Wednesday 30 April 2014

30.04.14 பணிநிறைவு பெறும் தோழர்களுக்கு வாழ்த்து...

அருமைத் தோழர்களே! இம் மே மாதம் நமது மதுரை மாவட்டத்தில்  பணி நிறைவு பெறும்  நமது தோழர்கள் D.J.J.பெத்தேல் ராஜ் . . . 
உள்ளிட்ட கீழ்க்கண்ட அனைவருக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் பனி ஓய்வு காலம் சிறக்க  உளமார, பனி நிறைவு பாராட்டுக்களை உரித்தாக்குகிறது. . .  
  1. தோழர்.D.J.J.பெத்தேல் ராஜ்,STS- மதுரை 
  2. தோழர்.K.நத்தர் பாட்சா ,TM-தேனி 
  3. தோழர்.D.ஞானசேகரன்,TM-திருநகர் 
  4. தோழர்.G.புஷ்பவள்ளி,TM-சின்னமனூர் 
  5. தோழர்.R.ராஜகோபாலசுப்பிரமணியன்,STS
  6. தோழர்.V.திருப்பதி,TM-கம்பம் 
 தோழர்கள் அனைவரும் எல்லாவளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம். . . .
....என்றும் தோழமையுடன் ,எஸ்.சூரியன் -D/S-BSNLEU

Tuesday 29 April 2014

நடக்க இருப்பவை .1.5.14 மே தின சிறப்புக்கூட்டம்

அருமைத் தோழர்களே! அனைத்து கிளைகளிலும் மே தினத்தை ஏற்கனவே மாவட்டசங்கம் அறிவித்துள்ள கால அட்டவணைப்படி சிறப்பாக நடத்திட வேண்டுகிறோம். மேலும் மதுரை உட்பட ஸ்தல மட்டங்களில் நகர தொழிற்சங்க அறைகூவளுக்கிணங்க நமது BSNLEU + TNTCWU தோழர்களும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
...என்றும் தோழமையுடன் --எஸ்.சூரியன் D/S-BSNLEU

Monday 28 April 2014

காத்திருக்கும்அபாயம்:மின்கட்டணம்15சதவீதம்உயர்கிறது?

தமிழக மின் வாரியத்தின் நஷ்டம் ரூ.45 ஆயிரம் கோடியி லிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டதாகவும், இதை சமாளிக்க, மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய அரசின் மின் கொள்கை தமிழகத்தில் ஆளும் அரசுகளின் குளறுபடிகள் போன்ற வற்றால் மின் வாரியத்தின் இழ ப்பு ரூ.45 ஆயிரம் கோடியிலிரு ந்து ரூ.75 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. நிலைமையை சரிசெய்ய, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் கூறுகின்ற னர்.இதற்கிடையே, ஆண்டுக் கணக்கையும் மின் கட்டணம் குறித்த மறுஆய்வு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு 15 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் ஊழியர்களுக்கு சம்பளமேகொடுக்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்த அறிக்கையை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் அதிகாரிகள் விரைவில் தாக்கல் செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
சமீபகாலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிலக்கரி மற்றும் நாப்தா விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. இதனால் புதிய மின் திட்டங்களுக்கு அதிக நிதி செலவிட வேண்டியுள்ளது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான போக்குவரத்து செலவும் அதிகரித் துள்ளதுஇதுபோன்ற காரணங்களாலும் நஷ்டம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்?

தியாகத்திற்கு அஞ்சலி...

ஸ்ரீநகர்காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சென்னையில் சேர்ந்த ராணுவ அதிகாரி உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம் கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீசாரும், அசாம் ஆயுத படையினரும் நேற்று முன்தினம் இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதி தாக்கியதில் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் பலியான ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர் வரதராஜன். ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான வரதராஜன் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில்மனைவிகீதாவுடன்வசித்துவருகிறார்.இந்த தம்பதியின் ஒரே மகன் முகுந்த். ராணுவ மேஜரான முகுந்திற்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் இந்து. இவர்களுக்கு 3 வயதானஅர்ஷிதாஎன்றமகள்இருக்கிறாள். பெங்களூரில்ராணுவகுடியிருப்பில்வசித்துவருகின்றனர்.முகுந்தின்சொந்தஊர்ஆவடிஅருகேயுள்ளபருத்திப்பட்டுகிராமம்.முகுந்துக்குசுவேதா,நித்யாஎன்ற இருசகோதரிகள்உள்ளனர்.அவர்களுக்கும்திருமணம்ஆகிவிட்டது.
ராணுவ மேஜர் முகுந்த் கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கரா கல்லூரியில் பி.காம் படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஊடக துறையில் பி.ஜி.டிப்ளமோ படித்தார். அதன்பிறகு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமியில் சேர்ந்து ராணுவ மேஜராக 44வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் சேர்ந்தார். 2012ல் ஐக்கிய நாடுகள் சபை அமைதிப்படையில் லெபனானில் பணியாற்றினார். அதன் பின்னர் காஷ்மீரில் ராணுவ மேஜராக பணியாற்றிவந்தார்.தீவிரவாதிகள் தாக்குதலில் மேஜர் முகுந்த் பலியான சம்பவம், அவரது தந்தை வசிக்கும் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில்பெரும்சோகத்தைஏற்படுத்திஉள்ளது.
எனக்கு மகனாக மட்டும் இல்லாமல் தந்தையாக, நண்பனாக இருந்தவன் என் மேல் அன்பு கொண்டவன் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்துள்ளான். அவன் புண்ணியம் செய்தவன்" என்று கூறிய தந்தை  வரதராஜன் கதறி அழுதார்.
தியாகத்திற்கு அஞ்சலி...மதம் பாராது ... இனம் பாராது காத்திட்ட நாட்டை...மதத்தால் துண்டாட அனுமதியோம் !

