Wednesday 30 July 2014
30.07.14 . . . இன்று நடக்க . . . இருப்பவை . . .
அருமைத் தோழர்களே இன்று 30.07.14 புதன் காலை சுமார் 11 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் 102 -வது ஒருங்கிணைந்த பணி நிறைவு பாராட்டுவிழா நடைபெற உள்ளது. இந்த ஜூலை மாதம் பணி நிறைவு செய்யும் தோழர்கள் பணி நிறைவு காலம், குடும்பாத்தாருடன் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.
பணி நிறைவு செய்யும் தோழர்கள் . . .
1 . M.சேத்ர பாலகன் , TTA-TPM
2 . தேவகி தினகரன் , CTM-CSC
3 . K.கலைவேணி @ கமலா , STS-TKM
4 . P.பெரிய சாமி , TM-CNP
5 . K.தவமணி , SDE-TKM
6 . G.விஸ்வாசம் , TM-CBM
7 . S.ஸ்ரீனிவாசகன், TM-SALES (VRS)
ஆட்சி மாறியது... அவஸ்தை மாறவில்லை
கடந்த மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற நிலையில், மே 31-ல் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அன்றிலிருந்து கடந்த 22-ம் தேதி வரை தமிழக மீனவர்கள் 258 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டனர். இதில் இதுவரை 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இப்போது இலங்கை சிறையில் இருக்கின்றனர். இந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கைக் கடற்படையினரால் 57 விசைப் படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டன. இதில் இரு படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. எஞ்சிய 55 விசைப் படகுகள் இலங்கை வசம் உள்ளன.
புதிய அரசு அமைந்த பின்னரும் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு தொடர்வது குறித்து நம்மிடம் பேசிய ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு சங்கத் தலைவர் என்.ஜே. போஸ், ''குறைவான கடல் பரப்பு, அருகி வரும் மீன் இனம், அதிகரித்து வரும் மீனவர்கள் எண்ணிக்கை... இவற்றுக்கு மத்தியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மாற்றுத் தொழில் ஏதும் இல்லாததால், மீன்பிடிப்பை மட்டுமே நம்பியிருக்கிறோம். இந்த நிலையில் இலங்கைக்கடற்படையினரின் சிறைப்பிடிப்பு நடவடிக்கை மோடி தலைமையிலான அரசு அமைந்தவுடன் கட்டுப்படுத்தப்படும் என முழுமையாக நம்பினோம். இதனை உறுதிசெய்யும் வகையில் பி.ஜே.பி-யினர் கடல் முற்றுகைப் போராட்டம், கடல் தாமரை ஆர்ப்பாட்டம் என பலவற்றை எங்களுக்கு ஆதரவாக நடத்தினர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தனர். ஆனால், இப்போது மீனவர் பிரச்னைக்கான காரணம் குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கின்றனர். ஆட்சிக்கு வரும் முன் பேசியது ஒன்றாகவும், இப்போது வேறு விதமாகவும் பி.ஜே.பி-யின் நடவடிக்கை உள்ளது. இதனால் புதிய ஆட்சி வந்தால் நன்மை பிறக்கும் என்ற எங்களின் நம்பிக்கை பொய்த்துவிட்டது.கடந்த கால காங்கிரஸ் அரசின்போது சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்கள் காலதாமதமாக விடுதலை செய்யப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்டவர்களுடன் அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டன. மேலும், தமிழக முதல்வரின் கறார் நடவடிக்கைகளாலும் எங்கள் படகுகள் மீட்கப்பட்டன. ஆனால், இப்போதோ மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இலங்கை அரசின் பிடியில் 55 விசைப் படகுகள் உள்ளன. இரு படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. எங்கள் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமான படகுகளை இழந்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். இந்த மீனவக் குடும்பங்கள் பசியாற ரேஷன் அரிசியை நம்பியிருக்கின்றனர். மேலும் பல மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைக்கூட கட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாததால் ஏற்படும் அவமானத்தால், எங்கள் மீனவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் மீனவர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு புதிய அரசிடம் உள்ளது. மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளோம். ஆனால், இதனை ஆள்பவர்கள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. எனவே, சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்பதுடன் எங்கள் படகுகளையும் உடனடியாக மீட்டுத் தர வேண்டும்.
இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்களுக்கு நம் நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்திருக்கிறது. இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். எனவே, சிறைப்பிடிக்கப்படும் இரு நாட்டு மீனவர்களையும் எவ்வித நிபந்தனைகள் இன்றி அவர்களது படகுகளுடன் விடுவிக்கப்பட்டால் மட்டுமே எங்கள் வாழ்க்கை வளமாகும்'' என்றார்.
காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கம் அள்ளிய இந்தியா.
தங்கம். தங்கம், தங்கம்; காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்தியா
காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சுஷில்குமார்,அமித்குமார், மற்றும் இந்திய வீராங்கனை வினேஸ் தங்கப்பதக்கம் வென்றனர். இதுவரை 34 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா பதக்கப்படியலில் 7வது இடத்தில் இருந்தது.
மல்யுத்தத்தில் 3 தங்கம்: இன்று மல்யுத்த போட்டியில், இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. முதல் தங்கத்தை அமித் குமார் பெற்றுத்தந்தார். அவர், ஆண்கள் பிரிவு 57 கிலோ பிரிவில் எபிக்வெமினோமோ வெல்சனை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனை வினேஸ், இங்கிலாந்தின் யானா ரட்டிகனை, மகளிர் 48 கிலோ பிரிவில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
3வது தங்கத்தை சுஷில்குமார் பெற்றார். அவர்74 கிலோ பிரிவில், பாகிஸ்தானின் அப்பாசை வீழ்த்தி இந்தியாவுக்கு 10வது தங்கத்தை பெற்றுத்தந்தார்.
85 கிலோ பளுதூக்குதல் 85 கிலோ பிரிவில், இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
துப்பாக்கி சுடுதலில் மேலும் பதக்கங்கள்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் இன்றும் மேலும் பதக்கங்கள் கிடைத்தன.
25 மீட்டர் ரேபிட் பைபர் பிரிவில், ஹர்ப்ரீட் சிங் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஆண்கள் பிரிவு துப்பாக்கிசுடுதலில் இந்திய வீரர் மனவ்ஜீத் சந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்தியாவின் லஜ்ஜா கோஸ்வாமி வெண்கலப்பதக்கம் வென்றார்.
இதன் மூலம், இந்தியா 10 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலப்பதக்கங்களுடன்
இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
Tuesday 29 July 2014
பெரியகுளம் MLA லாசரின் 3 ஆண்டுமக்கள் பணி . . .
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசரின் மூன்றாண்டு மக்கள் பணி நூல் வெளியீட்டு விழா தேனியில் ஞாயிறன்று நடைபெற்றது.தேனியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாநிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலா ளர் டி.வெங்கடேசன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கமாவட்ட துணைத் தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு வர வேற்புரையாற்றினார். ஏ.லாசர் எம்.எல்.ஏ.வின் மூன்றாண்டு மக்கள் பணிநூலை கட்சியின் முதுபெரும் தலைவர் எஸ்.ஏ.ரஜாக் வெளியிட்டார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைதலைவர் எ.சங்கரகுமார், தேனி அல்லிநகரம் கிராம கமிட்டித் தலைவர் வி.என்.கோவிந்தசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டதுணைச் செயலாளர் என்.ரவி முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், வழக்கறிஞர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம், வியாபாரிகள் சங்க செயலாளர் கே.எஸ்.கே.நடே சன், வர்த்தகர்கள் சங்கத்தலைவர்கள் கே.சீனிவாசன், எஸ்.பெருமாள், பெரிய குளம் நகர்நல கமிட்டி பொறுப்பாளர் பி.கே.ஆர்.விஜயகுமார், உணவுப் பொருள் விற்பனையாளர் சங்கத் தலைவர் எம்.ஆனந்தவேல், அனைத்துத் துறைஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் தேனி சீருடையான், அரசு ஊழியர்சங்க மாவட்டச் செயலாளர் எம்.சின்னசாமி, வெளிச்சம் அறக்கட்டளை சிதம்பரம், விளையாட்டு கழகத்தலைவர் மகாராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுருளிநாதன், கே.தயாளன், பெரியகுளம் தாலுகாசெயலாளர் எம்.ராமச்சந்திரன், சி.சடையாண்டி, எம்.வி.முருகன், வி.மோகன், சுருளிவேல், பி.இளங்கோவன், ஜி.சண்முகம், எஸ்.செல்வம், சு.வெண்மணி, சிபிஐ தலைவர்கள் எஸ்.திருமலை கொழுந்து, வி.பெத்தாட்சி ஆசாத், ராஜ்குமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஏ.லாசர் எம்.எல்.ஏ. ஏற்புரை நிகழ்த்தினார். தேனி தாலுகா செயலாளர் டி.கண்ணன் நன்றி கூறினார்.
