Monday, 28 April 2014

கிங்பிஷர் மீதான நடவடிக்கையில் சட்ட சிக்கல் . . .

கடனை வசூலிக்க கிங்பிஷர் நிறுவனத்தின் மீதான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருந்தாலும், அதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலை வர் அருந்ததி பட்டாச்சார்யா தெரி வித்தார்.
தனிப்பட்ட கணக்குகளை பற்றி வெளியே தெரிவிக்க முடியாது. இருந்தாலும் கடனை வசூலிப்பதற்கு தேவையான நடவடிக் கையை எடுத்துவருகிறோம் என்றார். எஸ்.பி.. தலைமை யிலான 17 வங்கிகள் 7,500 கோடி ரூபாயை கிங்பிஷர் நிறுவனத்துக்கு கடனாக கொடுத்தன. இதில் எஸ்.பி.. வங்கியின் பங்கு மட்டும் 1,600 கோடி ரூபாய்.இதுவரைக்கும் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெரிதாக ஒன்றும் இல்லை, 350 முதல் 400 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டிருக்கும் என்று அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.800 கோடி, .டி.பி. வங்கி ரூ. 800 கோடி, பேங்க் ஆஃப் இந்தியா ரூ. 650 கோடி, பேங்க் ஆஃப் பரோடா ரூ. 550 கோடி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.430 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.410 கோடி, யூகோ பேங்க் ரூ.320 கோடி, கார்ப்பரேஷன் பேங்க் ரூ.310 கோடியும் கடனாக கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கி றார்கள்.இது தவிர ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஃபெடரல் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஜே.கே வங்கி, மற்றும் .பி.சி. ஆகிய வங்கிகளும் கிங் பிஷர் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருக்கின்றன.

No comments: