Wednesday, 23 October 2013

எல்லைப்பகுதியில் பதற்றம் ஏற்படுவதை தடுக்க...

எல்லையில் மோதல் இல்லை : இந்தியா-சீனா ஒப்பந்தம்
இந்தியா-சீனா இடை யே எல்லை ஒப்பந்தமும் இதர 8 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் பயணமாக சீனாசென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அந்தநாட்டின் உயர் தலைவர்களை பிரதமர் சந்தித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.இந்த நிலையில் புதன்கிழமையன்று, எல்லைப்பகுதியில் பதற்றம் ஏற்படுவதை தடுக்கவும் ராணுவ மோதல்களை தடுக்கவும் அனைத்து அம்சங்களைக்கொண்ட ஒப்பந்தம் இரு நாடுகள் இடையே கையெழுத்தானது.இதனைத்தொடர்ந்து எல்லைக்கட்டுபாடு கோடு பகுதியில்(எல்..சி) இரு தரப்பினரும் ராணுவத்தாக்குதலை மேற்கொள்ளமாட்டார்கள். ரோந்து செல்லும் போது எந்த விததாக்குதலும் இல்லாமல் அமைதி நிலை காணப்படும்.பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீனப்பிரதமர் லீ கேகியாங் ஆகியோர் நடத்திய விரிவான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஆண்டு ஏப்ரல்மாதம் லடாக் பகுதியில் டெஸ்பாங் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் வந்ததைத்தொடர்ந்து இரு தரப்பு உறவில் சிறு பிணக்குகாணப்பட்டதாக கூறப்பட்டது. இதுபோன்ற நிலையை சரி செய்ய இரு நாட்டுத்தலைவர்களும் எல்லைப் பாதுகாப்பு ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.எல்லை ஒப்பந்தம் உள்படமொத்தம் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. எல்லைதாண்டி ஓடும் ஆறுகள் தொடர்பான ஒரு ஒப்பந்தமும் இந்தியா-சீனாஇடையே கையெழுத்தானது.மன்மோகன் சிங்கும் லீ கே கியாங்கும் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு தலைவர்களும் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தற்போது சந்தித்துள்ளனர். பேச்சு வார்த்தை பலன் அளிக்கக் கூடியதாக இருந்தது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.விசா நடைமுறையில் கட்டுப்பாடுகளை நீக்குதல் தொடர்பான ஒப்பந்தம் ஏற்படவில்லை. விசா ஒப்பந்தம் தொடர்பாக சீனா தரப்பில் தீவிரம் காட்டியபோதும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு தலைவர்களும் ஊடகத்தினரிடம் பேசுகையில், இந்த ஒரு ஆண்டில் மட்டும் நாங்கள் இரு முறை சந்தித்துள்ளோம். கடந்த 1954ம்ஆண்டு இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் சூ யென்லாய் இது போன்றுசந்தித்தனர். தற்போது இரு நாட்டு தலைவர்களும் ஒரே ஆண்டில் சந்தித்து உறவில் புதிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம் என்றனர்.முன்னதாக 4 பக்க எல்லை ஒப்பந்தத்தில் பாதுகாப்புச்செயலாளர் ஆர். கே.மாத்தூர் மற்றும் சீன மக்கள் ராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சன் ஜியான் கவா கை யெழுத்திட்டனர். 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீள எல்லைப்பகுதியில் அமைதி நிலவ இந்தஒப்பந்தம் கையெழுத்தானது.பத்திரிகையாளர் களு டன் பிரதமர் மன்மோகன் சிங் உரையாடுகையில், இந்தியா-சீனா உறவு அடித் தளத்திற்காக எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் பதற்றமில்லா நிலையை ஏற்படுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டு உள்ளன. இது பரஸ்பரமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வு ஆகும் என்றார்.மேலும் சுதந்திரமான வெளியுறவுக் கொள் கையை இந்தியா மேற் கொள்ளும்.இந்திய- சீன உறவு என்றும் தொடரும் இருநாடுகளுக்குமான பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்கும், பொதுநலன் களை விரிவாக்கவும் புரிந்துணர்வை ஆழப்படுத்தவும் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கஇருநாடுகளும் முனைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தார்.அதோடு இருநாடுகளும் அனைத்துமட்டங்களிலும் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் நம்பகத்தன்மையை பெருக்கவும் முடிவெடுத்து ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.

No comments: