மனைவியைக் கைவிட்ட மோடி : 45 ஆண்டுகளாக உதவி நிதி கூட கொடுக்காமல் தவிக்கவிட்ட கொடுமை - தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா ?
பிரதமர் கனவோடு வலம் வரும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நரேந்திர மோடி, தனக்கு திருமணமான தகவலை கடந்த தேர்தல்களில் மறைத்தது மட்டுமின்றி, மனைவியின் பெயரை குறிப்பிடாமல் இருந்தது பற்றி அரசியல் அரங்கில் கடும் கண்டனக்குரல் எழுந் துள்ளது.
அதுமட்டுமின்றி தற்போது வரை மனைவியோடு சேர்ந்து வாழாமல் அவரை கைவிட்டது மட்டுமின்றி, அவருக்கு வாழ்வாதார நிதி கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தியிருப்பதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மோடிக்கு தற்போது 62 வயதாகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரகர் ஆகும் பொருட்டு மோடி தனது மனைவியை கைவிட்டுச் சென்றுவிட்டார். 1968ம் ஆண்டு மோடியின் சொந்த ஊரான வத்நகருக்கு அருகில் உள்ள பிரம்மன்வாடா என்ற கிராமத்தைச் சேர்ந்த யசோதாபென் என்ற பெண்ணுக்கும் மோடிக்கும் திருமணம் நடந்தது.
அப்போது யசோதா பெண் 13 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஆவார். மோடிக்கு வயது 17. இதன் பின்னர் யசோதாபென்னை நிராதரவாக விட்டுவிட்டு மோடி சென்று விட்டார். இதுவரையிலும் அப்பெண்ணுக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவியும் மோடி செய்யவில்லை..இத்தனைஆண்டுகளாக யசோதா பென், தனது சொந்த கிராமத்தில் தனது மூத்த சகோதரரால் நடத்தப்படும் ஒரு சிறிய மளிகைக்கடையில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வெளிச்சத்திற்கு வந்த திருமணம் : இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிடுவதற்காக நரேந்திர மோடி வேட்புமனுத்தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் மனைவி என்ற இடத்தில் யசோதா பென்னின் பெயரை நிரப்பி அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்தே மோடியின் திருமணமும், அவர் தனது மனைவியை கைவிட்டு வந்ததும் வெளிச் சத்திற்கு வந்தது. ஆனால் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் நரேந்திர மோடி திருமணமானவர் என்றோ, மனைவியின் பெயரையோ குறிப்பிடவில்லை. எனவே இது தற்போது சட்டரீதியான பிரச்சனை யாக மாறியுள்ளது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி புகார் பதிவு செய்துள்ளது.
தேர்தல் ஆவணங்களில் தனதுகடந்த கால வாழ்க்கை குறித்த உண்மை களை நரேந்திர மோடி திட்டமிட்டு மறைத்துள்ளார் என தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள புகாரில் கேள்வி எழுப்பியிருப்பதாக காங்கிரசின் மூத்த தலைவர் கபில்சிபல் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளியன்று தெரிவித்தார்.
தேசிய மகளிர் ஆணையம் கேள்வி : மோடியின் திருமணம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதன் உறுப்பினர் நிர்மலா சமந்த் கூறும்போது, ‘‘இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
நரேந்திரமோடியின் மனைவி தனது சொத்துரிமை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளார். ஆனால் மோடி பெண்கள் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். தனது வேட்பு மனுவில் அவர் தனது சொத்து விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
ஆனால் முதல் முறையாக தனதுமனைவியின் பெயரை குறிப்பிட வேண்டிய தேவை என்ன? இதற்கு முந்தைய தேர்தல்களில் மனைவியின் பெயரை குறிப்பிடும்படி அவரிடம் தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்த வில்லையா? இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
No comments:
Post a Comment