Friday, 11 October 2013

பண்டிகை என்று வந்துவிட்டால் முதல் ஞாபகம் . . .

 வாளை வீசி விளையாடு என்தோழா...
          பண்டிகை என்று வந்துவிட்டால் முதலில் ஞாபகம்  வருவது போனஸ்அதற்குப்பின் ஞாபகம்  வருவது? அங்கீகார  தேர்தல் வந்துவிட்டால் நம் BSNLEU மீது வசை பாடுவதற்கு அதிகம் பயன்பட்ட வார்த்தை போனஸ் என்ற சிலரின் செயல்பாடுBSNLEU அங்கீகார சங்கமாய் அவர்கள் இருந்ததால்தான் போனஸ் இல்லை. நாங்கள் NFTE மட்டும் இருந்தால் இப்படி நடந்திற்குமா.? என்ற அங்கலாய்பு 6th அங்கீகார தேர்தலுக்கு பின்பும் தொடர்வதை என்னவென்பது? பிரச்சனைகளை பேசித்தீர்க்க, தேவை என்றால் போராட்டகளம் புக   அங்கீகார  வாளைக் கொடுத்த பிறகும் குதர்க்கப் பேச்சு எதற்கு? போனஸ் வேண்டாம் என எந்த சங்கமாவது  உடன்பாடு போடுமா? அடிப்படை நாகரிகம் தெரியாத சிலர் கூச்சலிடுவது NFTE வெறும் தேர்தல் பலா  பலன்களை   எண்ணியே! 
          லாபத்துடன் போனசை இணைப்பதை நமது BSNLEU சங்கம் கடுமையாக எதிர்த்தது. அன்றைய நமது BSNLEU பொது செயலர் தோழர்   VAN.    நம்பூதிரி அவர்கள் 06-07-2005 தேதியிட்டு    குப்தா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் BSNL     நிறுவனத்தின் லாபம் என்பது ADC, USO நிதி, லைசென்ஸ்   கட்டணம், அரசின் சமூக தேவையை நிறைவேற்ற செயல்படும் BSNLக்கு   அரசின் நிதி உதவி போன்ற அரசின் கொள்கைகளுடன்  இனைக்கபட்டுள்ளது. எனவே நமது BSNL நிறுவனத்தில் லாபம் இல்லை என்றால்     போனஸ் இல்லை என்ற சரத்து நீக்கப்படவேண்டும். இத்திட்டம் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை தானே ஒழிய, லாபத்துடன் இணைந்த ஊக்கத்தொகை அல்ல என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
    போனஸ் மறுக்கப்பட்ட போதெல்லாம் நமது BSNLEU சங்கம் போராடி இருக்கிறது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்று நம் BSNLEU சங்கத் தோழர்கள் சம்பளமும் இழந்திருக்கிறார்கள். போனஸ் சம்பந்தமாக இதுவரை நமது BSNLEU சங்கம் எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை.... வாளை வீசி விளையாடு என்தோழா...   

No comments: