மைக்ரோசாப்டில் பணியாற்றும் சுமார் 18,000 ஊழியர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 39 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.இந்த நடவடிக்கையால், மைக்ரோசாப் ட்டால் வாங்கப்பட்ட நோக்கியா நிறுவனத்தின் 12,500 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தற்போது 1.27 லட்சம் ஊழியர்கள் பணியாற்று கின்றனர். இதில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளவர்கள் எண்ணிக்கை 14
சதவீதமாக இருக்கும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment