Wednesday 9 October 2013

அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ..

 தெலங்கானாவுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்களுக்கும் ஆந்திரா அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், மின்சாரம், ரயில், தொலைதொடர்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 
முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், காலவரையற்ற போராட்டத்தை தொடரப் போவதாக மின்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனால், சீமாந்திரா உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பல ரயில் நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. 
இதனிடையே, விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஜயநகரம் பகுதியில் முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுள்ளது. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் இன்று ஆந்திரா ஆளுநரைச் சந்தித்துப் பேசினர். அதே நேரத்தில், தெலங்கானா அமைப்பது தொடர்பான மத்திய அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெறவுள்ளது. உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அமைச்சர்களது ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கவில்லை என்று, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நெருக்கடி காரணமாகவே ஆந்திராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா கடிதம் கொடுத்ததாக நாராயணசாமி தெரிவித்தார்.தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் 3ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனிடையே ஒருங்கிணைந்த ஆந்திராவே தேவை என்பதை வலியுறுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஐதராபாத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கிறார். இதனிடையே, விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். விஜயநகரத்தில் முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ளது.

No comments: