Sunday 31 January 2016

என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது...

சொந்த புத்தியும் இருக்காது.. சொல்கிற புத்திமதியையும் கேட்காது.. ஒரு வீட்டில் அடங்காமல் அடாவடியாக ஊதாரியாக ஒருவன் இருந்தால், ‘‘இவன என்ன பண்றதுன்னே தெரியலியே’’ என்று பெற்றோர்கள் நொந்து கொள்வார்கள். மற்றவர்களும் அப்படித்தான் சொல்வார்கள்.வீட்டில் ஒரு அடாவடி போல நாட்டில் ஓர் அடாவடி அரசு இருந்தால் அதுபற்றியும் இப்படித்தானே சொல்ல வேண்டியிருக்கும்.சென்னை உயர்நீதிமன்றத்திலே ஒரு பொதுநல வழக்கு. தமிழகத்தில் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகள் அடுக்குமாடிக் கட்டிடங்களாக உள்ளன.
மருத்துவக் கல்லூரி கட்டிடங்களும் இப்படித்தான். தீ விபத்துகள் ஏற்பட்டால் தடுப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி இவை கட்டப்பட்டுள்ளனவா என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு இயக்குநரிடமிருந்து அறிக்கை பெற்று குறைபாடுகள் இருந்தால் நீக்குவதற்கு உத்தரவிடவேண்டும் என்பது நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள விண்ணப்பம்.இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அசைந்து கொடுக்கவில்லை அதிமுக அரசு.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது மீண்டும் அவகாசம் கேட்கப்பட்டது.தனிநபராக சொத்துக்குவிப்பு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்த அனுபவம் பெற்ற ஜெயலலிதா தலைமையில் தானே அரசு அமைந்திருக்கிறது. அதுவும் வழக்கை இழுத்தடிக்கத்தானே செய்யும்!பல வழக்குகளில் இழுத்தடிப்பைப் பார்த்துப் பார்த்துப் பொறுமையிழந்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச், தனது அதிருப்தியைப் பதிவு செய்தது.‘‘சாமானியர்கள் வழக்கு தாக்கல் செய்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கிறது. தானே முன்வந்து அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை’’ என நீதிபதிகள் கவலையை வெளிப்படுத்தினர்.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செயல்படாத அரசு என்பதற்கு இதைவிடநற்சான்றுஇருக்க முடியாது.பொதுநலன் சார்ந்த இந்த வழக்கில் பல முறை அவகாசம் கொடுத்தும் அரசு தரப்பு பதில் மனுதாக்கல் செய்யாததால் ‘‘சுகாதாரத்துறை செயலாளர், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், தீயணைப்புத் துறை இயக்குநர், இந்திய மருத்துவக் கவுன்சில் செயலாளர்’’ ஆகியோருக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வழக்கிலும் இரண்டு முறை அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு அபராதம் என்றால் அது அரசுக்கான அபராதம்தான். அந்த அளவுக்கு அதிமுக அரசுதண்டம்கட்டும் அரசாக உள்ளது.இந்த அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றமே நொந்து கொள்ளும் வகையில்தான் இருக்கிறது. தலைமை நீதிபதியின் மனவேதனையின் உச்சபட்ச வெளிப்பாடான வாசகங்கள் இவை:``இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய எத்தனை முறை அவகாசம் வழங்குவது? இன்னும் 4 மாதங்கள் தான் இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? (தலைமை நீதிபதி 4 மாதத்தில் ஓய்வு பெறவிருக்கிறார்) எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்.
பொது நலன் வழக்குகளில் தமிழக அரசு உரிய பதில் மனு தாக்கல் செய்வது இல்லை. மியாட் மருத்துவமனையில் 18 பேர் பலியான பிறகும் அரசு மெத்தனமாக நடந்து வருவது வேதனை அளிக்கிறது.கடைசி நேரத்தில் பதில்மனு தாக்கல் செய்கிறார்கள் அதுவும் முறையாக இல்லை. தமிழக அரசை என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை’’ஒரு அரசைப் பார்த்து நீதிமன்ற நீதிபதிகள் இப்படி நொந்து கொள்கிறார்கள் என்றால் அது எவ்வளவு மோசமான அரசாக இருக்க வேண்டும்!?நீதிமான்களே! நியாயவான்களே! தமிழக அரசை என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை என்று கவலைப்படுவோரே! கவலையைவிடுங்கள். இந்த அரசை என்ன செய்ய வேண்டும் என்பது மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமைகளே அறமாகி நிற்குமென்றால் அதற்குக் காரணமான அரசைத் தூக்கி எறிவதுதான் ஒரே வழி. அதற்குத் தயாராகிவிட்டோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் நான் மாடக் கூடல் எனும் மதுரை நகரில் எழுச்சியோடு கடலென மக்கள் திரண்டிருந்தார்கள் - மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் மாநாட்டில்! அடாவடி அரசின் முடிவுக்கு மதுரையில் முன்னுரை எழுதப்பட்டுவிட்டது.-மயிலைபாலு