எத்தனை வழக்கு போட்டாலும் CPI(M) மக்களுக்காக போராடும்.
தமிழக அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது அவதூறு வழக்கு போட்டுள்ளது. எத்தனை வழக்குகள் போட்டாலும் கட்சி மக்களுக்காக தொடர்ந்து போராடும் என விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் நடைபெற்ற மக்கள் கோரிக்கை மாநாட்டில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி பேசினார்.அவர் மேலும் பேசியதாவது:தமிழகத்தில் மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது என அறிக்கை விட்டதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மணல் கொள்ளை மட்டுமல்ல, மரங்களும் வெட்டப்படுகின்றன. பலவிதமான அடக்குமுறைகளை சந்தித்த கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எங்களது தோழர்கள் ஆங்கிலேய ஆட்சியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி கட்சியை வளர்த்தனர். காங்கிரஸ் எல்லா மாநிலங்களில் ஆட்சியில் இருந்த போது, முதன்முதலில் கேரளாவில் ஆட்சியை பிடித்தது செங்கொடி இயக்கம். இன்றும் திரிபுராவில் 4 வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.திரிபுரா மாநில முதல்வர் வங்கிக் கணக்கில் வெறும் 3 லட்ச ரூபாய் மட்டுமே உள்ளது. அனைத்து பத்திரிகைகளும் ஏழ்மையான முதலமைச்சர் என வியந்து எழுதியுள்ளன. கடந்த திமுக ஆட்சியில் தொழில் பூங்கா, நெசவு பூங்கா, ஜவுளிப் பூங்கா என வெறும் அறிவிப்புகளாக வெளியிட்டனர். அதேபோல் தான் அதிமுகவும் சிறு குறு தொழில்களுக்கு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என கடன் தருகிறோம் என மட்டுமே அறிவிக்கின்றனர். அதிகாரிகள் இரு கட்சிகளுக்குமே எழுதி கொடுத்து வருவதை சட்டமன்றத்தில் அமைச்சர்கள் படிக்கின்றனர். தமிழகத்தில் புதிய தொழில் துவங்க எந்த அறிவிப்பும் இல்லை. தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் எவ்வித தொழில்களும் இல்லை. சோழவந்தான் பகுதிகளில் மல்லிகைப் பூ விளைச்சல் அதிகமாக உள்ளது.எனவே, சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் தொழில் துவங்க நிதி இல்லை. தனியார் தொழிற்சாலை துவங்க அரசு உதவி செய்யும் என பதில் கூறுகிறார். விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு எழுதி கொடுத்துள்ளோம். ஆனால் அதை விவாதத்திற்கு எடுக்க மறுக்கின்றனர். கடந்த திமுக ஆட்சியின் போது, தற்போதைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காய்கறி மாலை அணிந்து சட்டசபைக்கு வந்தார். கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.இதையொட்டி அவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆட்சிக்கு வந்ததும் பேச மறுக்கின்றனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்திற்கு உள்ளேயும், மக்கள் மன்றத்திலும் கொண்டு செல்லும். முதியோர் பென்சன் பலருக்கு 6 மாதமாக வழங்கப்படவில்லை. தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. திண்டுக்கல்லில் ஒரு லாரி தண்ணீர் ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. தனியார் கம்பெனிகள் தண்ணீரை விற்கின்றனர். அவர்களுக்கு மட்டும் தண்ணீர் எப்படி கிடைக்கிறது. பிரதமராக நரேந்திரமோடி வந்தால், தமிழக மக்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைக்கும் என்றனர்.ஆனால், அவர் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு தான் 250 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். 37 எந்திர படகுகளை இலங்கை ராணுவத்தினர் கொண்டு சென்று விட்டனர். மன்மோகன்சிங்கை விட அதிகமாக விலைவாசியை உயரச் செய்து, அவரை மோடி நல்லவராக்கி விட்டார். மோடி ஆட்சியில் 2 முறை டீசல், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு
பாலபாரதி பேசினார்.
Subscribe to:
Posts (Atom)