நெருக்கடியான நேரத்தில் பொதுமக்களுக்கு உதவும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்று அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சம்மேளன தலைவர் டி.தாமஸ் பிராங்கோ கேட்டுக் கொண்டுள்ளார்.“பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம்’’ என்ற தலைப்பில் சென்னையில் சமீபத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் (ஏஐபிஓசி) மத்திய அரசு அரசிதழ்பதிவு பெற்ற அதிகாரிகள் சங்கம், சஞ்சார் நிகாம் அதிகாரிகள் சங்கம், அகில இந்திய மின்சாரத்துறை அதிகாரிகள் சம்மேளனம், தேசிய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, எல்ஐசி அதிகாரிகள் சங்கம், வங்கி தொழிற்சங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தட்சினரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எஸ்.எச்.ஜி சம்மேளனம், விவசாயத்தொழிலாளர் சம்மேளனம் மற்றும் விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
அகில இந்தய வங்கி அதிகாரிகள் சம்மேளன தலைவர் ஓய். சுதர்ஷன் இந்த பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில், சாமானிய மக்களின் வாழ்க்கையில் பொதுத்துறை நிறுவனங்கள் கொண்டு வந்த மாற்றத்தை விளக்கினார். மேலும்இத்தகையபொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசு எடுத்த முயற்சிகளையும் அவர் விளக்கிப் பேசினார்.பாண்டியன் கிராம வங்கி அதிகாரியாக பணியாற்றியவரும் திரைப்பட இயக்குநருமான பாரதிகிருஷ்ணகுமார் பேசுகையில் பொதுத்துறைநிறுவனங்கள் மக்களின் சொத்து. அந்த சொத்து திருடுபோகாமல் காவலர் போல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றார்.ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாபமீட்டும் பொதுத்துறைநிறுவனங்களை அடிமாட்டுவிலைக்கு தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்க அரசு முயற்சித்துவருவதை அவர் சுட்டிக்காட்டிப்பேசினார்.இது சொந்த குழுந்தையை கொன்று அதன் தோலில் ஷூ தைத்து போட்டுக்கொள்வதற்கு சமம் அல்லது கோவிலில் உள்ள கடவுளை பொதுமக்கள் வழிபடும் போது அந்த கடவுள் சிலையையே பூசாரி திருடி விற்றால் என்னவாகும் அதுதான் இன்றைய இந்தியாவில் நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.அகிலஇந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சம்மேளனத்தின் தலைவர் டி.தாமஸ் பிராங்கோ பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்களில் பெரிய அளவில் முதலீடு செய்ய தீட்டப்பட்ட பாம்பே திட்டத்தை அவர் விளக்கினார். ஆனால் இந்த முதலீடு மெல்லமெல்லதான் பலன் தரும் என்றாலும் நீண்ட காலத்திற்கு அந்த பயன் இருக்கும் என்றார்.
சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது பிஎஸ்என்எல், ரயில்வே, மாநகரப் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தான் சிறப்பாக செயல்பட்டன என்றும் அவர் கூறினார். பொதுத்துறை நிறுவனங்கள் நடமாடும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று பணபட்டுவாடா செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே ஏழை, எளிய மக்களின் நலன்களை பாதுகாக்கமுடியும் என்பதற்கு பல சம்பங்களையும் அவர் சுட்டிக்காட்டிப்பேசினார்.எனவே பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.நிகழ்ச்சியின் முடிவில் பொதுத்துறையை பாதுகாக்க இயக்குநர் பாரதிகிருஷ்ணகுமார் தயாரித்துள்ள குறும்படம் திரையிடப்பட்டது. மாற்று ஊடகமையத்தின் கலைஞர்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகளும் வீதி நாடகங்களும் திரையிடப்பட்டன. இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ.கிருஷ்ணன் நன்றி கூறினார்.பொதுத்துறையை பாதுகாக்க வங்கி அதிகாரிகள்,ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கக்கோரி ஜன.31 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பிரச்சாரம் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 36 நாட்கள் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை விளக்கும் வீதி நாடகங்கள், குறும்படங்களுடன் பிரச்சாரம் நடைபெறவுள்ளது.
தோழர்களே !மதுரை மாநகரில் 5-2-2016 அன்று மாலை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நமது தோழர்கள் பெரு வாரியாக கலந்துகொள்ள மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது... என்றும் தோழமையுடன், S. சூரியன் .D/S-BSNLEU..
No comments:
Post a Comment