ஜனவரி - 31, முன்னாள் முதல்வர் பக்தவசலம் நினைவு தினம் ...

எம். பக்தவத்சலம் அவர்கள் (9 அக்டோபர் 1897 - 31 ஜனவரி 1987) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். இந்து அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத் திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்.
1960
ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு, மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர்.

Saturday 30 January 2016

JTO இலாக்கா போட்டி தேர்வு கால அட்டவணை வெளியீடு...

நமது BSNLEU மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, JTO இலாக்கா போட்டி தேர்வு கால அட்டவணை 28.01.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது.  
நமது BSNLEU சங்கத்தின் கடுமையான போராட்டத்தின் பலனாக, 2 பிரதான     கோரிக்கைகளில்    வெற்றி கிடைத்துள்ளது. 
1. மாநில தலைமை பொது மேலாளர்கள் தான் முறையாக  தேர்வு அறிவிப்பை வெளியியிட வேண்டும்
2. இலாக்கா போட்டி தேர்வுக்கு பின் தான் நேரடி நியமனம் நடைபெற வேண்டும்.  இந்த இரண்டு விசயங்களிலும் நாம் வெற்றி பெற்றுளோம்
28.01.2016 தேதியிட்ட உத்தரவு படி

1. முறையான அறிக்கை வெளியிடப்படும் நாள் : 15.02.2016
2.  ஆன்லைனில், விண்ணபிக்க: 22.02.2016 முதல் 22.03.2016 வரை
3. தேர்வு நடை பெறும் நாள்: 08.05.2016.

ஜனவரி -30, காந்தி கொல்லப்பட்ட - தலைவர்கள் தினம்...

 இன்று தான் மகாத்மா காந்தியை R.S.S.கோட்சே சுட்டுக்கொன்றான்அவர்களதுஆட்சி நடைபெறுவதால்கோட்சேவைக்கொண்டாடுகிறார்கள்.காந்தியை சிறுமைப்படுத்து கிறார்கள். இந்த நாள் காந்தி நினைவுநாளை தீண்டாமை ஒழிப்பு   நாளாகவும், தேச தலைவர்கள் நாளாகவும் நாடு முழுவதும் நினைவு கொள்ளப்படுகிறது.
தீண்டாமைக்கு முடிவுகட்டுவோம்.

மக்களைக் காக்கும் பொதுத்துறையைப் பாதுகாப்போம் . . .

