Thursday 31 October 2013

மதச்சார்பின்மை பாது காப்பு மாநாடு ...

மதவெறி அரசியலை முறிய டித்து மதச்சார்பின்மை மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க அணி திரள்வோம் என்று புதுதில்லியில் நடைபெற்ற மதவெறி எதிர்ப்பு மற்றும் மதச்சார்பின்மை பாது காப்பு மாநாடு அறைகூவல் விடுத் துள்ளது. 14 கட்சிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய நான்கு இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் மதவெறி எதிர்ப்பு மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு தலைநகர் புதுதில்லியில் உள்ள தல்ஹோத்ரா உள்ளரங்கில் புதனன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு வரலாற்றியல் அறிஞர் இர்பான் ஹபீப் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி வரவேற்புரை நிகழ்த்தி மாநாட்டின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.மாநாட்டுத் தீர்மானத்தை முன்மொழிந்து சமாஜ்வாதிக் கட்சி பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் உரையாற்றினார். தொடர்ந்து பீகார் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவர்களில் ஒருவருமான நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சமாஜ்வாதிக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், அதிமுக நாடாளுமன்றக்குழு தலைவர் தம்பிதுரை, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, குடியரசுக் கட்சித் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், பிஜூ ஜனதா தள தலைவர் ஜெய் பாண்டா, ஜார்க்கண்ட் விகாஸ் மஞ்ச் தலைவரும் முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி, அசாம் மாநில முன்னாள் முதல்வரும் அசாம் கணபரிஷத் தலைவருமான பிரபு லால் மஹந்தா, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் .பி. பரதன், பார்வர்டு பிளாக் தலை வர் தேவபிரதா பிஸ்வாஸ், பஞ் சாப் மக்கள் கட்சித் தலைவர் பாதல், ஆர்எஸ்பி தலைவர் சிபி கோஸ்வாமி, தேசியவாத காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.டி.திரிபாதி உள்ளிட்ட தலை வர்கள் உரையாற்றினர் வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது நாட்டின் அடிநாதமாக உள்ளது. நாம் அனை வரும் இந்தியர்கள் என்றஉணர்வுடன் இந்தஒற்றுமை உருவாக்கப்பட் டுள்ளது. வகுப்புவாத சக்திகளால் மக்கள் ஒற்று மைக்கும் நாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் சேர்ந்து இந்தியாவின் விடுதலைக்காக போராடினர். ஆனால் மத வெறி சிந்தனை கொண்ட வகுப்புவாத அமைப்புகள் இதிலிருந்து விலகி நின்றதோடு மக்களை பிளவு படுத்த முயன்றனர். வகுப்புவாத சிந்தனையை நிராகரித்த மக்கள், இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.தற்போது வகுப்புவாத சக்திகள் மீண்டும் ஒரு முறை வகுப்புவாதப் பிரச்சனைகளை கிளறிவிட்டு வகுப்புவாதப் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு மத வெறிப் பிரச்சாரம் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதன் விளைவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாத வன்செயல்கள் நடந்துள் ளன. முசாபர் நகரில் நடந்த வன்செயல்கள் இதற்கு வெளிப்படையான உதாரணமாகும். அனைத்து வகை யான வகுப்புவாத சக்தி களையும் முறியடித்து மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவது அவசியமாகும்.வகுப்புவாத சக்திகளை முறியடிக்கவும் சமூக நல்லிணக்கத்தை பாது காக்கவும் நம்முடைய பன்முகப் பண்பாட்டைப் பாதுகாக்கவும் மக்கள்ஒற்றுமையை பலப்படுத்த வும் அனைத்து மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகளும் தங்களது முயற்சி களை பலப்படுத்த வேண் டும் என்று இந்த மாநாடு அறைகூவல் விடுக்கிறது.