கிங்பிஷர் மீதான நடவடிக்கையில் சட்ட சிக்கல் . . .

கடனை வசூலிக்க கிங்பிஷர் நிறுவனத்தின் மீதான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருந்தாலும், அதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலை வர் அருந்ததி பட்டாச்சார்யா தெரி வித்தார்.
தனிப்பட்ட கணக்குகளை பற்றி வெளியே தெரிவிக்க முடியாது. இருந்தாலும் கடனை வசூலிப்பதற்கு தேவையான நடவடிக் கையை எடுத்துவருகிறோம் என்றார். எஸ்.பி.. தலைமை யிலான 17 வங்கிகள் 7,500 கோடி ரூபாயை கிங்பிஷர் நிறுவனத்துக்கு கடனாக கொடுத்தன. இதில் எஸ்.பி.. வங்கியின் பங்கு மட்டும் 1,600 கோடி ரூபாய்.இதுவரைக்கும் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெரிதாக ஒன்றும் இல்லை, 350 முதல் 400 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டிருக்கும் என்று அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.800 கோடி, .டி.பி. வங்கி ரூ. 800 கோடி, பேங்க் ஆஃப் இந்தியா ரூ. 650 கோடி, பேங்க் ஆஃப் பரோடா ரூ. 550 கோடி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.430 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.410 கோடி, யூகோ பேங்க் ரூ.320 கோடி, கார்ப்பரேஷன் பேங்க் ரூ.310 கோடியும் கடனாக கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கி றார்கள்.இது தவிர ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஃபெடரல் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஜே.கே வங்கி, மற்றும் .பி.சி. ஆகிய வங்கிகளும் கிங் பிஷர் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருக்கின்றன.

Saturday 26 April 2014

தமிழகத்தில் மாவட்டவாரியாக பதிவான வாக்குகளின் விபரம்


1.5.2014 மே தினத்தை விமர்சியாக கொண்டாடுங்கள் . . .

அருமைத் தோழர்களே! இந்த ஆண்டு மே 1 அன்று நமது ஒப்பந்த ஊழியர் களுடன் ஸ்தலமட்டத்தில் அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கி , CITU / AITUC நகரதொழிற் சங்கங்கள் நடத்துகின்ற ஊர்வலம்,பொதுக்கூட்டங்களில் நமது தோழர்களும் சக்தியாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். S.SOORIYAN-D/S-BSNLEU

Friday 25 April 2014

சுழல் மாற்றல் குறித்து கார்பரேட் அலுவலகம் வழிகாட்டல் . . .


நமது மத்திய சங்க (BSNLEU- CHQ )நேசனல் கவுன்சில் செய்தி .

23-04-2014 NJCM முடிவுகள்: - 01.10.2000 பதவி உயர்வு பெற்றவர்களுக்கான ஊதியப் பிடித்தம் குறித்து. .
AGENDA NO(10) : Pay fixation in case of Non-Executives absorbed in BSNL, who had opted for IDApay scale from the date of promotion after 01.10.2000.
Management said that this issue is being actively persued with the DoT and expressed hope that a favourable order would come soon. The Staff Side demanded that in the mean while recovery being made at the field level should be stopped. Management agreed to look into this.
01-10-2000க்கு முன் ஊழியர்களுக்கு  தரப்பட்ட பதவி உயர்வை இன்கிரிமெண்ட் தேதிக்கு விருப்பம் கொடுத்தவர்களுக்கு  தற்போது 2008 DOT உத்தரவைக்காட்டி, அவ்வாறு இன்கிரிமெண்ட் தேதிக்கு மாற்றித் தர முடியாது எனக்கூறி,இந்தியா முழுவதும்  பல ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுவருகிறது. நமது மதுரை மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட  136 தோழர்களுக்கு சம்பளத்தில் மாதாமாதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இப்பிரச்னையை நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம்,மாவட்ட நிர்வாகத்துடன்  பேச்சு வார்த்தைநடத்தி பல மாதம்  பிடித்தத்தை நிறுத்தி வைத்திருந்தோம். தொடர்ந்து இப் பிரச்னையை  மத்திய சங்கத்திற்கு நமது மாநிலச் சங்கத்தின் மூலமாக மத்திய சங்கத்தின் கவனத்திற்கு  கொண்டு சென்றோம். மதுரை  வந்திருந்த நமது பொதுச்செயலர்  தோழர் P.அபிமன்யு, மாநில செயலர் தோழர்.எஸ்.செல்லப்பா ஆகியோரிடம் நேரடியாக பிரச்னையை விளக்கி பேசினோம்.மாநில செயற்குழுவிற்கு வந்தபோதெல்லாம்,நமது பொதுச்செயலர்   தோழர்.பி .அபிமன்யு  அவர்களிடம் நினைவூட்டப்பட்டது.
 இப் பிரச்சனை குறித்து நமது பொதுச்செயலர்,தோழர் அபி அவர்கள்  BSNLகார்ப்பரேட் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியதோடு, நிர்வாகத்திடம் தொடர்ந்து விவாதித்து வந்தார். அதனுடைய தகவலையும், இப் பிரச்சனையை தேசிய கூட்டு ஆலோசனை குழுவில் எழுப்பபட்டுள்ளது குறித்து நமது தமிழ் மாநில சங்கத்திற்கும்,நமது மதுரை மாவட்ட சங்கத்திற்கும் கடிதம் ஏற்கனவே , எழுதிருந்தார் என்பதை நாம் நமது மாவட்ட செயற்குழுவில் பதிவு செய்துள்ளோம்.என்பது நமது தோழர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும்,இப்போது 23.04.2014 அன்று  நடைபெற்ற NJCM கூட்டத்தில் ஊதியப் பிடித்தம் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென நமது ஊழியர் தரப்பு சார்பாக வலியுர்த்தப்பட்டுள்ளது.BSNL நிர்வாகம் இப் பிரச்சனை குறித்து  உடனடி கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
மேலும்,23/04/2014டெல்லியில்நடைபெற்றNJCMதேசியக்குழுகூட்டத்தில் 
 எடுக்கப்பட்டுவிவாதிக்கப்பட்டபிரச்சினைகள் குறித்த சிறு குறிப்பு :
*  JTO/JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாதவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை….. இருப்பினும் பாடத்திட்டத்தில் இடம் பெறாத கேள்விகள், தவறான கேள்விகள் கேட்கப்பட்டது  பற்றி பரிசீலிக்கப்படும்.
* புதிய JTO ஆளெடுப்பு விதி ஒப்புதல் பெறப்பட்டபின் JTOவாக OFFICIATING செய்யும் 1500 TTAக்களும் நிரந்தரம் செய்யப்படுவர்
* JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
*  SC/ST தோழர்களுக்கு நிரப்பப்படாத காலியிடங்கள் BACKLOG VACANCY ஏதும் இல்லை.இது பற்றி DOTக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* வழக்கு நிலுவையில் உள்ளதால் கருணை அடிப்படையில் TSM ஆகப்பணிபுரியும் தோழர்களின் பணி நிரந்தரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட சில தோழர்களது நிரந்தரம் பரிசீலிக்கப்படும்.
* பயிற்சிக் காலத்திற்கான உதவித்தொகை STIPEND புதிய சம்பள விகிதத்தில் 01/01/2007ல் இருந்து வழங்கப்படும்.
*  புதிய ஆளெடுப்பு பற்றி ஆய்வு செய்யப்படும். தொழிற்சங்கங்கள் மற்றும் ஆலோசனைக்காரர்களின் CONSULTANT உதவி ஏற்கப்படும்.
*  01/10/2000க்குப்பின் வரக்கூடிய பதவி உயர்வு தேதியில் இருந்து சம்பளப்பொருத்தம் 2000 WAGE REVISION அளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
*  அனைவருக்கும் இலவச SIM வழங்குவது சாதகமாக முடிவெடுக்கப்படும். பிற நிறுவனங்களை அழைப்பதற்கு OFF NET CALLS  மாதம் 50 வரை சலுகை அளிக்கப்படலாம்.
*  ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க மாநில நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்படும்.
*   TSM தோழர்களுக்கான BSNL ஏற்பு உத்திரவு DOTக்கு அனுப்பபட்டுள்ளது. 
நமது BSNLEU மத்திய சங்கத்தின் தொடர்முயற்ச்சிக்கு,நமது மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்என்றும் தோழமையுடன் --எஸ்.சூரியன் ..D/S-BSNLEU