென்னை தொலைபேசி மாநில செயலாளர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்....தீக்கதிர்.
Subscribe to:
Posts (Atom)