நெருக்கடியான நேரத்தில் பொதுமக்களுக்கு உதவும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்று அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சம்மேளன தலைவர் டி.தாமஸ் பிராங்கோ கேட்டுக் கொண்டுள்ளார்.“பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம்’’ என்ற தலைப்பில் சென்னையில் சமீபத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் (ஏஐபிஓசி) மத்திய அரசு அரசிதழ்பதிவு பெற்ற அதிகாரிகள் சங்கம், சஞ்சார் நிகாம் அதிகாரிகள் சங்கம், அகில இந்திய மின்சாரத்துறை அதிகாரிகள் சம்மேளனம், தேசிய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, எல்ஐசி அதிகாரிகள் சங்கம், வங்கி தொழிற்சங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தட்சினரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எஸ்.எச்.ஜி சம்மேளனம், விவசாயத்தொழிலாளர் சம்மேளனம் மற்றும் விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
அகில இந்தய வங்கி அதிகாரிகள் சம்மேளன தலைவர் ஓய். சுதர்ஷன் இந்த பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில், சாமானிய மக்களின் வாழ்க்கையில் பொதுத்துறை நிறுவனங்கள் கொண்டு வந்த மாற்றத்தை விளக்கினார். மேலும்இத்தகையபொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசு எடுத்த முயற்சிகளையும் அவர் விளக்கிப் பேசினார்.பாண்டியன் கிராம வங்கி அதிகாரியாக பணியாற்றியவரும் திரைப்பட இயக்குநருமான பாரதிகிருஷ்ணகுமார் பேசுகையில் பொதுத்துறைநிறுவனங்கள் மக்களின் சொத்து. அந்த சொத்து திருடுபோகாமல் காவலர் போல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றார்.ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாபமீட்டும் பொதுத்துறைநிறுவனங்களை அடிமாட்டுவிலைக்கு தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்க அரசு முயற்சித்துவருவதை அவர் சுட்டிக்காட்டிப்பேசினார்.இது சொந்த குழுந்தையை கொன்று அதன் தோலில் ஷூ தைத்து போட்டுக்கொள்வதற்கு சமம் அல்லது கோவிலில் உள்ள கடவுளை பொதுமக்கள் வழிபடும் போது அந்த கடவுள் சிலையையே பூசாரி திருடி விற்றால் என்னவாகும் அதுதான் இன்றைய இந்தியாவில் நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.அகிலஇந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சம்மேளனத்தின் தலைவர் டி.தாமஸ் பிராங்கோ பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்களில் பெரிய அளவில் முதலீடு செய்ய தீட்டப்பட்ட பாம்பே திட்டத்தை அவர் விளக்கினார். ஆனால் இந்த முதலீடு மெல்லமெல்லதான் பலன் தரும் என்றாலும் நீண்ட காலத்திற்கு அந்த பயன் இருக்கும் என்றார்.
சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது பிஎஸ்என்எல், ரயில்வே, மாநகரப் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தான் சிறப்பாக செயல்பட்டன என்றும் அவர் கூறினார். பொதுத்துறை நிறுவனங்கள் நடமாடும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று பணபட்டுவாடா செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே ஏழை, எளிய மக்களின் நலன்களை பாதுகாக்கமுடியும் என்பதற்கு பல சம்பங்களையும் அவர் சுட்டிக்காட்டிப்பேசினார்.எனவே பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.நிகழ்ச்சியின் முடிவில் பொதுத்துறையை பாதுகாக்க இயக்குநர் பாரதிகிருஷ்ணகுமார் தயாரித்துள்ள குறும்படம் திரையிடப்பட்டது. மாற்று ஊடகமையத்தின் கலைஞர்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகளும் வீதி நாடகங்களும் திரையிடப்பட்டன. இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் .கிருஷ்ணன் நன்றி கூறினார்.பொதுத்துறையை பாதுகாக்க வங்கி அதிகாரிகள்,ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கக்கோரி ஜன.31 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பிரச்சாரம் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 36 நாட்கள் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை விளக்கும் வீதி நாடகங்கள், குறும்படங்களுடன் பிரச்சாரம் நடைபெறவுள்ளது
தோழர்களே !மதுரை மாநகரில் 5-2-2016 அன்று மாலை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நமது தோழர்கள் பெரு வாரியாக கலந்துகொள்ள மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது... என்றும் தோழமையுடன், S. சூரியன் .D/S-BSNLEU..

உத்தப்புரம் தீண்டாமை சுவர் போல் வேண்டாம் இனி ஒன்று ...


Friday 29 January 2016

தமிழகத்தில் JAO கேடரில் 12 பேருக்கு மாற்றல் . . .

அருமைத் தோழர்களே ! தமிழகத்தில்  JAO கேடரில் 12 பேருக்கு மாற்றல் உத்தரவு தமிழ் மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது . . . அதில் நமது மதுரை SSA-க்கு 5 பேருக்கு மாற்றல் கிடைத்துள்ளது.
1. K. முத்துபாண்டி  - தூத்துக்குடி TO  மதுரை 
2. A. ரமணி                  - நாகர்கோவில் TO மதுரை 
3. N. கண்ணன்           - திருநெல்வேலி  TO மதுரை 
4. Z. A.C. அருணோதயம் - புராஜெக்ட்  TO மதுரை 
5. K. மச்சவீரன்            -    புராஜெக்ட்  TO மதுரை
--- வாழ்த்துக்களுடன், S. சூரியன் ...D/S-BSNLEU.

Thursday 28 January 2016

ஜனவரி - 28, முதன் முதலில் சென்னையில் தொலைபேசி...

வரலாற்றில் இன்று - சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த தி ஓரியண்டல்   டெலிபோன் கம்பனி சென்னை எர்ரபாலு செட்டி தெருவில் 1882ம் ஒரு தொலைபேசி நிலையத்தை துவக்கியது. அப்போது அதன் வாடிக்கையாளர்கள் 93 பேர் மட்டுமே.  இவர்கள் அனைவரும் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை சேர்ந்த பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருந்த ஆங்கிலேயர்கள்தான். அவ்வாறு உருவான தொலை பேசி நிலையத்தின் மூலம்  முதலாவது தொலைபேசி அழைப்பு கொடுக்கப்பட்டது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த சென்னை மாகாண கவர்னருக்கும் பிராட்வே யிலிருந்த Beehive  Foundry என்ற ஏற்றுமதி கம்பெனியின் முதலாளிக்கும் அந்த இணைப்பு கொடுக்கப்பட்டது.   பேசப்பட்ட நாள் ஜனவரி 28, 1882.  அதற்கு அடுத்த ஆண்டுதான் அதாவது 1983ம் ஆண்டு . இந்தியாவின் தந்தி மற்றும் தொலைபேசி சேவைகளும் அஞ்சல் சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.

29.01.2016, பணிநிறைவு காலம் சிறக்க நமது வாழ்த்துக்கள்...


Tuesday 26 January 2016

கண்ணீர் . . . அஞ்சலி . . .

தோழர்களே ! நமது திருநகர் கிளையின் முன்னணித் தோழியர்.சாந்தி TTA அவர்களின்  கணவர்  பரமேஸ்வரன் 25.01.2016 அன்று இரவு "டூ வீலர் " விபத்தில் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். கணவனை இழந்து வாடும் தோழியர். சாந்தி அவர்களின் குடும்பத்தினருக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது . 

ஜன-26, அனைவருக்கும் 67 வது குடியரசு தின வாழ்த்துக்கள்...


வருந்துகிறோம் . . .கண்ணீர் அஞ்சலி . . .

அருமைத் தோழர்களே ! நமது TNTCWU ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் ஒட்டன்சத்திரம் கிளையின் செயலர்,  க . லெட்சுமணன் நெஞ்சுவலி காரணமாக 25.01.2016 காலையில்  இறந்துவிட்டார் என்ற செய்தி நம்மை மிகவும் அதிர்சிக்கு உள்ளாக்கியது. 36 வயதே நிரம்பிய தோழர். லெட்சுமனனுக்கு  இரண்டு  சிறிய  குழந்தைகள் உள்ளனர்.  செய்தி கேட்டவுடன், மாநில சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் தகவலை தெரிவித்துவிட்டு உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த தோடு   காவல் நிலையம், அரசு மருத்துவ மனைக்கும் சென்று வேண்டிய உதவிகளை நமது BSNLEU+TNTCWU இரு  சங்கங்களும் செய்தன. தோழரை இழந்து தவிக்கும் அக் குடும்பத்திற்கு நமது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday 25 January 2016

ஜனவரி -26, மதுரை தயாரகுறது . . .

இந்தியா- தேசிய வாக்காளர் தினம் (ஜன.25) . . .

தேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி "தேசிய வாக்காளர் தினம்". ஓட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும். 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் ஓட்டு அளிக்க தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.
சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.